Rama navami 2023: ராமரின் பெயரைக் கேட்டாலே ஒழுக்கமும், நேர்மையும் பக்தர்கள் நினைவில் ஞாபகத்துக்கு வரும். இத்தகைய ராமருக்கு விழா எடுக்கும் ராம நவமி இந்த ஆண்டு மார்ச் 30 ஆம் நாளான இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் விஷ்ணு பகவான் ராமராக அவதாரம் எடுத்த நாள்.  இந்த நல்ல நாளில், சந்திரன் புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்கிறது. இந்த நட்சத்திரம் தான் செல்வம், புகழ், அங்கீகாரம், தாயின் அன்பு ஆகியவற்றைக் குறிக்கும்.  இந்த நாளில் ராமரை வணங்கி, அவருடைய மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் இழந்த செல்வம், அந்தஸ்து, அங்கீகாரத்தை மீண்டும் பெற முடியும். ஆனால் ராம நவமியின் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவைகளை அறிந்து கொள்வது அவசியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க |  ராம நவமி 2023 தேதி : பூஜை செய்ய ஏற்ற நேரமும், சொல்ல வேண்டிய மந்திரமும்


ராம நவமி அன்று செய்ய வேண்டியவை: 


ராம நவமி நாளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு ராமரை வழிபடுங்கள். இந்த நாளில் விரதம் இருப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த விரதம் மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றை தந்து, உங்கள் பாவங்களை அழிக்கிறது.விரதத்தின் போது நிறைய தண்ணீர் குடிக்கலாம்.  அயோத்தியில் உள்ள சரயு நதியில் புனித நீராடுவது கடந்த கால, நிகழ்கால பாவங்களை அழிக்கும் என்பார்கள். முடிந்தவர்கள் சென்று நீராடலாம். 


ஸ்ரீராமரின் ஸ்தோத்திரத்தை ஒவ்வொன்றாக பாராயணம் செய்யவும். முடியாதவர்கள் ராம நாமத்தை உச்சரிக்கவும். இந்த நாளில் ராம கீர்த்தனைகள், பஜனைகள், ஸ்தோத்திரங்களைத் தொடர்ந்து சொல்வது சிறந்தது. ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்து, ஏழைகளுக்கு உங்களால் முடிந்த அளவு தானம் செய்யுங்கள்.


ராமர் பிறந்தது நண்பகல் வேளை என்பதால், இந்த நேரத்தில் ராமநவமி பூஜை செய்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. இந்த நாளில் அர்ச்சனைகள் மற்றும் குறிப்பிட்ட பூஜைகள் செய்யலாம். நேர்மையாக இருக்கவேண்டும். எக்காரணத்தை கொண்டும் தகவல்களை திரித்து சொல்வதோ பொய் சொல்வதோ கூடாது. 


இந்த புனித நாளில் செய்யக்கூடாத விஷயங்கள்:


வெங்காயம், பூண்டு, இறைச்சி, மது அருந்துவதை தவிர்க்கவும். தாமச உணவுகள் கூடவே கூடாது. இந்த நாளில் உங்கள் தலைமுடியை வெட்டுவதையோ அல்லது சவரம் செய்வதையோ தவிர்க்கவும். முடியும் வெட்டிக் கொள்ள வேண்டாம். ராம நவமி அன்று மற்றவர்களை விமர்சிக்கவோ, தவறாக பேசவோ கூடாது. உங்கள் துணையை ஏமாற்றாதீர்கள். யாருக்கும் துரோகம் செய்யாதீர்கள். இத்தகைய நற்பண்புகள் மனிதராக அவதரித்துக்கும் ஒவ்வொருவரிடத்திலும் எப்போதும் இருக்க வேண்டும். 


மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: பயணங்களில் கவனம் தேவை... 2 ராசிகளுக்கு சந்திராஷ்டமம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ