தானம் செய்தால் தரித்திரம் வருமா? ஆம்! இந்த ‘5’ தானங்களையும் தவிர்க்கவும்
STOP Donate 5 Things: தானம் செய்வது இம்மைக்கும் மறுமைக்கும் நல்லது என்று சொல்லப்பட்டாலும், சில விஷயங்களை தானம் செய்வது தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
STOP Donate 5 Things: தானம் செய்வது இம்மைக்கும் மறுமைக்கும் நல்லது என்று சொல்லப்பட்டாலும், சில விஷயங்களை தானம் செய்வது தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும்.தானம் செய்யாதீர்கள், புண்ணியம் போய்விடும்; வறுமையை அனுபவிக்கிறது. ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது என்று கருதப்படுகிறது, ஆனால் மறந்தும் தானம் செய்யக்கூடாத 5 விஷயங்கள் உள்ளன. இவற்றை செய்வதால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும். தரித்திரம் உண்டாகும். தானம் செய்தால் தரித்திரம் வருமா? என்று ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம் என்பதே இதற்கான பதிலாக இருக்கிறது. எனவே, இந்த ‘5’ தானங்களையும் தவிர்க்கவும்
தானங்கள் செய்வது ஒருவரின் பாவங்கள் அனைத்தையும் நீங்கி புண்ணியத்தை கொடுக்கும் என்பது ஐதீகம். இந்து மத சாஸ்திரங்களின்படி, தேவைப்படுபவர்களுக்கு சில பொருட்களைத் தவிர வேறு எதையும் தானம் செய்யலாம். ஆனால், தானம் செய்ய தடை செய்யப்பட்ட பொருட்களை தானம் செய்வது எதிர்மறை விளைவை ஏற்படுத்த ஆரம்பிக்கிறது.
இந்த தவிர்க்க வேண்டிய தானங்கள், குடும்பத்தின் தன வரத்தையும் பாதித்து, மலையளவு பிரச்சனைகளை உண்டாக்குகிறது. அந்த தானங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | திரிக்ரஹி யோகம்! விஷ்ணுவை வணங்கினால் லட்சுமி கடாட்சம் நிச்சயம்
இவற்றை தானம் செய்வது அசுபமானது
கெட்டுப்போன உணவு: தேவைப்படுபவர்களுக்கு உணவு கொடுப்பது ஒரு சிறந்த புண்ணியச் செயலாகக் கருதப்படுகிறது, ஆனால் வழங்கப்படும் உணவு பழையதாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வீணான உணவை தானம் செய்தால், குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
கிழிந்த புத்தகங்களை தானம் செய்யாதீர்கள்
நீங்களும் யாருக்காவது புத்தகங்கள் அல்லது நூல்களை நன்கொடையாக வழங்க விரும்பினால், அவர்களுக்கு எப்போதும் புதியவற்றைக் கொடுங்கள். எந்த சூழ்நிலையிலும் கிழிந்த புத்தகங்களையோ, நூல்களையோ கொடுப்பது நல்லதல்ல. இப்படிச் செய்வதால், உங்கள் குழந்தைகளின் கல்வியில் தடை ஏற்படும்.
மேலும் படிக்க | Oct 10-16: வார ராசிபலன்! துலாம் முதல் 6 ராசிகளுக்கான பலன்கள்
கத்தரிக்கோல், கத்திகள் அல்லது வேறு எந்த கூர்மையான பொருளையும் ஒருபோதும் தானம் செய்யக்கூடாது. இவற்றை தானம் செய்வதன் மூலம், அதிர்ஷ்டம் உங்களுடனான இணைப்பைத் துண்டித்துக் கொள்ளும். அதே நேரத்தில், குடும்பத்தில் இன்னல்களும் அதிகரிக்கத் தொடங்குகின்றன.
விளக்குமாறு பரிசளிக்க வேண்டாம்
விளக்குமாறு லட்சுமி தேவியின் அடையாளமாக கருதப்படுகிறது. அதனால் மறந்தும் கூட வீட்டை சுத்தப்படுத்தும் துடைப்பத்தை தானம் செய்யக்கூடாது. வீட்டில் உள்ள துடைப்பத்தை தானம் செய்பவர்கள் வறுமையை சந்திக்க நேரிடும் என்பதுடன் பலவிதமான நோய்களும் அவர்களை சூழ்ந்து கொள்ளும் என்பது நம்பிக்கை.
வீட்டில் பயன்படுத்திய அல்லது கெட்டுப்போன எண்ணெயை தானம் செய்வது அசுபமாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்வதால், சனி தேவரின் கோபத்துகு ஆளாக நேரிடும். சனீஸ்வரரின் கோபப்பார்வை, வாழ்க்கையை நரகமாக்கிவிடும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Mars Transit: மூன்றே வாரங்களில் 'இந்த' ராசிகளின் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ