Sun Transit In Rohini Nakshatra: கிரகங்களின் ராஜாவான சூரியன் மே 25, 2023 அன்று 21:12 மணிக்கு ரோகிணி நட்சத்திரத்தில் இடப் பெயர்ச்சி அடைந்தார், அதே நாளில் தொடங்கி ஜூன் 3, 2023 அன்று இந்த பெயர்ச்சி முடிவடையும். மேலும் ரோகிணி நட்சத்திரம் சந்திரனால் ஆளப்படுகிறது, எனவே இதனால் சில ராசிக்காரர்கள் பாதிபபுகளை சந்திப்பார்கள். அந்த ராசிக்காரர்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியாகி ரிஷப ராசியில் இரண்டாம் வீட்டில் நீடிப்பார். இந்த ராசிக்காரர்கள் செல்வம் மற்றும் இனிமையான உறவுகள் கொண்டவர்கள். ஆனால் இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்கள் கோபத்தபுடனும், உடல்நிலையில் பிரச்சனையையும் சந்திப்பார்கள். இது உங்களுக்கு கவலையாக இருக்கலாம். இரண்டாவது வீட்டில் சூரியன் இருப்பதால் கடுமையான சொற்களை மற்றவேகள் மீது பயன்படுத்துவீர்கள். உங்கள் நோக்கங்களை மாற்றவரகள் தவறாகப் புரிந்து கொள்ளலாம் மற்றும் உங்களுக்கு இதனால் புதிய எதிரிகள் உருவாகலாம்.


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி இந்த ராசிகளை 5 மாதம் படுத்துவார், நஷ்டம், கஷ்டம், சிக்கல் ஏற்படும்


ரிஷப ராசி: சூரியனின் ராசி மாற்றத்தின் தாக்கம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்காது. அவர்கள் பண பரிவர்த்தனையை கவனமாக செய்ய வேண்டும். குறிப்பாக வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இல்லையெனில் பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், வேலை தேடுபவர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க மாட்டார்கள். ஆனால் முதலீடு செய்வதில் கவனமாக இருங்கள். 


கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு இரண்டாம் வீட்டில் சூரியன் ஆட்சி பெற்று 11ம் வீட்டில் சுபயோகம் பெற்று தன யோகத்தை உண்டாக்கும். இந்த மக்கள் பெரும்பாலும் வருமான ஆதாரங்களில் சிரமப்பட வேண்டியிருக்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துவார். அதாவது சில நோய்கள் மற்றும் மன அழுத்தங்கள் உங்களைச் சூழ்ந்துகொள்ளலாம். பணியிடத்தில் எதிரிகளிடமிருந்து விலகி இருங்கள், இல்லையெனில் அவர்கள் சில பிரச்சனைகளை உருவாக்கலாம். எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவதற்கு முன்னரும் பல முறை அதை படித்து பாருங்கள். பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் கவனமாக அதன் விளைவுகளை பற்றி யோசித்து பின் முடிவெடுக்கவும். 


சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன் 1ம் வீடு அல்லது லக்னத்தின் அதிபதியாகி ரோகிணி நட்சத்திரத்தில் இருந்தால் 10ம் வீட்டில் அமர்வார். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு அற்புதமாக இருக்கும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் தங்கள் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பார்கள். மொத்தத்தில், இக்காலம் மிகவும் அட்டகாசமாக இருக்கும்.


தனுசு ராசி: தனுசு ராசியின் 6 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் கடின உழைப்பிற்கான முழு பலனைப் பெறுவார்கள். உங்கள் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். உங்கள் மீதான மரியாதை இக்காலத்தில் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். இராணுவத்தில் இருப்பவர்கள் இக்காலத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். விளையாட்டு துறையில் இருப்பவர்கள், இக்காலகட்டத்தில் நற்பலனைப் பெறுவார்கள். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஞாயிற்றுக்கிழமை பரிகாரங்கள்..! சூரிய பகவானின் அருளால் செல்வம் கிடைக்கும்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ