அக்டோபர் மாதத்தில் கிரக யுத்தம்! சுக்கிரனின் ராசியில் பெயர்ச்சியாகும் கிரகங்கள்
Conjuction Of Planets: பல பெரிய கிரகங்கள் ஒரே ராசியில் இருப்பதை கிரக யுத்தம் அதாவது Planetary War, Stellium என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது... அக்டோபர் மாதம் இந்த கிரக யுத்தம் நிகழவிருக்கிறது
Stellium in Zodiac of venus: அக்டோபர்மாதத்தில், சுக்கிரனின் ராசியில் 4 பெரிய கிரகங்களின் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் சில ராசிக்காரர்கள் அக்டோபர் முழுவதும் கவனமாக இருக்க வேண்டும். பல பெரிய கிரகங்கள் ஒரே ராசியில் இருப்பதை கிரக யுத்தம் அதாவது Planetary War, Stellium என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. சில ராசிக்காரர்கள் இந்த கிரகங்களின் சேர்க்கையால் பலன்களைப் பெறுவார்கள் என்றால் சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பொதுவாக, செவ்வாய், குரு, சுக்கிரன், புதன், சனி ஆகிய 5 கிரகங்களுக்கு மட்டுமே கிரக யுத்த விதிகள் உண்டு. சூரியன், சந்திரன், ராகு மற்றும் கேது போன்ற கிரகங்களுக்கு இந்த விதி பொருந்தாது என்பது இந்த கிரக யுத்த விதியின் அடிப்படை ஆகும்.
செவ்வாயுடன் இணைந்துள்ள கிரகங்கள், செவ்வாயின் பாகையை விட குறைவான பாகையில் இருந்தால் அந்த கிரகங்கள், பிற கிரகங்களின் தாக்கத்தில் பலவீனமடைந்து சுயபலத்தை இழந்து விடுகின்றன. இந்த ஆண்டு நாளை தொடங்கவிருக்கும் அக்டோபர் மாதம், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அடிப்படையில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த மாதம் பல பெரிய கிரகங்களின் நிலையில் மாற்றம் ஏற்படும். கிரகங்களின் சுக்கிரனின் ராசியான துலாம் ராசியில் இணைவது அனைவரின் வாழ்விலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். துலாம் ராசியில் நான்கு பெரிய கிரகங்களின் சேர்க்கை இருக்கும். ஜோதிடத்தில், நான்கு கிரகங்களின் சேர்க்கை ஸ்டெல்லியம் என்று அழைக்கப்படுகிறது.
மேலும் படிக்க | நவராத்திரியில் புதனின் பெரிய மாற்றம்: பண மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்
ஸ்டெல்லியம் டிரான்சிட் என்றால் என்ன?
ஒரு ராசியில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இணைந்தால், அதை ஸ்டெல்லியம் என்று அழைக்கின்றனர்.
துலாம் ராசியில் கிரகங்களின் சேர்க்கை
ஜோதிட சாஸ்திரப்படி அக்டோபர் மாதத்தில் சூரியன், சுக்கிரன், புதன், கேது ஆகிய கிரகங்கள் துலாம் ராசியில் இருக்கும். துலாம் ராசியில் இந்த நான்கு கிரகங்களும் ஒன்றாக இருப்பதால் 12 ராசிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். அக்டோபர் 17ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறுகிறார்.
மேலும் படிக்க | கிரகங்களின் சஞ்சாரத்தால் தீபாவளியன்று சலசப்பு, எந்த ராசிக்கு பாதிப்பு?
அதற்கு அடுத்த நாள் அதாவது அக்டோபர் 18ம் தேதி சுக்கிரனும் இந்த ராசிக்குள் நுழைகிறார். கிரகங்களின் அதிபதியான புதன் அக்டோபர் 26ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசியில் கேது, சுக்கிரன், சூரியன் ஆகியோர் ஏற்கனவே உள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் மற்றும் கன்னி என ஆறு ராசிக்காரர்கள் இந்த கிரகங்களின் சேர்க்கையால் கவனமாக இருக்க வேண்டும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, கிரகங்களின் சேர்க்கை காரணமாக, இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் சிரமங்களை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதால், உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ