மகரத்தில் இணையும் சனி - புதன் - சூரியன் - சுக்கிரன்; ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!
கிரகப் பெயர்ச்சிகள்: டிசம்பரில் 3 கிரகங்களின் ராசி மாற்றத்தால் சதுர்கிரஹி யோகம் உருவாகும் நிலையில், இது குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
டிசம்பரில் கிரக மாற்றம்: டிசம்பரில் முக்கிய கிரகங்கள் ராசி மாறுகின்றன . புதன், சூரியன் மற்றும் சுக்கிரன் மகரத்தில் ஒன்றாக இருக்கும் நிலையி சனி ஏற்கனவே மகர ராசியில் உள்ளது. இவற்றால் இந்த ராசியில் சதுர்கிரஹி யோகம் உருவாகும். இது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், சில ராசிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
மிதுனம்:
டிசம்பரில் மூன்று கிரகங்கள் ஒன்றாக இருப்பது மிதுன ராசிக்காரர்களுக்கு பெரும் பலன் தரும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உண்டாகி வருமானம் பெருகும். ரியல் எஸ்டேட் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு உருவாகும். காதல் துணையுடன் ஒன்றாக நேரத்தை செலவிட முடியும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
மேலும் படிக்க | 30 வருடத்திற்கு பின் கும்பத்தில் சனி; நிம்மதி பெருமூச்சு விடும் ‘சில’ ராசிகள்!
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் சாதகமாக இருக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் நிரந்தர சொத்து தொடர்பான விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். சொத்துக்கள் வாங்க இந்த நேரம் சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக வாட்டி வந்த பிரச்சனை நீங்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
மகரம்
மூன்று கிரகங்களின் பெயர்ச்சி காரணமாக ஏற்படும் சுப பலன்களால், மகர ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் சிறப்பாக இருக்கும். லாபம் மற்றும் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் இருக்கும். இதனால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பணியிடத்தில் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பெற்றோரின் உதவியால் பல வேலைகள் நடக்கும். உறவினர்களின் ஆதரவும் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் நல்ல பலன்களைத் தரும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும், இதன் காரணமாக நீங்கள் மன அழுத்தம் இல்லாமல் இருப்பீர்கள். இந்த நேரத்தில், புதிய வேலையைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் உருவாகின்றன. ஆன்மீக பணிகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் மங்களகரமானதாக இருக்கும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வந்த பிரச்சனை தீரும். வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். இதன் காரணமாக பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பெயர்ச்சி காலத்தின் வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடையலாம். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
மேலும் படிக்க | விருச்சிகத்தில் 'சதுர்கிரஹி யோகம்'; பண மழையில் நனையும் ‘3’ ராசிகள்!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | 21 நாட்களில் உங்கள் தலைவிதியை மாற்ற தனது ராசியை மாற்றும் புதனின் சஞ்சாரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ