தினசரி ராசிபலன்: அனைத்து இராசியும் ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் தங்களுடைய சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. அக்டோபர் மாதம், பண்டிகைகள் நிரம்பிய மாதம். நவராத்திரி, தீபாவளி என செலவுகள் நிறைந்தது. இந்த பண்டிகை மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்குமா, பாதகங்கள் இருந்தால் எவ்வாறு கவனமாக இருப்பது என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்
செயல்களில் மந்த தன்மை அதிகரிக்கும். பிறருடைய எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். ஆன்மிகத்தில் விருப்பம் ஏற்படும். வேலை ஆட்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். நெருக்கடிகள் குறையும். 


ரிஷபம் 
வியாபாரத்தில் புதிய அனுபவமும், நல்ல லாபமும்ம் கிடைக்கும். விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது என்ற பாடத்தைக் கற்றுக் கொடுக்க உத்தியோகத்தில் சில நெருக்கடிகள் தோன்றி மறையும். நினைத்த காரியங்கள் கைகூடும். 


மிதுனம்  


பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். சுபசெலவுகள் ஏற்படும், பணிசுமை குறையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்


மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் 4 ராசிகளுக்கு பணமழை! கஜானாவை நிரப்ப சுக்கிரனும் சனியும் தயார்!


கடகம் - Cancer 


அக்டோபர் மாதம் முழுவதுமே வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சோர்வும் ஏற்படும். முன்கோபத்தைத் தவிர்த்தால் நல்லது, இல்லையெனில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்தால் கெட்டுப்போகமாட்ட்டீர்கள்.  


சிம்மம் - Leo 


பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களால் செலவு அதிகரிக்கும், ஆனால் அனுகூலம் உண்டாகும். கடன்சுமை குறையும்.


கன்னி - Virgo 


செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். டல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்பட்டால் நல்லது.


துலாம் - Libra 


குடும்பத்தில் பெரியவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினருக்கான வேலைகளில் கவனத்துடன் செயல்படவும். செய்யும் பணிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும் என்றாலும் அலைச்சல் அதிகரிக்கும்..  


விருச்சிகம் - Scorpio  


ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழும் மாதம் இது. உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். 


தனுசு - Sagittarius 


உடல்நலம் குறித்து அக்கறை கொண்டவர்களுக்கு பிரச்சனை இல்லை. அக்டோபர் மாதம் எதிர்பார்த்த அளவுக்கு உற்சாகமாக இருக்காது. சொத்து வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் சில முன்னேற்றம் ஏற்படும், உங்கள் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். பணத்தை சேமிப்பதில் அக்கறை செலுத்துங்கள்.


மேலும் படிக்க | சதயத்திற்கு மாறும் சனியால் சங்கடங்களை எதிர்கொள்ளப்போகும் ராசிகள்! பாவம் கஷ்டகாலம் தான்...


மகரம் - Capricornus 


மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். பிரச்சினைகள் தீர நண்பர்களின் உதவியும், சுற்றாத்தாரின் ஆதரவும் தேவை. பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.


கும்பம்- Aquarius 


உடலாரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும். வாழக்கைக்கு முக்கியம் எது என்ற புரிதல் இருந்தால் நிம்மதியாக இருக்கலாம். வேண்டாத விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.


மீனம் - Pisces 


உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். வீண் பிரச்சினைகளை தவிர்க்க, வாயைக் கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.


மேலும் படிக்க | சூரியனும் புதனும் பிரிவதால் யாருக்கு நன்மை? புதாதித்ய தோஷம் விலகி வாழ்வில் வளம் பெறும் ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ