சனி வக்ர பெயர்ச்சியின் பலன்கள் எந்த ராசிகளுக்கு கிடைக்கும்: கிரகங்களின் நீதிபதியும், கர்மவினை அளிப்பவருமான சனி தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் சஞ்சரித்து வருகிறார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பத்தில் சனி பெயர்ந்துள்ளார். இதன் போது சனி கும்பம், மகரம், மீனம் ஆகிய ராசிகளை ஏழரை சனி பாதிக்கிறது மற்றும் கடகம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்கள் சனி திசையின் தாக்கத்தை அனுபவிக்கிறார்கள்.  இதனிடையே சனி கடந்த ஜூன் 17 ஆம் தேதி முதல் வக்ர நிலையில் நகரத் தொடங்கி, வருகிற நவம்பர் 4, 2023 ஆம் தேதி அன்று மீண்டும் சனி வக்ர நிவர்த்தி அடைவார். அது வரை சனி கிரகம் இதே நிலையில் தான் பயணித்து வரும். பொதுவாக இந்து சாஸ்திரங்களின்படி, சனியின் இந்த பிற்போக்கு இயக்கம் கும்ப ராசியில் சுமார் 139 நாட்களுக்கு இருக்கும் என்பது கூறப்படுகிறது. அதேபோல் சனியின் வக்ர இயக்கம் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். எனவே தற்போது சனியின் வக்ர பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வரபிரசாதமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி பகவான் தற்போது கும்ப ராசியில் இருக்கிறார். இந்த வக்ரப் பெயர்ச்சியினால் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே விரிவாக காண்போம்.


ரிஷப ராசி (Taurus Zodiac Sign): ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் தற்போதைய வக்ர பெயர்ச்சி நிலை சாதகமான பலனைத் தரும். இந்த காலகட்டத்தில், உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் மற்றும் தொழில் மற்றும் வியாபாரம் இரண்டிலும் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படலாம். ஆரோக்கிய நிலை மேம்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடினமாக உழைத்து பலன்கள் கிடைக்காமல் இருந்தாலும் தற்போது அதன் பலன்கள் இரட்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்.


மேலும் படிக்க | ஜாக்பாட் லாபம்... அமோக வெற்றி: செவ்வாய் பெயர்ச்சியால் இந்த ராசிகளுகு அட்டக்காசமான நற்பலன்கள்


சிம்ம ராசி (Leo Zodiac Sign): சிம்ம ராசிக்காரர்களும் சனியின் நேரடி சஞ்சாரத்தால் பலன் அடைவார்கள். பொருள் வசதிகளும் வளங்களும் பெருகும், இது பொருள் நல்வாழ்வை அதிகரிக்கும். திருமண வாழ்வில் இருந்த சவால்கள் தீர்க்கப்பட்டு நிதி வளர்ச்சி எதிர்பார்க்கப்படும். சனியின் தாக்கத்தால் சட்ட விஷயங்களிலும் லாபம் கிடைக்கும். நீங்கள் பணம் சம்பாதிக்க பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் செய்ய நினைத்து முடங்கிக் கிடந்த விஷயங்களை செய்து முடிக்க வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நல்ல ஒப்பந்தங்கள் உங்களுக்கு கிடைக்கும்.


கும்ப ராசி (Aquarius Zodiac Sign): கும்ப ராசிக்காரர்கள் கும்ப ராசியில் சனிப்பெயர்ச்சியால் மிகுந்த நன்மை அடைவார்கள். சனி இந்த ராசிக்காரர்களுக்கு ஷஷ ராஜயோகத்தை உருவாக்குகிறது, இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். தொழில் முயற்சிகள் மற்றும் கூட்டு முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். இந்த காலகட்டத்தில், நீங்கள் எல்லா துறைகளிலும் இனிமையான முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் வருமானத்தைச் சேமிக்க நல்ல சூழல் உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் பணியிடத்திலும், குடும்பத்திலும் நடக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கன்னியில் செவ்வாய்! ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் குழப்பம்... பலன்களும் பரிகாரங்களும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ