கடகத்தில் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின்படி, சுக்கிரன் உலக இன்பம், அன்பு, ஆடம்பரம், செல்வம், காதல், ஆகியவற்றின் காரணியாக இருக்கிறார். பொதுவாகவே அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2023 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி சுக்கிரன் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். செல்வம், அன்பு, காதல் ஆகியவற்றைக் கொடுக்கும் கிரகமான சுக்கிரன் கடகத்தில் வக்ர நிலையில் பெயர்ச்சியாவார். கடகத்தில் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி மக்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், இதனால் 3 ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி அனைத்து விதமான நற்பலன்களையும் அள்ளித்தரும். இந்த காலத்தில் இவர்களது லாபம் பெருகும், அதிர்ஷ்டம் அதிகரிக்கும். அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் அட்டகாசமான நற்பலன்களை அடையவுள்ள ராசிகள்: 


மேஷ ராசி: 


மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி பல நன்மைகளைத் தரும். இவர்கள் பெரும் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். உங்கள் வாழ்வில் ஆடம்பரம் அதிகரிக்கும். மதிப்புமிக்க பொருட்களை வாங்குவீர்கள். இந்த காலத்தில் வாகனம் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். 


வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்கள் லாபம் அடைவார்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான நபர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். 


மேலும் படிக்க | ஜூலை மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜவாழ்க்கை... முழு ராசிபலன் இதோ


மிதுன ராசி: 


சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களைத் தரும். பணப் பலன்களைப் பெறுவீர்கள். திடீரென்று எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். இது உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும். உங்களின் பேச்சின் தாக்கம் அதிகரித்து அனைத்து பணிகளும் தானாக நடக்கும். வியாபாரிகள் சிக்கிய பணத்தை திரும்பப் பெறலாம்.


குடும்பத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், பண ஆதாயங்களும் கிடைக்கும். குடும்பத்தில் பொருளாதார நிலை உயரும். இந்த நேரத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. காதல் விவகாரங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் அங்கீகாரம் கிடைக்கும். 


துலாம் ராசி: 


துலாம் ராசிக்கு அதிபதியான சுக்ரன், வக்ர பெயர்ச்சியின் மூலம், இந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்களை அள்ளிக்கொடுப்பார். தொழிலில் முக்கியமான மாற்றம் ஏற்படலாம். தொழில்-வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். உயர் பதவி, சம்பள உயர்வு உண்டாகும். நீங்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். பண ஆதாயம் உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும். ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பீர்கள்.


குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு இன்று அதிர்ஷ்டம் உச்சத்தில்... வாழ்வில் முன்னேற வாய்ப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ