குழந்தைகள், நம் வாழ்வில் பெரிய மாற்றாத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள். பலர் குழந்தைகள் இல்லாத காரணத்தால் இந்த சமூகத்தின் இழி சொல்களுக்கு ஆளாகின்றனர். பலரை பொறுத்தவரை, குழந்தை பெற்றுக்கொண்டால்தான் அவர்களின் வாழ்க்கை முழுமையடையும் என நம்புகின்றனர். அப்படி, குழந்தை வரம் வேண்டி காத்துக்கொண்டிருப்போர் சில கோயில் ஸ்தலங்களுக்கு சென்றால் கண்டிப்பாக கைமேல் பலன் கிடைக்கும். அவை என்னென்ன கோயில் ஸ்தலங்கள் என்பதை இங்கு பார்க்கலாமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்ரீ சந்தான வேணுகோபால சுவாமி கோவில்:


மசூரில் அமைந்துள்ள இந்த கோவில், சுமார் 1800 ஆண்டுகள் பழமையானது. ஸ்ரீ சந்தான வேணுகோபால சுவாமி கோயில், மசூர் நஞ்சன்குடு ஹெம்மரகலா எனும் கிராமத்தில் உள்ளது. இந்த கோவில், குழந்தை பாக்கியம் அருளும் கோயில்களுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இங்கு, கவுண்டனிய மகரிஷி ஒருவர், இந்த கோவிலுக்கு ஒருமுறை வருகை புரிந்துள்ளார். அது மட்டுமன்றி செல்வம் , ஆரோக்கியம், சர்ப்ப தோஷம் நீக்குதல் போன்ற அருளும் இந்த கோயிலுக்கு செல்வதால் ஏற்படும். 


கருவளர்சேரி திருத்தலம்:


தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கருவளர்சேரி எனும் ஊரில் ‘அருள்மிகு அகிலாண்டேஸ்வரி’ அம்மன் கோயில் உள்ளது. இங்கு, அகஸ்தீச்வரர்தான் மூலவராக இருப்பதாக கூறப்படுகிறது. கருவளர்சேரி திருத்தலத்திற்கு வந்து இங்கு வீற்றிருக்கும் அம்பிகையை வழிபடுவோருக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் விலகுமாம். குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வருவோருக்கு, அவர்களின் குறைய நீக்கி இங்கிருக்கும் அம்மன் குழந்தை பாக்கியத்தை அருளுகிறார். கர்ப்பம் தரித்திருப்பவர்கள் இந்த அம்மனை வணங்கினால், அவர்களின் பிரசவம் சிக்கலின்றி நடக்கும் என்பது ஐதீகம். இந்த அம்மனுக்கு கருவளர் நாயகி என்ற இன்னொரு பெயரும் உள்ளது. 


மேலும் படிக்க | குரு உச்சம் செல்கிறார்.. இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்


திருமணம் முடிந்து வெகு நாட்கள் ஆகியும் குழந்தையில்லாமல் ஏங்குபவர்கள், இந்த கோயிலுக்கு சென்று அம்மனை மனமுருக வேண்டினால் அதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். இதற்கு ஏற்ற சிறப்பு பூஜைகளும் இருக்கின்றன. நெய் தீபம் ஏற்றி வழிப்பட்டால் இன்னும் கூடுதல் சிறப்பு. அம்மனை கும்பிட்ட பின்னர் சன்னதியில் இருக்கும் பூஜை மஞ்சள் கிழங்கை வாங்கி அதிஅ தொடர்ந்து பூசி வர வேண்டும். இதனால் குழந்தை பேரில் இருக்கும் தடைகள் நீங்கி மகப்பேறுக்கு வழி பிறக்கும். இந்த கோயிலுக்கு சென்று வழிப்பட்ட பெண்கள் பலர் வெகு சீக்கிரத்திலேயே கருத்தரித்து ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றுள்ளனராம். 


திருக்கருகாவூர் திருத்தலம்:


தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கருகாவூர் என்ற இடத்தில் வீற்றிருக்கும் அம்மன், கர்ப்பரட்சாம்பிகை. இந்த அம்மன், கரும்பைப்போல இனிமையானவர் என்பதால் இவருக்கு கரும்பணையால் என்ற இன்னொரு பெயரும் உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும் பெண்கள் இந்த கோயிலுக்கு வந்து அம்பாளை வழிபடுவதால் சீக்கிரமே பலன் கிடைக்குமாம். குழந்தை வரம் வேண்டுவோர், கருக்காத்த நாயகியை பக்தியோடு மனமுருக வேண்டி, நெய்யால் படிகளை மொழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். மேலும், அம்மன் பாதத்தில் வைத்த நெய்யை நம்பிக்கையோடு 45 நாட்களுக்கு சாப்பிட வேண்டும். அப்படி செய்தால் குழந்தை பேறு வெகு சீக்கிரமாகவே கிட்டும். அம்மனிடம் வைத்து பூஜிக்கப்பட்ட விளக்கெண்ணையை பிரசவ காலத்தில் வயிற்றில் தடவுவதால் குழந்தை பேறு சுலபமாக நடக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. 


மேலும் படிக்க | 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி உச்சம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ