கும்பத்தில் சனி வக்ர பெயர்ச்சி பலன் 2023: ஜூன் 17 முதல் வக்ரத்தனமாக மாறிய சனி பகவான் நவம்பர் 4 வரை வேலையில்லா மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நல்லது செய்ய விரும்பினாலும், அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எனவே இந்த மூன்ற ராசிக்காரர்களுக்கு வக்ர சனியின் பலன் எப்படி கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷ ராசி


மேஷ ராசிக்காரர்கள் பொறுமையாகவும் கடினமாகவும் உழைக்க வேண்டியிருக்கும். வேலையில்லாமல், முதல் வேலைக்கு முயற்சி செய்யும் மேஷ ராசிக்காரர்களுக்கு, விரைவில் சனி பகவான் அவர்களின் கைகளில் ஆஃபர் லெட்டர் கொடுக்கப் போகிறார். இந்த வக்ர சனி மேஷ ராசிக்காரர்களிடம் கடினமாக உழைக்க வைக்கும், மேலும் இந்த கடின உழைப்பிற்கேற்ப பலனையும் தருவார், இதனால் மேஷ ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்திற்கு முன்பு முன்னேற்றப் பாதையை தருவார்.


மேலும் படிக்க | கடகத்திற்கு வரும் புதன்... இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் தூள் பறக்கும் - செல்வம் செழிக்கும்!


ரிஷப ராசி


ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக செய்ய நீண்ட காலமாக ஏதாவது திட்டமிட்டிருந்தால், இப்போது அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்கள் பணிகளை மிக வேகமாக செய்ய வேண்டும். உங்களுக்கு மெதுவாக வேலை செய்யும் பழக்கம் இருந்தால், உடனடியாக அதை மாற்றவும், ஏனெனில் இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் அனைத்து வேலையிலும் நினைத்த பலனைப் பெறுவீர்கள்.


மிதுன ராசி


மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை நம்பி கைகளை ஊன்றி உட்காரக்கூடாது. வேலை தேடியும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்து வந்த மிதுன ராசிக்காரர்களுக்கு திடீரென்று நல்ல வாய்ப்புகள் கிடைத்து, அத்துடன் நல்ல வேலையும்  கிடைக்கும். தேவையில்லாமல் எதிராக பேசுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் செய்யும் வேலை கெட்டுப் போகும். உங்கள் மீது யாரது ஏதேனும் குறைகளை கூறி தங்களின் கருத்தை வெளிப்படுத்தினால், அதைப் பற்றி வருத்தப்படுவதற்குப் பதிலாக, நிலைமையை உடனடியாக சரிசெய்துக் கொள்ளவும், அது நன்மை பயக்கும்.


மகர ராசி


மகர ராசிக்காரர்கள், வியாபாரத்துடன் தங்களின் உடல் நலத்திலும் அக்கறை காட்ட வேண்டும். வியாபாரத்திற்கு இந்த நேரம் சிறப்பாகவே இருக்கிறது. தொழிலில் வேர்களை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது. பொருளை வாங்குவதும் விற்பதுமான வேலையைச் செய்யும் வியாபாரிகள் இப்போது அதே பொருளைத் தயாரிக்கலாம்.


கும்ப ராசி


வணிக வர்தகம் செய்யும் கும்ப ராசிக்காரர்களுக்கு கண்ணியமாகப் பேசுவதும் புரிந்துணர்வை அதிகரிப்பதும் நன்மை தரும். தொழிலதிபர்கள் தொழில் ரீதியாக நல்ல பலனைத் தரும். சனி பகவான் உங்களுக்கு முன்னேற வாய்ப்புகளைத் தருவார். வெளிநாட்டு நிறுவனத்தில் இருந்து வேலை வாய்ப்பு வரலாம்.


மீன ராசி


மீன ராசிக்காரர்களே.. இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். விசா, பாஸ்போர்ட், விஷயங்கள் சாதகமாக அமையும். வேலையின் நிமித்தம் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இன்னும் 8 நாட்களே... புதன் உதயத்தால் இந்த ரசிகளுக்கு அதிர்ஷ்டம், சரவெடி வெற்றி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ