ஜோதிடத்தில் ராகு-கேது கிரகங்கள் நிழல் கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என அழைக்கப்படும். ராகு - கேது கிரகங்கள் பெரும்பாலும் கெடு பலன்களை மட்டுமே தரக்கூடியவை என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. ஜாதகத்தில் ராகு-கேது தோஷம் இருந்தால், அதற்கு உடனடியாக பரிகாரம் செய்ய வேண்டும். ராகு-கேது தோஷத்தை நிவர்த்தி செய்வதில் காலதாமதம் செய்தால் வாழ்க்கையைப் பாழாகிவிடும். ராகு மற்றும் கேது ஒன்றரை வருடத்தில் பெயர்ச்சி ஆகின்றன. இந்த கிரகங்களின் பெயர்ச்சியினால் சில சமயம் சிறந்த பலன்களும் சில சமயம் அசுப பலன்களும் ஏற்படுகின்றன. ராகு, கேது தோஷம் மற்றும் ஜாதகத்தில் ராகு கேது பலவீனமாக உள்ளதர்களுக்கான அறிகுறிகள் என்ன, அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 ராகு பலவீனமாக இருப்பதற்கான அறிகுறிகள்


ராகு பெயர்ச்சியினால் பாதகமான பலன்களை சந்திக்கும் ராசிகள், அல்லது ராகு கேது தோஷம் உள்ள ராசிகளுக்கு வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படும். இதனால், குடும்ப உறுப்பினரின் உயிரிழப்பு அல்லது கடுமையான விபத்து , வழக்கில் சிக்கிக் கொள்ளுதல், திருட்டு சம்பவம், மனநோய், மற்றும் உடல் நலம் தொடர்பான தீவிரமான பிரச்சனைகள் ஆகியவை ஏற்படலாம். ஜாதகத்தில் ராகு கிரகத்தின் நிலை சாதகமாக இருந்தால், புகழ், அங்கீகாரம் ஆகியவை கிடைக்கிறது.


கேது பலவீனமாக இருப்பதற்கான அறிகுறிகள்


அதே போன்று ஜாதகத்தில் கேதுவின் நிலை பாதகமாக இருந்தால், கணையம் தொடர்பான பிரச்சனைகள், காது தொடர்பான பிரச்சனைகள், நுரையீரல் மற்றும் மூளை தொடர்பான உபாதைகள் போன்ற தீவிர உடல் நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும், உறவுகளில் பிரச்சனைகளையும், துன்பங்களையும் சந்திக்க நேரிடும். 


ராகு-கேது தோஷத்தை நீக்கும் பரிகாரங்கள்


1. ராகு-கேது தோஷம் நீங்க துர்க்கை அம்மனை தொடர்ந்து வழிபடுவது பலன் தரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் துர்க்கையை தொடர்ந்து வழிபட்டால் ராகு-கேதுவின் கோபம் நீங்கும். வாழ்க்கையின் இன்னல்கள் முடிவுக்கு வரும்.


மேலும் படிக்க | சிம்மத்தின் இணையும் சூரியன் - சுக்கிரன்; இந்த ‘4’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்!


2. ராகு-கேது தோஷத்தை நீக்க, ராகுவின் 'ஓம் ரான் ராஹவே நம' என்ற மந்திரத்தையும், 'ஓம் கேதுவே நம' என்ற கேதுவின் மந்திரத்தையும் குறைந்தது 108 முறை உச்சரிக்கவும்.


3. ராகு-கேதுவின் அசுப பலன்களைப் போக்க, 'ஓம் நமோ: பகவதே வாசுதேவாய' என்ற மந்திரத்தை தினமும் குறைந்தது 108 முறை உச்சரிப்பதும் மிகுந்த பலனைத் தரும். இதன் காரணமாக வாழ்க்கையில் ஏற்படும் வலி, வேதனைகள் குறையத் தொடங்குகிறது.


4. ராகு மற்றும் கேது தோஷத்தை நீக்க, நாய்க்கு தொடர்ந்து உணவளிப்பது எளிதான மற்றும் பயனுள்ள தீர்வாகும்.


5. ராகு-கேதுவை வலுப்படுத்த தாந்த்ரீக மந்திரத்தையும் பயன்படுத்தலாம். இதற்காக ராகுவின் தாந்த்ரீக மந்திரமான 'ஓம் ப்ராம் பிரான் ப்ரோன்ச: ராஹவே நம' மற்றும் கேது தாந்த்ரீக மந்திரமான 'ஓம் ஸ்த்ர ஸ்ட்ரீம் ஸ்ட்ரோன்ச: கேத்வே நம' ஆகியவற்றைக் குறைந்தது 11 அல்லது 18 முறை உச்சரிக்கவும். 


6. ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் ராகு கேதுவுடன் சனி கிரகமும் நல்ல பலன்களைத் தரத் தொடங்கும்.


7. ராகு-கேது தோஷங்களை நீக்க சிவ பெருமானை வழிபடுவதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்காக, ருத்ராட்ச ஜெபமாலையுடன் தினமும் குறைந்தது 108 முறை 'ஓம் நம சிவாய' என்ற மந்திரத்தை உச்சரிக்கவும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ