அள்ளிக் கொடுப்பார் ராகு - கேது! இவர்களுக்கு குரோதி வருடம் அட்டகாசமாய் இருக்கும்
Rahu Kethu Transit Effects: ராகு கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்பார்கள். ஒருவருக்கு மறைமுகமாக வரும் திடீர் அதிர்ஷ்டம் பணவரவு யோகங்கள் எல்லாமே ராகுவினால் ஏற்படக்கூடியதுதான். கேது ஆன்மீக வழியில் நாட்டத்தை ஏற்படுத்துவார்.
தமிழ் புத்தாண்டு குரோதி ஆண்டு, சுமார் ஒரு மாத காலத்தில் மலரப்போகிறது. இந்த தமிழ் ஆண்டில் அனைவருக்குமான ராசிபலன்கள் பொதுவானதாக இருக்கும். ஆனால், நிழல் கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு கேதுவின் இயக்கம் யார் வாழ்க்கையில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்துக் கொள்வோம். தினசரி வாழ்க்கையில் நமது செயல்பாடுகளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கும் ராகு கேதுவின் நிலை, யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தை கொண்டு வரப்போகிறது என்பதை அறிந்து கொள்வோம்.
ராகு கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்பார்கள். ஒருவருக்கு மறைமுகமாக வரும் திடீர் அதிர்ஷ்டம் பணவரவு யோகங்கள் எல்லாமே ராகுவினால் ஏற்படக்கூடியதுதான். கேது ஆன்மீக வழியில் நாட்டத்தை ஏற்படுத்துவார். மீன ராசியில் சஞ்சரிக்கும் ராகுவும் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் கேதுவும் குரோதி ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு அள்ளித்தரப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
மேஷ ராசி - குரோதி ஆண்டு ராகு கேது சஞ்சார பலன்கள்
மேஷ ராசியினர் (Aries Zodiac Sign) கேதுவின் அருளால், வேலையில் தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை காண்பார்கள். அனைத்து துறையிலும் வெற்றி பெறுவார்கள். கடின உழைப்பிற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். மன உறுதி மற்றும் தைரியம் காரணமாக நினைத்த காரியத்தை சாதிப்பார்கள். புதிய வருமான ஆதாரங்கள் மூலம். அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் வரும். தடைபட்ட காரியம் அனைத்தும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிறைவேறும். இனி வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் நடக்கும். பணவரவு உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும்.
மேலும் படிக்க | நவ பஞ்சம யோகம்... அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் சில ராசிகள்
சிம்ம ராசி - குரோதி ஆண்டு ராகு கேது சஞ்சார பலன்கள்
சிம்ம ராசியினர் (Leo Zodiac Sign) கேதுவின் அருளால், வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்பார்கள். ஆன்மீகத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். முக்கிய ஒப்பந்தங்கள் மூலம் வருமான ஆதாரம் பெருகும். நண்பர்கள் மத்தியில் உங்கள் புகழ் கூடும். புத்துணர்ச்சியும், புதிய முயற்சிகளில் வெற்றியையும் கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் உங்கள் புகழ் கூடும். புத்துணர்ச்சியும், புதிய முயற்சிகளில் வெற்றியையும் கிடைக்கும்.
விருச்சிக ராசி - குரோதி ஆண்டு ராகு கேது சஞ்சார பலன்கள்
விருச்சிக ராசியினருக்கு (Scorpio Zodiac Sign) கேதுவின் சஞ்சாரம், வாழ்க்கையில் எண்ணற்ற செல்வத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வெற்றியை காண்பீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வீடு வந்து சேரும். வெளிநாடு செல்லும் கனவு நினைவாகும் வாய்ப்பு உண்டு. வெளிநாட்டில் வேலை செய்ய நினைப்பவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் நிதிநிலை சிறப்பாக இருக்கும். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்தது வீன் போகாது. அதற்கான நற்பலனை அடைவீர்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை... சிலருக்கு சூப்பர்... சிலருக்கு சுமார்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ