துக்கங்களும், வேதனைகள் நீங்கும்.. 18 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு சனியால் ஜாக்பாட்
Saturn Transit 2023: சனி வரும் ஒன்றரை ஆண்டுகள் கும்ப ராசியில் இருப்பார். சனிபகவானின் அருளால் சில ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் வரப்பிரசாதமாக அமையும். இந்த ராசிகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
சனி பெயர்ச்சி பலன்கள் 18 மாதம் எப்படி இருக்கும் 2023: வேத ஜோதிடத்தில், சனி மிகவும் மெதுவாக நகரக் கூடிய கிரகமாக விவரிக்கப்பட்டுள்ளது. சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் இரண்டரை வருடங்கள் ஆகும். இப்படி மொத்தம் 12 ராசிகளையும் சனி சுற்றி வர சுமார் 29.5 வருடங்கள் ஆகும். தற்போது சனி கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கிறது. அதுமட்டுமின்றி சனி 2025 வரை இந்த ராசியில் இருக்கப் போகிறார். சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு, சனி கும்ப ராசியை விட்டு விலகி மீன ராசியில் நுழைவார். சனியின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு சனியின் ஏழரை வருடங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். எனவே வரும் 18 மாதங்களில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனிபகவான் அருள் புரியப் போகிறார் என்பதை தெரிந்து கொள்வோம்.
அடுத்த 18 மாதம் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக அமையும்
மேஷ ராசி (Aries Zodiac Sign) - கும்ப ராசியில் சனியின் இருப்பிடம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதன் போது நீங்கள் நிதி ரீதியாக முன்னேற்றம் அடைவீர்கள். கும்ப ராசியில் சனி இருப்பதால் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சமூக கௌரவம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் உங்கள் தடைபட்ட வேலைகள் முடிவடையும்.
மேலும் படிக்க | நேருக்கு நேர் வரும் சூரியன் சனி: இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம், வெற்றிகள் குவியும்
ரிஷப ராசி (Taurus Zodiac Sign) - கும்ப ராசியில் சனி இருப்பது ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதன் போது நீங்கள் மிகவும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வரவிருக்கும் 18 மாதங்கள் உங்களுக்கு பலனளிக்கும். சனிபகவானின் அருளால், உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். இதனுடன் வியாபாரிகளும் லாபம் அடைவார்கள்.
சிம்ம ராசி (Leo Zodiac Sign) - சிம்ம ராசிக்காரர்களுக்கு 2025 வரையிலான காலம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். சனிபகவானின் அருளால் அனைத்து துறைகளிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் சனி தேவன் உங்கள் வேலைகளில் வெற்றி பெற வைப்பார். பணியிடத்தில் புதிய சாதனைகளைப் பெறுவீர்கள். பணம் தொடர்ந்து குவியும்.
துலாம் ராசி (Libra Zodiac Sign) - துலாம் ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் நிலை வரத்திற்குக் குறைவாக இருக்காது. இந்த ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு வரை சாதகமான பலன்கள் கிடைக்கும். சனிபகவானின் அருளால் உங்களின் பொருளாதார பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
விருச்சிக ராசி (Scorpio Zodiac Sign) - விருச்சிக ராசிக்காரர்களுக்கு வரும் 18 மாதங்களுக்கு சனிபகவான் மிகவும் சுப பலன்களைத் தருவார். பண விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். கடன் தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம். பொருளாதார நிலை மேம்படும். செயல்களில் வெற்றி பெறுவீர்கள். இதனுடன் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அமையும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ