புதன் வக்ர பெயர்ச்சி 2022:  ஜோதிடத்தில், புதன் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் இளவரசனாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் புதன் கிரகத்தின் நிலை ஒரு நபரின் ஆளுமை, பேச்சு, வணிகம் மற்றும் தொடர்புத் திறன் ஆகியவற்றை பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது.  பஞ்சாங்கத்தின்படி, செப்டம்பர் 10-ம் தேதி கன்னி ராசியில் புதன் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆகிறார். இதனால்,  சில ராசிக்காரர்களின் தலை விதி மாறும். புதன் பகவான் வெற்றிகளை வாரி வழங்குவார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதன் கிரகம் தற்போது கன்னி ராசியில் உள்ளது. செப்டம்பர் 10 முதல் வக்ர நிலையை அடையும். அக்டோபர் 2 ஆம் தேதி வரை புதன் வக்ர நிலையில் தொடரும்.  இதன் பிறகு புதன் துலாம் ராசியில் சஞ்சரிப்பார். அறிவு கூர்மை, புத்திசாலித்தனம், வியாபாரம், செல்வம் போன்றவற்றின் காரணியான புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் சிலரது வாழ்வில் மிகவும் சுபமான விளைவை ஏற்படுத்தும். புதனின் வக்ர பெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசிக்காரர்களின் வேலை-வியாபாரம், கல்வி, அறிவுத் திறன், நிதி நிலை ஆகியவற்றை பாதிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை, புதன் வக்ர் பெயர் யாருக்கு மகத்தான வெற்றியைத் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.


மிதுனம்: நிதி நிலை வலுவாக இருக்கும்


புதனின் பிற்போக்கு சஞ்சாரம், மிதுன ராசிக்காரர்களுக்கு வேலையில் தொழிலில் வெற்றிகளை அள்ளித் தரும்.  நிதி நிலையை வலுப்படுத்தும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். ஆனாலும் வேலைப்பளு அதிகரிக்கும். உறவுமுறைகள் சிறப்பாக இருக்கும். சட்ட விவகாரங்கள் தீர்க்கப்பட்டு முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும்.


மேலும் படிக்க | Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!


கடகம் ராசி: திடீர் பண ஆதாயம் உண்டாகும்


 புதன் வக்ர பெயர்ச்சி, கடக ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயங்களைத் தருவார். புதிய வாய்ப்புகள் வரும். பணியில் மாற்றம் ஏற்படலாம். உங்கள் மீது நம்பிக்கை வைத்து சரியான நேரத்தில் அனைத்தையும் செய்து முடித்தால் மகத்தான வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். வெளியூர் பயணம் திட்டமிடலாம்.


கன்னி: புதிய வாகனம் வாங்குவீர்கள்


கன்னி ராசிக்கார்களுக்கு, புதனின் வக்ர பெயர்ச்சி அதிகபட்ச பலன்களை அள்ளிக் கொடுக்கும். நிதி நிலைமைகள் சிறப்பாக இருக்கும். நீங்கள்  வாகனம்  அல்லது வீடு  வாங்கலாம் அல்லது முன்பதிவு செய்யலாம். கணவன் மனைவி இடையே உறவு சிறப்பாக இருக்கும். அவர்களுக்கிடையேயான உறவுகளில் இனிமை இருக்கும். புதிய உறவுகள் உருவாகும். தொழில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.


விருச்சிகம்: தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்


புதனின் வக்ர பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றத்தையும் வெற்றியையும் தரும். வியாபாரிகள் பெரும் லாபம் அடைவார்கள். அதிர்ஷ்டத்தின் உதவியால், வேலை வெற்றிகரமாக இருக்கும். மகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழல் இருக்கும். உறவினர் வருகையால் வேலைப்பளு அதிகரிக்கும். உங்கள் மனைவியிடமிருந்து அன்பையும் பாசத்தையும் பெறுவீர்கள்.


புதனின் வக்ர பெயர்ச்சியினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தவிர்ப்பதற்கான பரிகாரங்கள்


புதனின் வக்ர பெயர்ச்சியினால், சில ராசிகளுக்கு மிகவும் சாதகமான பலன்களை கொடுத்தாலும், சில ராசிகள், அதன் மோசமான விளைவைத் தவிர்க்க பசுமையான பொருட்களை தானம் செய்ய வேண்டும். பசுவிற்கு தீவனம் கொடுங்கள். புதன்கிழமை விரதம் இருந்து கணபதியை வழிபடவும். விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்து துளசியிக்கு பூஜை அர்ச்சனை செய்யுங்கள். இதன் காரணமாக புதன் சுப பலன்களைத் தருவார்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ