சனி வக்ர நிவர்த்தி பலன்கள் 2023: ஜோதிடத்தில் சனி தேவருக்கு முக்கிய பங்கு உண்டு. சனிபகவானைக் கண்டு பலரும் பயப்படுவார்கள். ஆனால், ஒருவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப நற்பலன்களையும் கெடுபலன்களையும் பகிர்ந்துகொடுப்பது தான் அவரது வேலை. சனி பகவான் நேரடியாகவோ அல்லது வக்ர நிலையிலோ இருந்தால், அது அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். வரும் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். அதன் பலன் வெவ்வேறு ராசிக்காரர்களுக்கு வித்தியாசமாக இருக்கும். ஜோதிடக் கணக்கீடுகளில் சனியின் இயக்கம் மிகவும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பெரும்பாலான கிரகங்களுடன் ஒப்பிடும்போது, ​​அவற்றின் இயக்கம் சற்று மெதுவாகவே இருக்கும். இதன் காரணமாக ஒரே ராசியிலும் அவர் நீண்ட காலம் தங்கியிருப்பார். ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசிகளில் ஏற்படும் மாற்றம் முழு மனித இனத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, சனிபகவானின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி சனி 2025 வரை கும்ப ராசியில் இருப்பார். 2025ல் சனி கும்ப ராசியை விட்டு வேறு ராசிக்குள் நுழைகிறார். சனியின் வக்ர நிவர்த்தியால் (Shani Margi 2023) பல ராசிக்காரர்களுக்கு இது அதிர்ஷ்ட காலம் என்று கூறப்படுகிறது. அந்த ரசியினர் யார் என்று இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிதுன ராசி (Gemini Zodiac Sign): இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவான் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவார். வியாபாரத்தில் விரிவாக்கம் மற்றும் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முதலீடு நல்ல லாபம் தரும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியமும் மேம்படும்.


மேலும் படிக்க | அக்டோபரில் பெரிய கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளுக்கு நல்ல பொற்காலம் ஆரம்பம்


சிம்ம ராசி (Leo Zodiac Sign): சனிபகவான் கும்ப ராசியில் நேரடியாக சஞ்சரிப்பதால் இந்த ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக பலன் அடைவார்கள். குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி, வேலையில் பதவி உயர்வு போன்ற நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கும் விரைவில் வெற்றி கிடைக்கும்.


துலாம் ராசி (Libra Zodiac Sign): ஜோதிடத்தின்படி, துலாம் ராசிக்காரர்கள் வியாபாரத்தில் விரிவாக்கம் மற்றும் லாபம், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி மற்றும் வீட்டில் மத நிகழ்வுகள் போன்ற இனிமையான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். தொழில் துறையில் கொடிகள் நடும் நேரம் இது. இந்த நேரத்தில், உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும்.


மகர ராசி (Capricorn Zodiac Sign): இந்த ராசிக்காரர்கள் சனியின் தாக்கத்தில் இருப்பதால் சில காலம் மனக்கவலைகள் உங்களைப் பாடாய் படுத்தலாம். இருப்பினும், அக்டோபர் 29 க்குப் பிறகு, சனி கடவுளின் அருளால், மகர ராசிக்காரர்கள் பல்வேறு துறைகளில் வெற்றி பெறலாம். சொத்து விஷயமாக இருந்தாலும், பதவி உயர்வாக இருந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன் 2024: அடுத்த ஆண்டு இந்த ராசிகளுக்கு பொற்காலம், குபேர யோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ