Sukran Peyarchi In Sagittarius: ஜோதிடத்தில், சுக்கிரன் ஆடம்பர வாழ்க்கையை அள்ளித் தரும் சுப கிரகமாக கருதப்படுகிறது.  செல்வம், ஆடம்பரம், அன்பு, அழகு, போன்றவையின் காரணி சுக்கிரன் ஆவார். ஜாதகத்தில் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அரசனைப் போல வாழ்க்கையும், அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். இது தவிர, சுக்கிரனின் நிலையில் ஏற்படும் மாற்றம் 12 ராசிக்காரர்களிலும் மாற்றத்தை கொண்டு வரும். குறிப்பாக காதல், திருமண வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுவார். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அசுப தாக்குமும் ஏற்படலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கிரன் அடுத்த மாதம் 7 நவம்பர் 2024 அன்று, தனுசு ராசிக்குள் நுழைகிறார். தனுசு ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறை மற்றும் எதிர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். சுக்கிரன் பெயர்ச்சியினால் தீபாவளிக்கு பிறகு  குறிப்பிட்ட மூன்று ராசிகள் வரும் நாட்களில் பிரச்சனைகளை சந்திக்கக் கூடும். 


மேஷம் (Aries)


சுக்கிரனின் சஞ்சாரத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இந்த நேரத்தில் முதலீடு செய்வது சரியாக இருக்காது, நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தகவல் தொடர்பு திறன் இல்லாததால் மாணவர்களின் தன்னம்பிக்கை குறையும்.  தொடர்ந்து சில நாட்கள் காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும். உங்கள் துணையுடன் பழைய விஷயங்களில் வாக்குவாதம் ஏற்படலாம்.இது தவிர ஆசிரியரின் அதிருப்தியையும் சந்திக்க நேரிடலாம். 


தனுசு (Sagittarius)


தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீடுகளால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இது தவிர தொழில் விரிவாக்கத்துக்காக போடப்பட்ட திட்டங்களும் குறித்த நேரத்தில் நிறைவேறாததால் பதற்றம் ஏற்படும்.  தீபாவளிக்குப் பிறகு பலத்த காயங்கள் ஏற்படலாம். நீங்கள் தொடர்ந்து பல நாட்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும். இதன் காரணமாக மன உளைச்சல் ஏற்படும். வேலை செய்பவர்கள் வரும் நாட்களில் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும்.


மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: தீபாவளிக்கு பின் இந்த ராசிகளுக்கு பொற்காலம்... ராஜவாழ்க்கை வாழ்வார்கள்


கும்பம் (Aquarius)


கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவரை அதிகமாக நம்புவது பெரிய அளவில் பாதிப்பையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தும். நிதி இழப்பு ஏற்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இருக்காது., இதன் காரணமாக இளைஞர்களின் மனதில் குழப்பம் இருக்கும். ஆரோக்கியம் மோசமடையக்கூடும். பழைய நோயின் தாக்கம் முதியவர்களை மீண்டும் தொந்தரவு செய்யும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | நரக சதுர்தசி... சொர்க்கம் போன்ற வாழ்வைப் பெறும் சில ராசிகள்