கும்ப ராசியில் சனியின் வக்ர பெயர்ச்சி: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களைத் தரும் சனி, சுமார் இரண்டரை வருடங்கள் ஒரே ராசியில் அமர்ந்திருப்பார். இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் அதே ராசிக்கு வருவதற்கு சுமார் 30 வருடங்கள் ஆகும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, தற்போது சனி அதன்  ராசியான கும்பத்தில் சஞ்சரிக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி பகவான்  2025 ஆம் ஆண்டு வரை கும்ப ராசியில் இருக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில், சனி வக்ர பெயர்ச்சி அடையும் இருக்கும் அல்லது அஸ்தமனம் மற்றும் உதயமாகும். அதேபோல், ஜூன் 29ம் தேதி இரவு 11:40 மணிக்கு கும்ப ராசியில் சனி பகவான் சஞ்சரிக்க உள்ளார். சில ராசிக்காரர்கள் சனியின் வக்ர நிலை சஞ்சாரத்தால் நன்மைகளைப் பெறுவார்கள், ஆனால், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். சனியின் வக்ர பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்வோம்...


மேஷ ராசி


சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, இந்த ராசிக்காரர்களின் தொழில் மற்றும் பொருளாதார நிலை மோசமாகப் பாதிக்கப்படும். சிறிய பணிகளுக்கு கூட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரம் செய்பவர்களும் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தொழிலை நடத்துவதில் சில சிரமங்கள் ஏற்படலாம். பொருளாதார நிலையும் மோசமாகப் பாதிக்கப்படும். இதனுடன், கடன் வாங்க வேண்டிய நிலை கூட ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள்.


சிம்ம ராசி


சிம்ம ராசிக்காரர்கள், சனியின் வக்ர பெயர்ச்சி காராணமாக பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் கடும் போட்டியை சந்திக்க நேரிடலாம். நிதி நிலைமையைப் பற்றி குறிப்பிடுகையில், நல்ல முடிவுகள் எட்டப்படாது. தேவையற்ற செலவுகளால் நீங்கள் சிரமப்படுவீர்கள். இதனுடன், பொறுப்புகள் அதிகமாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களும் சற்று கவனமாக இருக்க வேண்டும். உறவுகளும் மோசமடையலாம். திருமண வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேரிடும்.


கன்னி ராசி


கன்னி ராசியினர், சனியின் வக்ர பெயர்ச்சி காராணமாக அடுத்த 139 நாட்கள் எச்சரிக்கை தேவை. நல்ல பலனைத் தராது. சிறிய வேலைகளுக்கு கூட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீதிமன்ற விவகாரங்களில் சிக்கலை சந்திக்க நேரிடும். சட்ட விஷயங்களில் சற்று தாமதம் ஏற்படலாம். மேலும், உங்கள் எதிரி உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. மன உளைச்சலை சந்திக்க நேரிடலாம். தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளலாம். எனவே, கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. பொருளாதார நிலையும் மோசமாகப் பாதிக்கப்படும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)