பணம், புகழ், பதவி: ராகு பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு அன்னை லட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும்!!
Rahu Transit Effects: சில ராச்சிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி மிகவும் சாதகனாம பலன்களை அளிக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ராகு கிரகப் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களுக்கும் குறிப்பிட்ட முக்கியத்துவம் உள்ளது. ராகு கிரகத்திற்கும் அதற்கான சில அம்சங்கள் உள்ளன. ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றன. இவை இரண்டும் எப்போதும் வக்ர இயக்கத்தில் பயணிக்கின்றன. இவை எந்த ராசிக்கும் அதிகபதிகளாக இல்லை. ஜோதிடக் கணக்கீடுகளின்படி, ஒரு நபரின் ஜாதகத்தில் ராகு அசுபமான இடத்தில் இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் அழிவை உருவாக்குகிறது. அதுவே ராகு சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபருக்கு பல நல்ல விளைவுகள் ஏற்படும். இப்படிப்பட்ட நபர்களுக்கு அரசியல் மற்றும் நிர்வாக பதவிகள் கிடைக்கும்.
அக்டோபரில், நிழல் கிரகமான ராகு, மேஷ ராசியிலிருந்து விலகி மீன ராசிக்கு பிரவேசிக்கப் போகிறார். தற்போது ராகு மேஷ ராசியில் இருக்கிறார். விசேஷம் என்னவென்றால், ராகு மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது, சந்திரன் ஏற்கனவே மீன ராசியில் இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி, எந்த கிரகம் எந்த ராசியில் பெயர்ச்சி ஆனாலும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ராகு பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராச்சிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகனாம பலன்களை அளிக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த ராசிகளுக்கு ராகு பெயர்ச்சியால் நல்ல நாட்கள் தொடங்கும்
துலா ராசி:
துலாம் ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். ராசியின் ஆறாம் வீட்டில் இந்த பெயர்ச்சி நடக்கப் போகிறது, இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. எதிரிகளை வெல்ல வாய்ப்பு கிடைக்கும். திடீர் பண ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, இடமாற்றம் போன்ற பலன்களைப் பெறலாம். அரசியல் வாதிகளுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும்.உத்யோகத்தில் பதவி உயர்வு அல்லது உங்கள் விருப்பப்படி வேலை கிடைக்கும். அயல்நாட்டு நிறுவனத்துடன் வியாபாரம் செய்வதால் அதிக லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து வருமானம் அதிகரிக்கும், உறவுகளும் மேம்படும். அரசியலில் புகழ் பெறுவீர்கள்.
ரிஷப ராசி:
ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். பயண வாய்ப்புகள் உண்டாகும். பங்குச் சந்தை, பந்தயம், லாட்டரி போன்றவற்றில் நல்ல பணம் சம்பாதிக்கலாம். புதிய வருமான வழிகளை உருவாக்க முடியும். இது தொழில் மற்றும் நிதி நிலைமைக்கு மிகவும் நன்றாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளும் முடிக்கப்படும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. திடீர் பண வரவு இருக்கும்.
மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் சனி... ‘இந்த’ ராசிகளுக்கு நவம்பர் முதல் கொண்டாட்டம்!
கன்னி ராசி:
ராகுவின் சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தினருடன் உங்கள் உறவு சுமுகமாக இருக்கும். திடீர் பண ஆதாயம் கூடும். உங்கள் வணிக கூட்டாளருடன் நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும், இல்லையெனில் இழப்புகள் ஏற்படலாம். ராகு சுமார் ஒன்றரை ஆண்டுகள் மீனத்தில் இருக்கப் போகிறார், இந்த காலகட்டத்தில் கன்னியின் நிதி நிலை வலுவாக இருக்கும். மரியாதை அதிகரிக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் நல்ல பலனைத் தரும். வியாபாரம், நிலம் போன்றவற்றில் பணம் முதலீடு செய்வதால் பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. பொருளாதார நிலை வலுவாக இருக்கும். தொழிலுக்கு சாதகமாக இருக்கும் நேரம் இது, லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கும் இது நல்ல நேரமாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாரானால் வேலை கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன் கிடைக்கும்.
கடக ராசி:
கடக ராசிக்காரர்களுக்கு மீன ராசியில் ராகுவின் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கலாம். வெளியூர் பயண வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வேகம் பெறும். வாகனம், சொத்து போன்றவற்றை வாங்கும் யோகம் தற்போது உருவாகும். தொழிலதிபர்கள் ஆதாயமடைவதோடு செல்வம் பெருகும். பொருளாதாரத்துறையில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. அசையும், அசையா சொத்துகளையும் வாங்கலாம். தொழில் துறையில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும்.
மேலும் படிக்க | ஆவணி மாதத்தின் இறுதி வாரத்திற்கான ராசிபலன்கள்! செப்டம்பர் 11-18 ஜோதிட கணிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ