சுக்கிரன் பெயர்ச்சி: அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த 5 ராசிகளுக்கு கவலையே இல்லை!
Shukra Gochar 2023: சுக்கிரன் கிரகம், கடந்த ஏப். 6ஆம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரித்துள்ளது. அவரது சஞ்சாரத்தால் 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அடுத்த ஒரு மாதத்திற்கு பிரகாசமாக இருக்கப் போகிறது. அவை குறித்து இங் காண்போம்.
Shukra Gochar 2023: காதல், அழகு மற்றும் ஈர்ப்பின் சின்னமாக கருதப்படுவது, சுக்கிரன் கிரகம்தான். அவை வாழ்க்கையில் பொருள்சார்ந்த இன்பங்களைக் குறிக்கின்றன. யாருடைய ஜாதகத்தில் சுக்ர பகவான் வலுவான நிலையில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு மரியாதை, உடல்-மன மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கையில் ஆறுதல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மறுபுறம், சுக்கிரனின் எதிர்மறையான தாக்கங்களால், சில ராசிக்காரர்களுக்கு பண இழப்பு மற்றும் சட்ட விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இப்போது சுக்கிரன் கிரகம், கடந்த ஏப். 6ஆம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரித்துள்ளது. அவரது சஞ்சாரத்தால் 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அடுத்த ஒரு மாதத்திற்கு பிரகாசமாக இருக்கப் போகிறது. இந்த நேரத்தில், அவர் தனது வேலையில் நிறைய முன்னேற்றம் பெறுவார்கள் மற்றும் வீட்டில் செல்வம் வரும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று இங்கு பார்ப்போம்.
ரிஷபம்
இந்த பெயர்ச்சி, ரிஷப ராசிக்காரர்களுக்கு சட்டம் தொடர்பான விஷயங்களில் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சில முக்கியமான வேலைகளுக்கு கடன் வாங்கலாம். காதலர்கள் திருமணம் பற்றி சிந்திக்கலாம், ஆனால் திருமணத்தில் தாமதம் ஏற்படலாம். நீங்கள் பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். ஆனால் உங்கள் செலவுகளும் தொடர்ந்து அதிகரிக்கும்.
மேலும் படிக்க | அட்சய திருதியை 2023: இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகுவது கேரண்டி
கடகம்
ரிஷப ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம், இந்த ராசிக்காரர்களுக்கு பலன் அளிக்கப்போகிறது. உங்களின் பல ஆசைகள் நிறைவேறும் வாய்ப்பு அதிகம். புதிய வீடும் வாங்கலாம். உங்களின் கடின உழைப்புக்கு பாராட்டுக்களையும் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமணம் போன்ற எந்த ஒரு சுப நிகழ்ச்சியும் உங்கள் வீட்டில் ஏற்பாடு செய்யலாம்.
சிம்மம்
இந்த சுக்கிரனின் சஞ்சாரம், உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் தொழிலில் திருப்தி அடைவீர்கள். பணியிடத்தில் மூத்தவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். அதிகரிப்புடன், பதவி உயர்வுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கலாம். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களையும் தொடங்கலாம்.
கன்னி
இந்த சுக்கிரனின் சஞ்சாரம், கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டம் மற்றும் உங்கள் தந்தையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இதனுடன், உங்களுக்கு நல்ல நிதி ஆதாயமும் இருக்கும். வெளிநாட்டு பயணமும் செல்லலாம். உங்கள் தொழிலில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். திருமணமானவர்களும் தங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவார்கள்.
மகரம்
சுக்கிரனின் சஞ்சாரம், மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். எல்லாத் துறைகளிலும் திருப்தி அடைவார்கள், பொருளாதார ரீதியாகவும் பலமாக இருப்பார்கள். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் தொழிலில் உயர் பதவியை அடைவதில் வெற்றி பெறலாம். வியாபாரிகளுக்கு இந்த பெயர்ச்சி சாதகமான பலன்களை தரும். இதன்போது நீண்ட நாள் காதலித்து வரும் ஜோடிகள் திருமணம் மேற்கொள்ளலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 72 மணி நேரம்..ஆபத்தான கிரகண யோகம்! இந்த ராசிகளுக்கு பண நஷ்டம் ஏற்படும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ