குரு பரணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி 2023: குரு பகவான் பிருஹஸ்பதி வருடத்திற்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். 2023 ஆம் ஆண்டில், குரு கிரகம் தனது ராசியை கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பெயர்ச்சி அடைந்தார். வியாழன் தற்போது மேஷ ராசியில் இருப்பதால் மே 1, 2024 வரை மேஷ ராசியில் தான் இருப்பார். மறுபுறம் சமீபத்தில், ஜூன் 21, ஆம் தேதி 2023 அன்று, குரு நட்சத்திரத்தை மாற்றி பரணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்தார். பிறகு 27 நவம்பர் 2023க்குள், குரு பரணி நட்சத்திரத்தை விட்டு வெளியேறி அஸ்வினி நட்சத்திரத்தின் முதல் கட்டத்தில் பெயர்ச்சி அடைவார். இப்படி நவம்பர் 27 வரை சுமார் 150 நாட்கள் குரு பரணி நட்சத்திரத்தில் இருப்பது 12 ராசிக்காரர்களுக்கும் சுப, அசுப பலன்களைத் தரும். மறுபுறம், குருவின் நட்சத்திர மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தைத் தரும் மற்றும் நிறைய பணத்தை கொடுக்கும். எனவே இந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் எவை என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர மாற்றத்தின் சுப பலன் கிடைக்கும்


மேஷம்: குரு நட்சத்திர மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். குருவின் நட்சத்திர மாற்றத்தால் மேஷ ராசியில் குரு-ராகு இணைவதால் உருவான குரு சண்டாள யோகம் தற்போது முடிவடைந்துள்ளதால் பழைய பிரச்சனைகளும் தீர்வுக்கு வரும். மேஷ ராசிக்காரர்களின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமண கைக்கூடி வரும். மேஷ ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். ஒரு பெரிய ஒப்பந்தத்தை பெறலாம். இந்த சுற்றுப்பயணத்தின் போது கணிசமான பண ஆதாயம் இருக்கும், அதன் காரணமாக பொருளாதார நிலை வலுப்பெறும்.


மேலும் படிக்க | மிதுனத்தில் புதன் பெயர்ச்சி... பணத்தில் மிதக்கப்போகும் இந்த 5 ராசிகள்!


மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திர மாற்றம் பலவித நன்மைகளைத் தரும். குறிப்பாக வணிக வகுப்பினர் பலன் அடைவார்கள். நிறைய பணம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். புதிய நபர்களின் சந்திப்பு நன்மையைத் தரும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு இதுவே நல்ல நேரம். இதன் போது இந்த ராசிகளுக்கு திடீரென பணம் கிடைக்கும்..


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர மாற்றம் சுப பலன்களைத் தரும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் படிபடியாக நடக்க ஆரம்பிக்கும். நிறைய பணம் கிடைக்கும். புதிய மூலங்களிலிருந்து பணம் வரும், மேலும் வருமானமும் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வணிக வகுப்பினருக்கு நேரம் மிகவும் சாதகமானது, கடக ராசிக்காரர்கள் இரவும் பகலும் இரட்டிப்பு முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு பற்றிய நல்ல செய்தி கிடைக்கும். வருமானம் பெருகும், வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த நல்ல வாய்ப்புகள் பெறுவார்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ராகு இந்த ராசிக்காரர்களிடம் கருணை காட்டுவதால் பூர்வீக வீடு செல்வத்தால் நிரம்பும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ