கும்பத்தில் சனி பகவானின் வக்ர பெயர்ச்சி: ஜோதிடத்தின்படி, சனி பகவான் இரண்டரை ஆண்டுகளில் ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். கிரக மாற்றத்துடன் சனி அவ்வப்போது தனது இயக்கங்களையும் நிலைகளையும் மாற்றுகிறார். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் நேரான இயக்கத்தில் உள்ளார். ஜூன் 17, 2023 முதல், சனி வக்ர நிலையில் மாறத் தொடங்குவார். சனி கும்ப ராசியில் வக்ர நிலையில் நவம்பர் 4 வரை சஞ்சரிப்பார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனியின் வக்ர நிலையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு சுப விளைவுகளும் சில ராசிகளுக்கு அசுப விளைவுகளும் ஏற்படும். எனினும், சனியின் வக்ர பெயர்ச்சி 5 ராசிக்காரர்களை அதிகமாக பாதிக்கவுள்ளது. இவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவர்களின் வாழ்க்கையில் பல எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும். அந்த 5 ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


சனியின் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு


மேஷம்: 


சனியின் வக்ர நிலை மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். கடின உழைப்புக்கு குறைந்த பலன் கிடைக்கும். ஆரோக்கியமும் கெடலாம். பதற்றம் இருக்கலாம். காதல் மற்றும் திருமண வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். 


ரிஷபம்: 


வக்ர சனியின் தாக்கம் ரிஷப ராசிக்காரர்களை ஓட ஓட விரட்டும். பணிச்சுமை அதிகரித்துக்கொண்டே போகும். புதிய வேலை தேடுபவர்கள் சிறிது நேரம் காத்திருக்கவும். பணிகளில் தாமதம் ஏற்படும். பெற்றோரின் உடல் நலனில் சிறப்பு கவனம் செலுத்தவும்.


மேலும் படிக்க | சனி ஜெயந்தி எப்போது? தேதி, நல்ல நேரம் மற்றும் சனி பரிகாரங்கள்


கடகம்: 


கடக ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர இயக்கம் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இவர்கள் மீது ஏற்கனவே சனி தசையின் தாக்கம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நேர்மறை எண்ணங்களை கொண்டிருங்கள். மன அழுத்தம் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள்.


துலாம்: 


வக்ர சனி துலாம் ராசிக்காரர்களுக்கு சிரமங்களைத் தரும். பணியிடத்தில் பிரச்சனைகள் வரலாம். வேலைகளை மாற்ற இது சரியான நேரம் அல்ல, காத்திருங்கள். காதல் விஷயத்தில் சில ஏற்றத்தாழ்வுகள் வரலாம். பொறுமையை கடைபிடிக்க வேண்டிய தருணம் இது. 


கும்பம்: 


கும்ப ராசியில் ஏழரை நாட்டு சனி நடக்கிறது. சனியும் இந்த ராசியில்தான் இருக்கிறார். இதே ராசியில் வக்ரமாகவுள்ளார். இது இந்த ராசிக்காரர்களுக்கு அத்தனை நல்ல பலன்களை அளிக்காது. பதற்றம் அதிகமாகவே இருக்கும். உடல்நலம் மற்றும் தொழில் விஷயங்களில் கவனமாக இருக்கவும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஏப்ரல் 22 முதல் குரு சண்டால் யோகம்! இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப கஷ்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ