சனி வக்ர நிறைவு 2023: நீதியின் கடவுளாக கருதப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் பாரபட்சம் பாராமல் ஒருவரில் செயல்களுக்கு ஏற்ப பலனை வழங்குகிறார். சனி மெதுவாக நகரும் கிரகம். இது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டுகள் ஆகும். சனி ஒரு சுழற்சியை முடிக்க சுமார் 30 ஆண்டுகள் ஆகும். இந்நிலையில் கர்ம காரகன் என அழைக்கப்படக்கூடிய சனி பகவான் கடந்த ஜூன் 17 ஆம் தேதி 2023 முதல் வக்ர பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகிறார். சனியின் வக்ர காலம் ஜோதிடக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் சனி வக்ர நிலையில் இருக்கும்போது மிகவும் சக்திவாய்ந்ததாக மாறும் மற்றும் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்கள் மீதும் தெரியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனியின் வக்ர பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அந்த வகையில் கும்ப ராசியில் சனி வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். மேலும் மீண்டும் இந்த ஆண்டு சனி பழைய நிலையில் நேர்கதியில் பயணிக்க உள்ளார், இதனால் ​​எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக் கதவுகள் திறக்கும் என்பதை தெரிந்து கொள்வோம். இந்த நேரத்தில் சில ராசிக்காரர்கள் பல்வேறு வகையில் இருந்த கஷ்டங்கள் நீங்கி நிம்மதி பெருமூச்சு விடலாம்...


மேலும் படிக்க | ஜூலையில் 5 அபூர்வ யோகங்கள்! இனி ‘இந்த’ ராசிகளின் காட்டில் ‘அதிர்ஷ்ட மழை’ கொட்டும்!


சனி வக்ர நிவர்த்தி தேதி
பஞ்சாங்கத்தின் கூற்றுப்படி, அனைத்து 9 கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகமான சனி வருகிற நவம்பர் 4 ஆம் தேதி 2023, சனிக்கிழமை அதிகாலை 12.31 மணிக்கு நகரும். சனி சுமார் 139 நாட்களுக்கு வக்ர நிலையில் இருக்கும். அதன்பின் 2024 ஜூன் 30 வரை சனி கும்ப ராசியில் நேர் பாதையில் பயணித்து வருவார். ஒரு கிரகம் ஒரு ராசியில் இருக்கும் போது நேர் பாதையில் நகரும் போது, ​​அதை வக்ர நிவர்த்தி என்று அழைப்பார்கள்.


சனி வக்ர பெயர்ச்சி 2023 இல் இந்த ராசிக்காரர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்
சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் இருக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், சனியின் வக்ர பெயர்ச்சி 5 ராசிக்காரர்களின் (கடகம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம்) வாழ்வில் பூகம்பத்தை வரவழைப்பார், அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ராசிக்காரர்கள் வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சனி பகவானை மகிழ்விக்கவும், அவரது கோபத்தைத் தவிர்க்கவும், சனிக்கிழமையன்று சனிபகவானுக்கு கடுகு எண்ணெயை தானம் செய்யவும், அத்தடன் சனிக் கோவிலில் கடுகு எண்ணெய் தீபத்தை ஏற்றவும்.


சனி வக்ர நிவர்த்தி 2023 இந்த ராசிக்காரர்களுக்கு சுபப்பலனைத் தருவார்
பொதுவாக ஒரு கிரகம் நேர் பாதையில் பெயர்ச்சியும் போது அது சில ராசிக்காரர்களுக்கு சுப பலனைத் தரக்கக்கூடும். அந்த வகையில் நபம்பர் 4 ஆம் தேதி அதிகாலை 12.31 மணி முதல் சனி கிரகம் வக்ர நிவர்த்தி அடைகிறது, இத்தகைய சூழ்நிலையில் துலாம், மிதுனம், தனுசு, ரிஷபம் ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பயனடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வாழ்க்கையில் முன்னேற்ற பாதைகள் திறக்கப்படும். வியாபாரத்தில் உயர்வு காணப்படும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வக்ர நிலையில் சனி, ராகு, கேது: 3 ராசிகளுக்கு பொற்காலம்.. திகட்ட திகட்ட மகிழ்ச்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ