சூரிய பெயர்ச்சி 2022: ஜோதிடத்தில் சூரிய பகவானுக்கு தனி இடம் உண்டு. ஆன்மா, தந்தை, மரியாதை, வெற்றி, முன்னேற்றம் மற்றும் அரசு மற்றும் அரசு சாரா துறைகளில் உயர் சேவை ஆகியவற்றின் காரக கிரகமாக சூரியன் கருதப்படுகிறது. ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகிறது.  கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன், 30 நாட்களுக்குப் பிறகு, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். ஆகஸ்ட் 17ம் தேதி அதாவது இன்று,  சூரியன் கடக ராசியை விட்டு சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார். அவர்கள் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுகிறார்கள், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட சாஸ்திரப்படி ஆகஸ்ட் 17ம் தேதி காலை 07:37 மணிக்கு சூரியன் கடக ராசியிலிருந்து விலகி சிம்ம ராசியில் பிரவேசிக்கப் போகிறார். இங்கே செப்டம்பர் 17 வரை தனது சொந்த ராசியான சிம்மத்தில்சூரிய பகவான் இருக்கப் போகிறார். இங்கிருந்து பிறகு சூரியன் கன்னி ராசியில் பிரவேசிப்பார். சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பதால், ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சில அசுப பாதிப்புகள் ஏற்படும். அதே சமயம், சில ராசிக்காரர்கள் அளப்பரிய பலனைப் பெறுவார்கள். அன்னை மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தைப் முழுமையாக பெற்று, மகிழ்ச்சி, செழிப்பு, வளம், வெற்றி என அனைத்தையும் பெறுவார்கள்.


மேலும் படிக்க | Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!


சூரியனின் பெயர்ச்சியினால் சிறப்பான பலன்களை பெரும் சில ராசிகள் இவை தான்:


ரிஷபம்:
 
சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பது இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் புதிய வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் உத்தியோகம் போன்றவற்றில் பெயரும் புகழும் கிட்டும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். அன்னை மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள், மேலும் வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி பெறுவீர்கள்.


சிம்மம்:


சூரியன் இன்று தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பிரவேசிக்க உள்ளார். எனவே, இந்த ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகவும் லாபகரமானதாக இருக்கும். சிம்ம ராசிக்காரர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. மக்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் அடைவார்கள். மேலும் பொருளாதார நிலை மேம்படும்.


கன்னி:


ஜோதிட சாஸ்திரப்படி கன்னி ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகவும் பலன் தரும். சூரியன் பெயர்ச்சி காலத்தின் வெளியூர் பயணம் ஏற்படலாம். பெயர்ச்சி காலத்தின் போது தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சூரிய சஞ்சாரம் இவர்களுக்கு அரசு அல்லது வெளிநாட்டில் இருந்து பணம் கொடுக்கும்.


தனுசு:


தனுசு ராசிக்காரர்களுக்கும் சூரியப் பெயர்ச்சி சுபமே. வேலைத் தொழிலுடன் தொடர்புடையவர்கள் இந்த காலகட்டத்தில் சாதகமான பலன்களைக் காண்பார்கள். சூரியபகவானின் அருளால் எல்லா காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள்.


கும்பம்:


கும்ப ராசிக்காரர்களுக்கும் இந்த நேரம் நன்றாகவே இருக்கும். கும்ப ராசிக்காரர்களும் சூரியனின் ராசி மாற்றத்தால் பலன் அடைவார்கள். இந்த நேரத்தில் எதிரிகளை எளிதாக வெற்றி பெறுவார்கள். பெயரும் புகழும் அதிகரிக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ