Venus Transit 2024: சுக்கிரன் ஜனவரி 18 அன்று இரவு 09:01 மணிக்கு தனுசு ராசிக்குள் நுழைகிறார். பிப்ரவரி 12ம் தேதி வரை குரு பகவானின் ராசியான தனுசு ராசியில் சுக்கிரன் இருப்பார். சுக்கிரன் இங்கு வந்தவுடன் செவ்வாய் மற்றும் புதன் கிரகங்களூடன் இணைவார். சுக்கிரன் சுப பலன் தரும் கிரகமாக கருதப்படுகிறது. சுக்கிரன் கிரகம் குறிப்பாக ஆடம்பர வாழ்க்கை, பொருள் வசதிகள், உலக இன்பங்கள் மற்றும் வாழ்க்கையில் அன்பு மற்றும் நல்லிணக்கத்தை வழங்கும் காரணியாக கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை வலுவாக இருந்தால், அந்த நபர் வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் பெறுவார். திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார். வாழ்க்கையில் செல்வ வளம் பெருகி, மகிழ்ச்சி கிடைத்து, அனைத்து ஆசைகள் நிறைவேறும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடக ராசி


அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உங்களின் கடின உழைப்பின் பலன் நிச்சயம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு, சம்பள உய்ர்வைப் பெறுவார்கள். தொழில் துறையில் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள். உங்களின் கடின உழைப்பின் பலன் நிச்சயம் கிடைக்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் (Health Tips) மேம்படும்.


துலாம்


நீங்கள் புதிய நபர்களுடன் தொடர்பு கொள்ளலாம், அவர்களுடன் நீங்கள் நல்ல உறவை ஏற்படுத்துவீர்கள், மேலும் பல்வேறு துறைகளிலிருந்தும் நீங்கள் நன்மைகளைப் பெறுவீர்கள். கைக்கும் வராமல் இருக்கும் பணம் மீட்கப்படும். வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். மேலும் பல வருமான ஆதாரங்களும் அதிகரிக்கும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கனிவான பேச்சுக்களால் காரியத்தை சாதிப்பீர்கள். பெண்கள் தொடர்பான ஆடம்பர பொருட்கள் அல்லது பொருட்களை விற்கும் தொழிலதிபர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள் மற்றும் லாபம் தொடர்பான விஷயங்களில் சில புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.


தனுசு


மென்பொருள் நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நீங்கள் வெளிநாடு செல்ல திட்டமிட்டால், அதிலும் வெற்றி பெறலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. செல்வம் பெருகும். தினசரி வருமானம் உயரும். வியாபாரத்தில் முதலீடு செய்து லாபம் அடைவீர்கள். பணம் தொடர்பான கவலைகள் நீங்கும். ணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த நிதி சார்ந்த வேலைகளைச் செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டத்தில், உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.


மீனம்


அலுவலகத்தில் மேலதிகாரி அல்லது சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம், ஏனென்றால் அவர்களின் ஆதரவு, உங்கள் முன்னேற்றத்திற்கு ஒரு காரணியாக இருக்கும். முதலீடுகளால் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வணிகம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் சவால்களை சந்திக்க நேரிடலாம், இதில் நீங்கள் வெற்றி பெற்றால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்க சரியான நேரம். 


சுக்கிர பகவானை மகிழ்விப்பது எப்படி?


சுக்கிர பகவானின் அருளை பெற எளிதான வழி உங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதுதான். சுத்தமான ஆடைகளை அணிந்தால் சுக்கிர பகவானின் அருள் கிடைக்கும். மேலும், நறுமண வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதன் மூலம்  ஜோதிட சாஸ்திரப்படி, சுக்கிரனின் ஆசி பெற, சுக்கிரனின் விதை மந்திரமான ‘ஓம் ஷும் சுக்ராய நமஹ’ என்ற மந்திரத்தை தினம் 108 முறை ஜபிக்க வேண்டும்.


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | உத்திராடத்தில் சூரியன் பெயர்ச்சி... 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ