2023 புத்தாண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ளது, இதற்கிடையில் இப்போது நம் மனதில் தோன்றும் முதல் கேள்வி வரும் ஆண்டு நமக்கு எப்படி இருக்கும் என்பது தான். இதனால் நாம் ராசிபலன்களை தேடி தேடி படித்து கொண்டிருப்போம். பொதுவாக ஜோதிடத்தில் ஒரு ராசிக்கு நன்மை தீமைகளை தீர்மானம் செய்வது கிரகங்ளின் நிலையை பொறுத்தே. சிலசமயங்களில், அவற்றின் மாற்றம் நமக்கு நன்மையையும் கொடுக்கும், சில சமயம் சங்கடத்தையும் கொடுக்கும். அந்தவகையில், வருகிற புத்தாண்டில் எந்த ராசியில் எந்த கிரகங்கள் இருக்கின்றன மற்றும் முக்கிய பெயர்ச்சிகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2023 ஆம் ஆண்டின் நடக்க உள்ள மிக முக்கியமான பெயர்ச்சிகள்:


ஜனவரி 13: ரிஷப ராசியில் ஜனவரி 12 வரை வக்கிரமாக சஞ்சரிக்கும் ஆகும் செவ்வாய், ஜனவரி 13 முதல் வக்கிர நிவர்த்தி பெற்று சஞ்சரிக்கிறது.


மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை! 


ஜனவரி 17 சனி பெயர்ச்சி: கடந்த இரண்டரை ஆண்டுகளாக மகர ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருந்த சனி, தற்போது 17 ஆம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த சனிப்பெயர்ச்சியில், தனுசு ராசியினருக்கு ஏழரை சனி முடிவடைகிறது, மேலும் மீன ராசிக்கு ஏழரை சனி தொடங்குகிறது. அதே போல, கடக ராசிக்கு அஷ்டம சனி தொடங்கும்.


ஏப்ரல் 22 குரு பெயர்ச்சி: ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி மேஷ ராசியில் குரு பெயர்ச்சியாகப் போகிறார்.


அக்டோபர் 30 ராகு கேது பெயர்ச்சி: அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி வரை மேஷ ராசியில் ராகுவும், துலாம் ராசியில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். பின்னர் ராகுவும் கேதுவும் மீனம் மற்றும் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்கள். ராகு மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார், கேது கன்னிக்கு பெயர்ச்சியாகிறார்.


சூரியன் பெயர்ச்சி: 14 ஜனவரி 2023 மகர ராசியில், 14 ஏப்ரல் 2023 மேஷ ராசியில், 15 மே 2023 
ரிஷப ராசி, 15 ஜூன் 2023 மிதுனம், 17 ஜூலை 2023 கடகம், 17 ஆகஸ்ட் 2023 சிம்மம், 17 செப்டம்பர் 2023 கன்னி ராசியில், 18 அக்டோபர் 2023 துலாமில், 17 நவம்பர் 2023 விருச்சிகம், 16 டிசம்பர் 2023 தனுசு ராசியில் நடக்க உள்ளது.


செவ்வாய் பெயர்ச்சி 2023: மார்ச் 13, 2023 மிதுனம், 10 மே 2023 கடகம், 1 ஜூலை 2023 சிம்மம், 18 ஆகஸ்ட் 2023 கன்னி, 3 அக்டோபர் 2023 துலாம், 16 நவம்பர் 2023 விருச்சிகம், 28 டிசம்பர் 2023 தனுசு ராசியில் பெயர்ச்சியாக உள்ளது.


புதன் பெயர்ச்சி 2023: மகரம் - 7 பிப்ரவரி 2023, கும்பம் - 27 பிப்ரவரி 2023, மீனம் - மார்ச் 16, 2023, 
மேஷம் - மார்ச் 31, 2023, ரிஷபம் - 7 ஜூன் 2023, மிதுனம் - 24 ஜூன் 2023, கடகம்- 8 ஜூலை 2023, சிம்மம் - 25 ஜூலை 2023, கன்னி - 1 அக்டோபர் 2023, துலாம் - 19 அக்டோபர் 2023, விருச்சிகம் - 6 நவம்பர் 2023, தனுசு - 27 நவம்பர் 2023, விருச்சிகம் - 28 டிசம்பர் 2023.


சுக்கிரன் பெயர்ச்சி 2023: கும்பம் - 22 ஜனவரி 2023, மீனம் - 15 பிப்ரவரி 2023, மேஷம் - மார்ச் 12, 2023, ரிஷபம் - 6 ஏப்ரல் 2023, மிதுனம் - மே 2, 2023, கடகம்- 30 மே 2023, சிம்மம் - 7 ஜூலை 2023, கடகம் - 7 ஆகஸ்ட் 2023, சிம்மம் - 2 அக்டோபர் 2023, கன்னி - 3 நவம்பர் 2023, துலாம் - 30 நவம்பர் 2023, விருச்சிகம் - 25 டிசம்பர் 2023.


மேலும் படிக்க | Planets Retrograde: வக்ர கதியில் நகராத இரண்டு கிரகங்கள் சூரியனும் சந்திரனும்! சுக்கிரப் பெயர்ச்சி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ