பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுபவர்களின் பாவங்கள அனைத்தும் நீங்கி, சகல செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியான வாழ்வைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாளான திரயோதசி திதி தினங்களில் மாலை 4.30 ம்ணி முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படும். பிரதோஷ காலம் என்பது சிவனுக்கு உகந்த காலம். சகல பாவங்களும் நீங்கி, புண்ணியங்கள் சேர பிரதோஷ வேளையில் சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்வது சிறப்பு. பலர் பிரதோஷ தினத்தில் விரதமிருந்து, சிவனை தரிசனம் செய்த பின்னர் தங்களின் விரதத்தை முடிப்பது உண்டு. சாதாரண நாளில் வரும் பிரதோஷத்தில் இருக்கும் விரதத்தை விட சனிக்கிழமைகளில் வரும் சனி மஹா பிரதோஷத்தின் போது விரதமிருந்தால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதோஷ நாளில் சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், நமசிவாயம் சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம். சனிக்கிழமை அன்று வருகிற பிரதோஷத்தை மஹா பிரதோஷம் என்று கூறுவார்கள். இந்தநாளில், சிவ பெருமானுடன் கூடவே நந்திதேவருக்கும் விசேஷ பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பிரதோஷ அபிஷேகத்துக்கு, பொருட்கள் வழங்கினால், 108 பிரதோஷம் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


பிரதோஷ தினத்தில் 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படும். பால், தயிர், சந்தனம், தேன், திரவியப்பொடி முதலான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். பாவங்களையெல்லாம் போக்கி அருளும் சனி பிரதோஷ நாளில், விரதம் இருந்து சிவாலயம் சென்று சிவ தரிசனம் செய்து வந்தால் சிறப்பு. அத்துடன் நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேகத்தை கண்ணார கண்டு தரிசித்தால்,  பாவமெல்லாம் பறந்தோடும். நாளைய தினம் மார்ச் 4ம் தேதி சனிக்கிழமை, பிரதோஷம். 


மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!


பிரதோஷ தினத்தன்று நந்திதேவருக்கு அருகம்புல்லும், சிவபெருமானுக்கு வில்வமும் சாற்றி  பிரார்த்தனை செய்தால், சிக்கல்களும், இன்னல்களும் தீரும். கஷ்டங்களும், கவலைகளும் காணாமல் போகும் என்பது உறுதி. இந்த நாளில், சிவ பெருமானுக்கு செய்யும் சிறப்பு வழிபாடும்,  வில்வ இலை கொண்டு அர்ச்சனையும், பூஜையும்  செய்வது, சந்திர தோஷத்தில் இருந்து விடுபட உதவும். அதோடு  பல வகையான கிரக தோஷங்களின் தாக்கங்களும் வெகுவாக குறையும்.


மேலும், தான, தர்மங்களை செய்ய சனி பிரதோஷம் மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் நீங்கள் செய்யும் சிறு தானம் கூட பெருமளவு பலன்களைக் கொடுக்கக் கூடியது. எனவே பன்படங்கு பலனை தரும் இந்த சனி பிரதோஷத்தி, விரதம் இருந்து, சிவ வழிபாடு மேற்கொண்டு பயனடையுங்கள். பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு நடக்கும் அபிஷேகத்தில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ