கும்பத்தில் நுழையும் செவ்வாய்! இந்த 5 ராசிக்காரர்கள் கவனமாக இருக்கவும்!
Mars transit: செவ்வாய் ஆனது மார்ச் 15 முதல் கும்ப ராசியில் இடம் பெயர உள்ளார். இதனால் 12 ராசிகளுக்கும் சில தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
செவ்வாயின் ராசி மாற்றம் மார்ச் 15 மாலை நடைபெற உள்ளது. மார்ச் 15 முதல் ஏப்ரல் 23 வரை செவ்வாய் ஆனது கும்ப ராசியில் இருப்பார். அதன் பிறகு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாற உள்ளார். செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தால் 5 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த சமயத்தில் சாலை விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் எதிரிகள் உங்களை அவமானப்படுத்த முயற்சி செய்யலாம். மேலும், செவ்வாயின் இந்த ராசி மாற்றம் 12 ராசிகளையும் பாதிக்கும். கிட்டத்தட்ட 40 நாட்கள் செவ்வாய் கும்ப ராசியில் இருப்பார். செவ்வாய் கிரகம் கும்ப ராசியில் இடம் பெயர்வதால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் ஏற்படும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மேலும் படிக்க | சூரியன் பெயர்ச்சி... பங்குனியில் பட்டையை கிளப்ப போகும் சில ராசிகள்!
செவ்வாய்ப் பெயர்ச்சி
மேஷம்: கும்பத்தில் செவ்வாய் இடம் பெயர்வதால் அரசாங்க வேலை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். சிலருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் வருமானமும் அதிகரிக்கும். குடும்ப விவகாரங்களை பொறுமையுடனும், நிதானத்துடனும் கையாள வேண்டும். அதிக கோபம் வேலையைக் கெடுத்துவிடும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். வாகனம் ஓட்டும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் கவனமாக இருக்க வேண்டும். வெளி ஊருக்கு பயணம் செய்யும் போது, பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இந்த சமயத்தில் வியாபாரத்தில் நல்ல வரவு இருக்கும்.
மிதுனம்: செவ்வாய் ராசி உங்கள் தைரியத்தை அதிகரிக்கும். நீங்கள் கடினமாக உழைத்தால் அனைத்தும் உங்களிடம் வந்து சேரும். வேலையில் தடைகள் ஏற்படலாம். திடீர் வெளியூர் பயணத்தால் நன்மைகள் வந்து சேரும். தேவையில்லாமல் வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.
கடகம்: கும்ப ராசியில் செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி உங்களின் ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. உங்கள் உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். எந்த ஒரு சிறு நோயையும் அலட்சியப்படுத்த வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சில இடங்களில் விவாத சூழ்நிலை ஏற்படலாம்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் மாமியார்களுடன் உறவை நல்வழி படுத்தி கொள்ள வேண்டும். தேவையில்லாமல் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகா இன்னும் சிறிது காலம் ஆகலாம். புதிய பணிகளைச் செய்ய நல்ல நேரம் இது தான். அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
கன்னி: செவ்வாய் ராசி மாற்றத்தால் செல்வம், பலம், வீரம் அதிகரிக்கும். மார்ச் 15 முதல் ஏப்ரல் 23 வரை யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். ஒருவேளை கொடுத்தால், கொடுத்த பணம் திரும்ப வராது. இதனால் நண்பர்களிடம் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் குடியேறுவதற்கு சரியான நேரம் இது.
துலாம்: செவ்வாயின் ராசி மாற்றத்தால் மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி கிடைக்கும். ஆனால் அதற்கு கடினமாக உழைக்க வேண்டாம். உங்கள் வேளையில் பதவியும் மரியாதையும் கூடும். இருப்பினும், திருமண வாழ்க்கையில் பதற்றம் ஏற்படலாம். உறவுகளை ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.
விருச்சிகம்: கும்ப ராசியில் செவ்வாய் நுழைவதால் குடும்பத்தில் சண்டைகள் ஏற்படலாம். இதனால் பொறுமையுடனும் நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. இதனால் நீங்கள் மன அழுத்தத்தை உணரலாம். இருப்பினும், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அரசாங்க உதவி கிடைக்கும்.
தனுசு: மார்ச் 15 முதல் ஏப்ரல் 23 வரை நிறைய நிதி இழப்புகள் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். பல சமயங்களில் சண்டையை தவிர்ப்பது நல்லது. சர்ச்சையை அதிகரிக்கும் செயல்களைச் செய்யாதீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் கடினமான சவால்களை எதிர்கொள்ள சக்தியை கொடுக்கும்.
மகரம்: செவ்வாயின் ராசி மாற்றத்தால் மகர ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலையில் பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து பேச வேண்டும்.
கும்பம்: செவ்வாய் ராசி மாற்றம் தைரியத்தை அதிகப்படுத்தும். இதன் காரணமாக நீங்கள் பல நல்ல செயல்களைச் செய்து முடிக்க முடியும். பதவி, பணம் இரண்டும் அதிகரிக்கும், இதன் மூலம் பொறுப்புகளும் கூடும். அரசு வேலை கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புள்ளது.
மீனம்: வேலை விஷயத்தில் சவாலாக இருக்கும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். 40 நாட்களுக்கு யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.
மேலும் படிக்க | சனீஸ்வரரை சாந்தப்படுத்தி சனி உதயத்தை நன்மையாக மாற்றும் சனிக்கிழமைப் பரிகாரங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ