புதன் - குரு வக்ர பெயர்ச்சி.... இந்த ராசிகளுக்கு பணவரவு; ராஜயோக பலன்கள்
![புதன் - குரு வக்ர பெயர்ச்சி.... இந்த ராசிகளுக்கு பணவரவு; ராஜயோக பலன்கள் புதன் - குரு வக்ர பெயர்ச்சி.... இந்த ராசிகளுக்கு பணவரவு; ராஜயோக பலன்கள்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2024/11/07/448590-guru-peyarchi-2.jpg?itok=2W3TM5PV)
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி மட்டுமல்லாது, அவற்றின் வக்ர நிலை, வக்ர நிவர்த்தி, அஸ்தனம, உதயம் என அனைத்தும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றம் 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் மற்றும் குரு பகவானின் வக்ர நிலைகள் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி மட்டுமல்லாது, அவற்றின் வக்ர நிலை, வக்ர நிவர்த்தி, அஸ்தனம, உதயம் என அனைத்தும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றம் 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் மற்றும் குரு பகவானின் வக்ர நிலைகள் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
பல கிரகங்கள் நவம்பர் மாதத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. நவம்பர் 7ம் தேதி சுக்கிரன் தனுசு ராசிக்கு மாறுகிறார். அதன்பிறகு நவம்பர் 15ம் தேதி சனி பகவான் கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். நவம்பர் 16ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். புதன் நவம்பர் 26ம் தேதி இரவு விருச்சிக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்து டிசம்பர் 16ஆம் தேதி வரை இந்த நிலையில் நீடிக்கிறார்.
குரு பகவான் சென்ற மாதம் வக்ர பெயர்ச்சி அடைந்த நிலையில், நவம்பர் 26, 2024 அன்று, கிரகங்களின் அதிபதியான புதனும் வக்ர பெயர்ச்சி அடைகிறார். புதன் மற்றும் குரு வக்ர பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்களையும் ராஜயோக பலன்களையும் தரக்கூடியது என்பதை தெரிந்து கொள்வோம்.
ரிஷப ராசி ( Taurus Zodiac)
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இனிவரும் நாட்கள் சாதகமாக இருக்கும்.பண வரவு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிதாக ஏதாவது முயற்சி செய்ய வாய்ப்பு கிடைக்கும். புதிய முயற்சி உங்களுக்கு நல்ல லாபத்தையும் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் முன்னேற்றம் அடைவார்கள் . புதன் வக்ர பெயர்ச்சிக்கு பிறகு வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழலாம். குருவின் ஆசியினால் பொருளாதார நிலை மேம்படும். உங்கள் பணி வெற்றிகரமாக முடியும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு.
தனுசு ராசி (Sagittarius Zodiac)
தனுசு ராசியினருக்கு குரு மற்றும் புதன் இணைந்து வெற்றியைத் தரும். பணம் சம்பந்தமான பலன்கள் கூடும். நல்ல வருமானம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். சமூகத்தில் உங்களுக்கான புதிய அடையாளத்தை உருவாக்க முடியும். நிதி நிலைமை மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வாழ்வில் அபரிமிதமான நன்மைகள் எற்படும்
கும்ப ராசி (Aquarius Zodiac)
தனுசு ராசியினருக்கு குரு மற்றும் புதன் ஆசி பரிபூரணமாக இருக்கும். வேலையில், தொழிலில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக வேலையில் பதவி உயர்வுக்காகக் காத்திருந்தவர்களுக்கும் இந்த மாதம் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் பரஸ்பர அன்பு அதிகரிக்கும், உறவுகள் மேம்படும். பணம் சம்பந்தமான பலன்கள் கூடும். உங்களை வாட்டி வந்த நோய்களில் இருந்து பெரிய அளவில் நிவாரணம் பெறுவீர்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ZEE News பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ