கன்னியில் செவ்வாய்! ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் குழப்பம்... பலன்களும் பரிகாரங்களும்!
Mars Transit August 2023: ஆற்றல் மற்றும் தைரியத்தின் அடையாளமாகக் கருதப்படும் செவ்வாய், ஆகஸ்ட் 18, 2023 அன்று கன்னி ராசியில் பயணிக்கப் போகிறது.
Effect of Mangal Gochar 2023: வேதங்களின்படி, செவ்வாய் கிரகம் மங்கள் என்றும் அழைக்கப்படுகின்றது. மங்கள் என்ற வார்த்தையின் அர்த்தம் மங்களகரமானது. வேத ஜோதிட சாஸ்திரத்தில், சிவப்பு கிரகமான செவ்வாய் 'பூமி புத்ரன்' என்றும் அழைக்கப்படுகிறது. சனாதன தர்மத்தில், வெவ்வேறு தெய்வங்களுடன் செவ்வாய் தொடர்பு கூறப்பட்டுள்ளது. வட இந்தியாவில், செவ்வாய் பகவான் அனுமனுக்கு இணையாக கருதப்படுகிறது. யாருடைய ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருக்கிறார்களோ, அவர்கள் தைரியசாலிகள். அதே சமயம், குறுக்கு வழியில் இல்லாமல், நேர்மையாக முன்னேற விரும்பும் நபர்களாக இருப்பார்கள். இப்போது செவ்வாய் ஆகஸ்ட் 18-ம் தேதி கன்னி ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தால் அனைத்து ராசிக்காரர்களும் பலன் அடைவார்கள் என்றாலும் 3 ராசிக்காரர்கள் பணத்திலும் ஆரோக்கியத்திலும் சரிவை சந்திக்க வேண்டி வரும். அந்த ராசிகள் என்ன, அதன் அசுப பலன்களைத் தவிர்க்க என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்.
கன்னி ராசியில் செவ்வாய்ப் பெயர்ச்சி பலன்கள் ( Effects of Mars transit in Virgo)
மிதுன ராசி
செவ்வாயின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தராது. இதனால் கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படும். மக்கள் தங்கள் துணையின் செயல்களை சந்தேகிக்கலாம். இது இருவருக்கு இடையிலும் நிலவும் சண்டையை அதிகரிக்கலாம். திடீரென்று சில பெரிய செலவுகள் வரலாம், அதற்காக கடன் வாங்க வேண்டியிருக்கும். வருமானத்துடன் ஒப்பிடும் போது வருமான ஆதாரங்கள் குறைவாக இருக்கும். இதன் காரணமாக கடனை திருப்பிச் செலுத்துவது கடினமாக இருக்கலாம். உத்தியோகத்தில் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். உடல் நலன் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். பாதகமான விளைவுகளைத் தவிர்க்க, ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் அனுமனை வணங்கி, இனிப்புகளை பிரசாதமாக அர்ப்பணித்து, அனைவருக்கும் வழங்குங்கள்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களின் மொழி நடையில் மாற்றம் வரலாம். அவரது மனநிலை ஆக்ரோஷமாகவும், அவரது மொழி கடுமையாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், அறிமுகமானவர்களுடனான உறவில் ஒரு விரிசல் இருக்கும். எனவே, யாரிடமும் பேசும் போது, உங்கள் வார்த்தைகளை கவனமாக தேஎர்ந்தெடுத்து, எச்சரிக்கையுடன் பேசுங்கள். கர்வம் கொள்ளாதீர்கள். உங்கள் தாயின் உடல் நிலை மோசமடையக்கூடும், எனவே அவரது கவனிப்பில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். பயணம் அல்லது உடல் நலக் குறைவு காரணமாக செலவுகள் அதிகரிக்கும். இந்த மோசமான கட்டத்தில் சுந்தர் காண்டத்தை வீட்டில் தொடர்ந்து படித்து வந்தால், குழப்பங்களும் பிரச்சனைகளும் நீங்கி நிம்மதி பெறலாம்.
மீன ராசி
செவ்வாயின் சஞ்சாரம் காரணமாக, மீன ராசிகள் வேலையில் பாதுகாப்பற்ற உணர்வை உணர்வீர்கள். இது உங்கள் மனதின் தோன்றும் ஒரு அச்ச உணர்வாக மட்டுமே இருக்கும், உண்மையில் அது போன்ற எதுவும் இல்லை. அதானல் சஞ்சலத்தை விடுங்கள். உங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடலாம். நிறைய முயற்சிகள் செய்தாலும், உங்கள் வருமான ஆதாரங்களை அதிகரிக்க முடியாது. அதே நேரத்தில் செலவுகள் முன்பை விட அதிகமாக இருக்கும். நிதிக்காக போராட வேண்டியிருக்கும். உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு தொண்டை தொடர்பான பிரச்சனை இருக்கலாம். நிவாரணம் பெற, கோவிலில் கடலை உருண்டை தயாரித்து, அந்த இனிப்புகளை பிரசாதமாக வழங்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அற்புதமான வாழ்க்கை, அமோக பலன்கள்: சுக்கிரன் உதயத்தால் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ