சனி வக்கிர நிவர்த்தி: புதிய ஆண்டில் முதல் இந்த ராசிகளுக்கு செல்வம் பெருகும்
ஜோதிட கணக்கீடுகளின்படி, இந்த நேரத்தில் சனி மகர ராசியில் சஞ்சரிக்கிறார். அதே சமயம் புத்தாண்டின் தொடக்கத்தில் சனிபகவான் கும்ப ராசிக்குள் நுழைவார். அத்தகைய சூழ்நிலையில், பல ராசிக்காரர்கள் சனியின் பிடியில் இருந்து விடுபடுவார்கள்.
சனி கோச்சார் 2022 ஏழரை சனி மற்றும் சனி தசை: ஜோதிட வேதங்களின்படி, சனி பகவான் நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். ஒருவர் செய்யும் செயலுக்கு ஏற்றாற்போல் சனி பகவான் கனிகளைக் கொடுப்பார் என்பது நம்பிக்கை. அதே போல சனி கிரகம் தன் இயக்கத்தை மாற்றும் போது ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்விலும் கண்டிப்பாக சில அசைவுகள் இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி அக்டோபர் 23 ஆம் தேதி சனி மகர ராசியில் சஞ்சரித்தார். அதே சமயம் 2023 ஜனவரி 17ல் கும்ப ராசிக்குள் பிரவேசிக்கப் போகிறது. சனியின் இந்த சஞ்சாரம் பல ராசிக்காரர்களுக்கு நன்மையை தரும் மற்றும் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை அதிகரிக்கச் செய்யும். எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த சனியின் சஞ்சாரத்திற்கு நன்மை கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
2023 ஜனவரியில் சனிப் பெயர்ச்சி
பஞ்சாங்கத்தின்படி, சனி பகவான் தற்போது மகர ராசியில் நகர்ந்துக் கொண்டு இருக்கிறார். அதே சமயம் 2023 ஜனவரி 17ம் தேதி இரவு 8.02 மணிக்கு மகர ராசியில் இருந்து புறப்பட்டு கும்ப ராசிக்கு செல்வார் சனி பகவான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பல ராசிக்காரர்கள் ஏழரை சனி, சனி தசையில் இருந்து விடுதலை பெறப் போகிறார்கள்.
மேலும் படிக்க | நவம்பர் மாத ராசிபலன்: இந்த ராசிகள் மீது மாதம் முழுதும் பண மழை, லாபம் பெருகும்
இந்த ராசியில் ஏழரை சனி, சனி தசை இயங்கும்
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சனி மகர ராசியில் இருப்பதால், இந்த நேரத்தில் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ஏழரை சனி நடக்கிறது. அதே சமயம் மிதுனம், துலாம் ராசிக்காரர்களுக்கு சனி தசை நடக்கிறது. மறுபுறம், கும்பத்தைப் பற்றி நாம் பேசினால், ஏழரை சனி 24 ஜனவரி 2022 முதல் நடக்க ஆரம்பிக்கும், இது ஜூன் 3, 2027 அன்று முடிவடைகிறது.
2023 ஆம் ஆண்டில், இந்த ராசிக்காரர்கள் ஏழரை சனி, சனி தசையில் இருந்து விடுதலை பெறுவார்கள்
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சனி 2023 ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழைகிறது. இது போன்ற சூழ்நிலையில் துலாம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள் சனியின் தசையில் இருந்து விடுதலை பெறுவார்கள். இத்துடன் தனுசு ராசிக்காரர்களும் ஏழரை சனியில் இருந்து விடுபடுவார்கள். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாத் துறைகளிலும் வெற்றி கிடைக்கும், சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
2023-ம் ஆண்டு ஏழரை சனி, சனி தசை இந்த ராசிகளில் நடைபெறும்
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சனியின் சஞ்சாரம் காரணமாக, சில ராசிக்காரர்கள் ஏழரை சனி மற்றும் சனி தசையில் இருந்து விடுபடுவார்கள். 2023 ஜனவரியில் சனி கும்ப ராசியில் நுழைவதால், மீன ராசியில் முதல் கட்ட ஏழரை சனி தொடங்கும். இது தவிர, சனி தசை கடகம் மற்றும் விருச்சிக ராசியில் தொடங்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | திருமணத் தடையா? ராகு தோஷமா? ஏழில் ராகுவா? ராகு தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ