ஏழரை சனிக்கு நிவாரணம் அளிக்கும் மகாசிவராத்திரி பூஜை: சிவன், சனி அருள் சேர்ந்து கிட்டும்
Mahashivratri 2024: மகாசிவராத்திரி விழாவின் முக்கியத்துவம் இந்து மத நூல்களில் மட்டுமல்ல, ஜோதிடத்திலும் அதிகமாக விவரிக்கப்பட்டுள்ளது. கிரக தோஷங்கள் நீங்க அனைத்து ராசிக்காரர்களும் சிவபெருமானை வழிபடலாம்.
Mahashivratri 2024: தென்னாடுடைய சிவனாகவும் அண்ட சாரசரங்களின் இறைவனாகவும் இருக்கும் சிவபெருமானுக்கு உகந்த நாள் சிவராத்திரி. அதுவும் மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. வேத புராணங்களின் படி இந்த நாளில்தான் சிவ பெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுகின்றது. மஹாசிவராத்திரி அன்று சிவன் மற்றும் அன்னை பார்வதியை வழிபடுவது வாழ்க்கையில் அனைத்து வகையான தடைகளையும் நீக்கி மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது. இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழா உலகம் ழுவதும் இன்று அதாவது மார்ச் 08, 2024 வெள்ளிக்கிழமை வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
மஹாசிவராத்திரி விழாவின் முக்கியத்துவம் இந்து மத நூல்களில் மட்டுமல்ல, ஜோதிடத்திலும் அதிகமாக விவரிக்கப்பட்டுள்ளது. கிரக தோஷங்கள் நீங்க அனைத்து ராசிக்காரர்களும் சிவபெருமானை வழிபடலாம். சிவ பக்தர்களை சனி பகவான் சோதிப்பதில்லை. குறிப்பாக மகாசிவராத்திரியில் சிவபெருமானை (Lord Shiva) வணங்கினால் ஏழரை சனி மற்றும் சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் அவதியில் இருப்பவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். ஜாதகத்தில் உள்ள அசுப விளைவுகள் நீங்க சிவ பூஜை கை கொடுக்கும்.
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, தற்போது மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் (Zodiac Signs) ஏழரை சனியின் தாக்கம் உள்ளது. கடகம் மற்றும் விருச்சிக ராசிகளில் சனி தசையின் தாக்கம் உள்ளது. அனைத்து கிரகங்களுக்கும் கிரக நிலைகளுக்கும் அப்பாற்படவர் சிவன். மஹாசிவராத்திரி சுப நாளில் சில விசேஷ வழிமுறைகளைப் பின்பற்றி சிவனை வணங்கினால், சனியின் (Shani) தோஷங்களில் இருந்து விடுபடலாம். அது பற்றி இங்கே காணலாம்.
மேலும் படிக்க | மங்களம் தரும் மகாசிவராத்திரி 2024... சிவனின் அருள் எந்த ராசிக்கு கிடைக்கும்?
சிவ பெருமானை மகிழ்வித்து, ஏழரை சனியில் நிவாரணம் பெற இவற்றால் சிவ லிங்க அபிஷேகம் செய்யலாம்:
- 'ஓம் நம சிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்தபடி, நீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது சிவனின் மனதை குளிர வைக்கும்.
- சிவபெருமானும் பால் கொண்டு அபிஷேகம் செய்தால் அவர் விரைவில் மகிழ்ச்சி அடைகிறார். ஆகவே, ருத்ராபிஷேக நேரத்தில், சிவலிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்யும் முன்னர், பால் அபிஷேகம் செய்யவும். இப்படி செய்வதால் பல வகையான கிரக தோஷங்கள் நீங்கும்.
- தயிர் அபிஷேகத்துக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. தயிர் அபிஷேகம் செல்வம், பணம், வருமானம் தொடர்பான விசேஷ பலன்களை அளிக்கும் என கருதப்படுகின்றது.
- சிவபெருமானின் அலங்காரத்தில் சந்தனத்தின் பயன்பாடு மிக முக்கியமானது. இது கோவத்தில் ருத்ரனாக இருக்கும் அவரை சாந்தப்படுத்துகிறது.
- அபிசேகத்திற்கு பிறகு சிவலிங்கத்தில் திருநீறு பூசி குங்குமம் இட்டு, வில்வ இலைகள், மலர்கள், ருத்ராட்ச மாலை கொண்டு அலங்கரித்து வழிபட்டால், சிவபெருமானின் விசேஷ பலனை பெறலாம்.
சில வட மாநில கோயில்களில் பக்தர்கள் தாமாக சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய அனுமதிப்பார்கள். எனினும், பல கோயிகளில் இந்த அனுமதி கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட கோயில்களில் பக்தர்கள் அபிஷேகம் மற்றும் அலங்காரத்திற்கு இந்த பொருட்களை வாங்கிக்கொடுத்தாலே அதற்கான புண்ணியத்தையும், பலனையும், சிவ பெருமானின் அருளையும் பெறலாம்.
மனிதர்களை பாடாய் படுத்தும் ஏழரை சனி பாதிப்புகளை தவிர்க்க, மகா சிவராத்திரியில் சிவ பெருமானை வழிபட்டால் போதும். அனைத்து அசுப தாக்கங்களும் பனி போல் விலகி சிவனருள் கிட்டி, நல்லது நடக்கும்.
மேலும் படிக்க | சோபகிருது மாசி 25ம் நாள் மகளிர் தின ராசிபலன்! மார்ச் 8 சிவராத்திரி தினசரி பலன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ