Venus Transit: வேத ஜோதிடத்தில், சுக்கிரன் கிரகம் செல்வம், பெருமை, செழிப்பு, உலக இன்பம், மகிழ்ச்சி மற்றும் ஆடம்பரத்தின் காரணி கிரகமாக கருதப்படுகிறது. ஆகையால் சுக்கிரனின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், இந்த அம்சங்களில் ஒரு சிறப்பு தாக்கம் உருவாகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் மாத தொடக்கத்தில், சுக்கிரன் கும்ப ராசியில் நுழையப் போகிறார். கும்பத்தின் அதிபதி சனி தேவன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி மற்றும் சுக்கிரனுக்கு இடையில் நட்பு உணர்வு உள்ளது. சனியின் ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களை கொண்டு வரும். இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு, மன மகிழ்ச்சி, லாபம் ஆகியவை சாத்தியமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


கும்பம் (Aquarius) 


சுக்கிரனின் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் சுக்கிரன் உங்கள் ராசிக்கு அதிபதி வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். எனவே, இந்த நேரத்தில் உங்கள் ஆளுமையில் முன்னேற்றம் காண்பீர்கள். இந்த காலத்தில் உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். திருமணம் ஆனவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் கும்ப ராசிக்காரர்களின் மரியாதை கூடும். அரசாங்கத் துறைகளில் நீங்கள் நன்மைகளையும் வெற்றிகளையும் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆக இப்போது வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில், கூட்டாண்மை வேலைகளில் உங்களுக்கு லாபம் கிடைக்கும்.


மேலும் படிக்க | கும்பத்தில் இணையும் சூரியன் சனி: இந்த ராசிகளுக்கு நேரம் சரியில்லை


ரிஷபம் (Taurus)


சுக்கிரனின் ராசி மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். ஏனெனில் சுக்கிரன் உங்கள் ராசிக்கு அதிபதி. மேலும், அவர் உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தின் கர்ம வீட்டில் பெயர்ச்சி ஆகவுள்ளார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். மேலும் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கனவே நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். சுக்கிரனின் தாக்கத்தால் உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூடுதலாக, உங்கள் நிதி நிலையும் மிகவும் வலுவாக இருக்கும். அதே நேரத்தில், வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் நல்ல நிதி லாபம் பெற முடியும். ஆடம்பர பொருட்கள், திரைப்படம், மாடலிங், ஊடகம், கலை மற்றும் இசை ஆகியவற்றுடன் தொடர்புடைய வேலை அல்லது வணிகம் உள்ளவர்கள் இந்த நேரத்தில் நல்ல லாபத்தைப் பெறலாம்.


துலாம் (Libra)


சுக்கிரன் கிரகத்தின் ராசி மாற்றம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் சுக்கிரன் உங்கள் ராசியிலிருந்து நான்காம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். அதோடு உங்கள் ராசிக்கு அவர் அதிபதியும் ஆவார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் உலக இன்பங்களைப் பெறலாம். மேலும், அலுவலக வேலை செய்பவர்களும் இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு பெறலாம். அதாவது உங்கள் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் வலுவாக உள்ளன. இந்த காலகட்டத்தில், நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து நன்மைகளைப் பெறலாம். மேலும் இப்போது மூதாதையர் சொத்து தொடர்பான விஷயங்கள் வெற்றியடையும். மேலும் உங்கள் நீண்ட நாள் விருப்பங்களும் இப்போது நிறைவேறும். நீங்கள் தொடங்கும் புதிய பணிகளில் சுக்கிரன் அருளால் இப்போது வெற்றி கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. )


மேலும் படிக்க | 1 ஆண்டுக்கு பின் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்.. இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ