அனைத்து இராசி அறிகுறிகளும் ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் அவற்றின் சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய பஞ்சாங்கம்


13-06-2023, வைகாசி 30, செவ்வாய்க்கிழமை, இன்று பிற்பகல் 12.18 மணி வரை தசமி. பின்பு ஏகாதசி. ரேவதி நட்சத்திரம் பகல் 04.15 வரை பின்பு அஸ்வினி. அமிர்தயோகம் பகல் 08.36 வரை பின்பு சௌபாக்கியம். பின்பு சோபனம்.


இராகு காலம் - மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
எம கண்டம் - காலை 09.00 முதல் 10.30 மணி வரை. 
குளிகன் - பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.


இன்றைய ராசிப்பலன் - 13.06.2023


மேஷம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் ஓரிரு நாட்கள் தாமதம் ஆகி வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாள் ஆகும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் ஊதியமும் கிடைக்க வாய்ப்பு உண்டு.


மேலும் படிக்க | வக்ர சனியால் உருவாகும் 2 ராஜயோகங்கள்: இந்த ராசிகளுக்கு 4 மாதம் பொற்காலம்... ராஜவாழ்க்கை!!


ரிஷபம் 
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி பெறும் சொந்த தொழில் முயற்சிகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைக்கலாம். கூட்டுத் தொழிலில் ஆதாயம் தருவதாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.


மிதுனம்
அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக நீங்கள் எடுக்கும். சுபகாரிய நிகழ்வுகளை சற்று தள்ளிவைப்பது நல்லது வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். ஒரு சிலருக்கு கைப்பேசியை மாற்ற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.


கடகம்
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். எதிர்பாராத தனவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்திற்காக அல்லது தொழில் நிலைக்காக அதிகபட்ச அலைச்சல்களைச் சந்திக்க நேரிடலாம். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம்.


சிம்மம்
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் மனதைக் கவ்வும் கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். சிறிய அளவில் பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவர்களை திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று தொல்லைகள் ஏற்பட்டு விலகும் என்பதால் உணவு பொருட்களில் கவனமாக இருக்கவும்.


கன்னி
வீண் அலைச்சல்களை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய தொழில் முயற்சிகள் துவக்குவது அல்லது மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது வரும். உயர்கல்வி கற்று கொண்டு இருப்பவர்களுக்கு புதிய பிரச்சனைகள் தோன்றிக் கொண்டே இருக்கும்.


துலாம்
எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் மனதை ஆட்கொள்ள வாய்ப்பு உண்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவுகளும் வீண் அலைச்சல்களும் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் இவைகளை தவிர்த்துக்கொள்வது நல்லது. கூட்டு தொழில் முயற்சிகளில் உள்ளவர்கள். 


விருச்சிகம்
உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான அடித்தளங்களை அமைத்து விடலாம். இவை தொடர்பான செயல்களை துவக்குவதற்கு இன்று நல்ல நாள் ஆகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சமூக ஊடகத்தில் அதிக நேரம் செலவிட வாய்ப்புண்டு என்பதால் உங்கள் நேரத்தில் கவனத்தை அதிகம் செலுத்தவும்.


தனுசு
நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் அனுசரணையும் உண்டாக வாய்ப்புண்டு என்பதால் முன்னேற்றத்தை நோக்கி செல்லுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதிய கல்வி வாய்ப்புகள் உங்களுக்கு தென்படும்.


மகரம்
நல்ல விஷயம் என்னவென்றால் உங்களின் கடின உழைப்பிற்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். உங்கள் வேலைகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும் அதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.


கும்பம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும் உங்கள் கடின முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயமடைவீர்கள். பெண்களுக்கு உகந்த தினமாகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் ஓரிரு நாட்கள் காலதாமதமாகி வெற்றி கிட்டுவதாக இருக்கும்.


மீனம்
நேயர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நோக்கி செல்ல வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்களால் நன்மை உண்டாகும் என்பதால் தாராளமாக நீங்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம்.


மேலும் படிக்க | மிதுனத்திற்கு செல்லும் சூரியன்! ‘இந்த’ ராசிகளுக்கு பிரச்சனைகள் ஆரம்பம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ