2024 March Monthly Horoscope in Tamil: ஜோதிடத்தில், கிரக நிலைகளையும், கிரகங்களின் ராசி மாற்றங்களையும் வைத்து ராசிகளுக்கான பலன்கள் கணிக்கப்படுகின்றன. இந்நிலையில், மார்ச் மாதத்தில் நான்கு கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன. மார்ச் மாதம் ஏழாம் தேதி சுக்கிரன் மீனத்தில் சஞ்சரிப்பார். மார்ச் 14ஆம் தேதி சூரியன் மீன ராசிக்கு செல்வார். மார்ச் 15ஆம் தேதி அன்று செவ்வாய் கும்ப ராசிக்கு செல்வார். மார்ச் 18ஆம் தேதி சனி பகவான் உதயம் ஆவார். இதனால் கிரகங்களின் இணைவும் ஏற்படும். இந்த கிரக நிலைகளுக்கு மத்தியில் மார்ச் மாதம், ஆறு ராசிகளுக்கு சிறப்பாக இருக்கும் என்று ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷப ராசிக்கான மார்ச் மாத பலன்கள்


ரிஷப ராசி எனக்கு ஆற்றல் நிறைந்திருக்கும். வாழ்க்கையில் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். புதிய வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்புகள் கைகூடி வரும். வேலையில் கூடுதல் சலுகைகள் கிடைக்கும். பணம் ஈட்ட எடுக்கும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும்.


கடக ராசிக்கான மார்ச் மாத பலன்கள்


கடக ராசியினருக்கு நிலை மேம்படும் வாய்ப்புகள் கிடைக்கும். முதலீடுகளால் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்பட்டு சலுகைகள் கிடைக்கும். உறவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். தடைபட்ட காரியம் நிறைவேறும்.


சிம்ம ராசிக்கான மார்ச் மாத பலன்கள்


சிம்ம ராசியினருக்கு, வருமானத்தையும் லாபத்தையும் அள்ளிக் கொடுக்கும் மாதமாக மார்ச் மாதம் இருக்கும். வீட்டில் திருமணம் ஆகாதவர்கள் இருந்தால், திருமணம் கைகூடும் வாய்ப்பு உண்டு. மனதில் நேர்மறை சிந்தனைகள் நிறைந்திருக்கும். இதனால் கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும். பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. இதனால் ஆதாயமும் கிடைக்கும்.


கன்னி ராசிக்கான மார்ச் மாத பலன்கள்


கன்னி ராசியினருக்கு, வாழ்க்கையில் இருந்து வந்த தடைகள் தொல்லைகள் அனைத்தும் நீங்கி, புத்துணர்ச்சியுடன் வாழ்க்கையை தொடங்குவார்கள். சுக்கிரனின் அருளால், ஆடம்பர வாழ்க்கைக்கு உத்தரவாதம் உண்டு. வேலையில் வருமானத்துடன் செல்வாக்கும் அதிகரிக்கும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபாடு இருக்கும்.


மேலும் படிக்க | குலதெய்வத்தை எப்படி வணங்கினால் வாழ்வில் வளம் பெறலாம்? தெரிந்துக் கொள்ளவேண்டியவை...


விருச்சிக ராசிக்கான மார்ச் மாத பலன்கள்


விருச்சிக ராசியினருக்கு விருத்தியை அள்ளிக் கொடுக்கும் மாதமாக மார்ச் மாதம் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, உறவுகள் இயல்பு நிலைக்கு வரும். நிலம் வீடு வாங்க மார்ச் மாதம் ஏற்ற மாதமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். நிதி நிலைமையும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும்.


கும்ப ராசிக்கான மார்ச் மாத பலன்கள்


கும்ப ராசியினருக்கு அனைத்து வகையான சவால்களையும் சமாளிக்கும் ஆற்றல் இருக்கும். வேலையில் தொழிலில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் நிதி நிலையை மேம்படுத்த உதவும். குடும்பத்தில் நல்லிணக்கம் இருக்கும். சுறுசுறுப்புடன் அனைத்து பணிகளையும் செய்து முடிக்கும் தன்மை இருக்கும். பழைய கடன் தொல்லைகளிலிருந்து விடுபடும் வாய்ப்பு இருக்கும்.


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.



சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடரவும்..




 


வாட்ஸ்-அப் -  https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!