Weekly Horoscope: நவம்பர் 4ம் தேதியுடன் துவங்கும் வாரத்தில், தனுசு ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் நடைபெறும் நிலையில், மேஷம், துலாம் உள்ளிட்ட 7 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான வாரமாக இருக்கும். மீதமுள்ள 5 ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும் என ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம் வார ராசிபலன் (Aries Weekly Horoscope)


மேஷ ராசியினருக்கு இந்த வாரம் பணம் வருவதற்கான அறிகுறிகள் உள்ளன., உங்கள் பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்பால் நீங்கள் வெற்றியை அடைய முடியும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துங்கள், இல்லையெனில் அது உறவுகளை கெடுக்கும். வாரத்தின் நடுப்பகுதி (நவம்பர் 8 மற்றும் 9) எந்தவொரு புதிய வேலையைத் தொடங்குவதற்கும் சாதகமான காலமாக இருக்கும். தினமும் சூரிய பகவானை வணங்குவது பலன் தரும். செவ்வாய்கிழமை சிறப்பு வழிபாடு செய்யுங்கள்.


ரிஷபம் வார ராசிபலன் (Taurus Weekly Horoscope)


ரிஷப ராசியிருக்கு  பணியிடத்தில் சவால்களை சந்திக்க நேரிடலாம். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் பொறுமையாக இருங்கள். வயிறு தொடர்பான பிரச்சனைகளுடன் போராடிக் கொண்டிருப்பவர்கள் உடல் நிலையில் முன்னேற்றம் காணலாம். மன அழுத்தம் குறையும்., ஆனால் நவம்பர் 4 அன்று உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. தினமும் சிறிது நேரம் தியானத்தில் செலவிடுங்கள். பகவான் அஹனுமனை வழிபடுவது சங்கடங்களை போக்கும்.


மிதுனம் வார ராசிபலன் (Gemini Weekly Horoscope)


மிதுன ராயினருக்கு, பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும், மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வாய்ப்புகள் வரலாம். நவம்பர் 4 அன்று உங்கள் எதிரிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருந்து அவர்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள். நவம்பர் 5 முதல் 7 வரை நிதி மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த வாரம், கோவிலுக்குச் சென்று அன்னதானம் செய்வது பலன் கொடுக்கும்.


கடகம் வார ராசிபலன் (Cancer Weekly Horoscope)


கடக ராயினர் இந்த வாரம், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எச்சரிக்கையாக இருந்தால் பிரச்சனைகளை தவிர்த்திடலாம்.  ஆடம்பரங்கள் அதிகரிக்கும். பணம் வருவதற்கான அறிகுறி உள்ளது. இருப்பினும் உங்கள் பக்கத்தில் அதிர்ஷ்டம் சற்று குறைவாகவே இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் (நவம்பர் 8 மற்றும் 9) முக்கியமான வேலை நிறைவடையும். தினமும் உளுந்து தானம் செய்து, சனிக்கிழமை சனி கோவிலில் வழிபடவும்.


சிம்மம் வார ராசிபலன் (Leo Weekly Horoscope)


சிம்ம ராசியினர் இந்த வாரம் எதிரிகளை வென்று சாதிக்க முடியும். மேலும் பணியிடத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் சுமுகமாக இருக்கும். உங்கள் தாயாரின் உடல்நிலையில் சற்று கவனமாக இருக்கவும். நவம்பர் 4 மற்றும் 10 ஆகிய தேதிகள் உங்களுக்கு சாதகமானவை. இந்த நாட்களில் நீங்கள் மகிழ்ச்சியையும் செழிப்பையும் அடையலாம். தினமும் பசுவிற்கு தீவனம் அளித்து ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை செய்யவும்.


கன்னி வார ராசிபலன் (Virgo Weekly Horoscope)


கன்னி ராசிகளுக்கு இந்த வாரத்தில் பணம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்ப்டலம். குறிப்பாக நவம்பர் 4 அன்று உடன்பிறந்தவர்களுடன் சச்சரவுகளைத் தவிர்க்கவும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. இந்த வாரம், நவம்பர் 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகள் புதிய வேலைகளுக்கு உகந்தவை. கருப்பு நாய்க்கு தினமும் உணவளிக்கவும். புதன்கிழமை சிறப்பு வழிபாடு செய்யுங்கள்.


துலாம் வார ராசிபலன் (Libra Weekly Horoscope)


துலாம் ராசியினருக்கு இந்த வாரம் மகிழ்ச்சியை கொடுக்கும் வாரமாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் சாதாரணமாக இருக்கும். இருப்பினும் குழந்தைகளிடமிருந்து அதிக ஒத்துழைப்பை எதிர்பார்க்க வேண்டாம். நவம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகள் எந்தவொரு வேலையையும் தொடங்குவதற்கு சாதகமானவை, அதே நேரத்தில் நவம்பர் 4 ஆம் தேதி நிதி ஆதாயங்கள் ஏற்படலாம். இந்த வாரம் செவ்வாய் கிழமை அனுமன் சாலிசா பாராயணம் செய்யவும்.


மேலும் படிக்க | கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனத்திற்கு... செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை!


விருச்சிகம் வார ராசிபலன் (Scorpio Weekly Horoscope)


விருச்சிக ராசியினருக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் குறைவில்லாமல் இருக்கும் பணியிடத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். எனினும் செலவுகள் அதிகரிக்கும். நவம்பர் 10-ஆம் தேதி இந்த வாரம் நன்மை தரும். தினமும் ருத்ராஷ்டகம் பாராயணம் செய்து ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு செய்யுங்கள்.


தனுசு வார ராசிபலன் (Sagittarius Weekly Horoscope)


தனுசு ராசியினருக்கு நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன.  திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடி வர வாய்ப்பு உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நவம்பர் 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் முக்கியமான வேலைகளைச் செய்யுங்கள். தினமும் காயத்ரி மந்திரத்தை ஜபித்து, வியாழன் அன்று பிரார்த்தனை செய்யுங்கள்.


மகரம் வார ராசிபலன் (Capricorn Weekly Horoscope)


மகர ராசியினருக்கு இந்த வாரம் பணியிடத்தில் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். தடை பட பணிகள் நிறைவேறும். நவம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நல்ல பலன்களைப் பெறலாம். தினமும் சிவபெருமானுக்கு பால், பன்னீர் அபிஷேகம் செய்து, சனிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்யவும்.


கும்பம் வார ராசிபலன் (Aquarius Weekly Horoscope)


கும்ப ராசிகளுக்கு இந்த வாரம் உங்கள் வசதிகளும் வாய்ப்புகளும் அதிகரிக்கும். உங்கள் செலவுகள் குறையும். பணவரவு இயல்பாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். இந்த வாரம், நவம்பர் 10 ஆம் தேதி உங்களுக்கு சாதகமாக இருக்கலாம், ஆனால் நவம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் வேலையில் கவனமாக இருக்கவும். தினமும் விநாயகப் பெருமானை வணங்கி, புதன்கிழமை சிறப்பு கவனம் செலுத்துங்கள்.


மீனம் வார ராசிபலன் (Pisces Weekly Horoscope)


மீன ராசியினருக்கு நிதி ஆதாயம் மற்றும் உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் சுமுகமாக இருக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மற்றும் பணியிடத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். இந்த வாரம், நவம்பர் 5, 6 மற்றும் 7 ஆகிய நாட்கள் மிகவும் சாதகமாக இருக்கும். தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வியாழன் அன்று பூஜை செய்வது பலன் தரும்.


பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.... பணம், பதவி, புகழ் அனைத்தும் கிட்டும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ