இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த 2 வருடங்கள் கருணை காட்டுவார் சனிபகவான்
Shani Gochar 2023 to 2025: சனி தற்போது அதன் அசல் திரிகோண ராசியான கும்பத்தில் பெயர்ச்சி அடைந்தார் மற்றும் 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியில் தான் இருப்பார். இதன் போது சனி 3 ராசிக்காரர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வதோடு அவர்களின் அதிர்ஷ்டத்தையும் பிரகாசிக்க வைப்பார்.
ஜோதிடத்தின்படி, சனி பகவான் மிக மெதுவாக நகர்ந்து மற்றும் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுவார. இந்த வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, சனி பெயர்ச்சியாகி கும்ப ராசியில் பிரவேசித்துள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் பெயர்ச்சி அடந்தார். மேலும் 2025 வரை இந்த ராசியில் தான் இருப்பார். இதனால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் சனி பகவான். மறுபுறம், 3 ராசிக்காரர்களுக்கு சனி நல்ல பலனைத் தருவார். இவர்களுக்கு 2025 வரையிலான காலம் நிறைய முன்னேற்றம், பணம் மற்றும் வெற்றியைத் தரப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் எவை என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
சனிப் பெயர்ச்சியின் சுப பலன்கள்
ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கும்ப ராசியில் சனியின் பெயர்ச்சி மிகவும் சுப பலனை தரும். ரிஷப ராசிக்காரர்களுக்கு பலமான பலன்களைத் தரும் சனிப் பெயர்ச்சியால் ஷஷ ராஜ் யோகமும் உருவாகி வருகிறது. இவர்கள் தொழில்-வியாபாரத்தில் பெரும் வெற்றி பெறுவார்கள். அதிர்ஷ்டத்தால் அனைத்தும் நிறைவேறும். ஊடகம், திரைத்துறை, கலை, இசை போன்ற துறைகளில் தொடர்புடையவர்கள் பெரிதும் பயனடைவார்கள். வருமானம் அதிகரிக்கும். முன்னேற்றம் கிடைக்கும்.
மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் - அதிஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்!
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றம் பல நன்மைகளைத் தரும். 2025 வரையிலான காலம் இவர்களுக்கு தொழிலிலும் பணத்திலும் முன்னேற்றம் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். வியாபாரிகள் அதிக லாபம் பெறலாம். வெளிநாட்டு பயணம் செல்லலாம்.
துலாம்: சனிப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கும் உகந்தது. நீங்கள் பல வகையான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். செயல்களில் வெற்றி உண்டாகும். வியாபாரம் வளரும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ