காதலர்களுக்கும், கணவன் மனைவிக்கும் மனத்தாங்கலை ஏற்படுத்தும் சனி வக்ர நிவர்த்தி
Sani Vakra Nivarthi November 04: வாழ்க்கைத் துணையுடன் ஈகோ தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்... இது சனியின் வக்ர நிவர்த்தி பலன்கள்
சனி வக்ர நிவர்த்தி: கர்மக்காரகர் சனீஸ்வரர் 2023 நவம்பர் 4 காலை 8.26 மணிக்கு பெயர்ச்சியாகிறார். கும்பத்தில் சனி நேர் பாதையில் திரும்புவதால், பலரின் தொழில், பணம், வியாபாரம், உறவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான நிலையில் மாற்றங்கள் ஏற்படும். கும்ப ராசியில் சனியின் நேர்மறை மாற்றம், பன்னிரண்டு ராசிகளில் அதன் தாக்கத்தை உருவாக்குகிறது என்றால், சிலரின் மண வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கையில் சங்கடத்தை ஏற்படுத்தும்.
வாழ்க்கைக்கு தேவையான திருப்தி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வலுவான மனதை வழங்கும் சனியின் பலம் ஜாதகத்தில் இருந்தால் பரவாயில்லை. இல்லாதவர்களின் நிலை மோசம் தான். மறுபுறம், ராகு, கேது செவ்வாய் போன்ற கிரகங்களுடன் மோசமான தொடர்புடன் சனி பகவான் இணைந்தால், வாழ்க்கையில் போராட்டங்கள் மற்றும் தடைகள் ஏற்படும்.
இந்த வருடம் ஜனவரி மாதம் கும்ப ராசியில் சனி நுழைந்தார். அவர் 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியில் இருப்பார். தற்போது சனீஸ்வரர் நேர் சுற்றுக்கு திரும்புகிறார். மிகவும் பலனளிக்கக்கூடியதாக இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழ்ந்தால் போதும் என்ற நிலையை சனியின் வக்ர நிவர்த்தி ஏற்படுத்தும்.
மிதுனம்: உறவைப் பொறுத்தவரை, இந்த மாதத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஈகோ தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு உறவுகள் மற்றும் நண்பர்களுடனான இணக்கத்தை பராமரிப்பது சிரமமானதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் சென்றால், சிரமமான காலத்தை கடந்துவிடலாம்.
மேலும் படிக்க | 12 ஆண்டுக்கு பிறகு குருவால் அதிசய நிகழ்வு.. அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்
கடகம்: வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவைப் பேண முடியாமல் போகலாம். மகிழ்ச்சியான தருணங்களுக்கான வாய்ப்புகள் தென்படவில்லை. உணர்வுகளையும், உறவுகளையும் சீராக பராமரிக்க முடியாமல் மனதில் சஞ்சலம் ஏற்படும். நிம்மதி வேண்டினால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரரை வழிபடுங்கள், எள் தீபம் போடவும். ள் மகிழ்ச்சியில் பெரும் பற்றாக்குறையை ஏற்படுத்தலாம்.
சிம்மம்: தேவையற்ற காரணங்களுக்காக நீங்கள் கோபப்படலாம். கோபம் வருவதை கட்டுப்படுத்துவது நல்லது. பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை அவசியம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பிரச்சனைகளால் நிம்மதி இழக்க நேரிடும்.
கன்னி ராசி: வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் அன்பான உறவுகள் இருந்தாலும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பிரச்சனைகளை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உச்சம் செல்லும் சனி.. இந்த ராசிகளுக்கு செல்வ செழிப்புடன் குபேர யோகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ