சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: சனி பகவானின் வக்ர பெயர்ச்சி மகரம், கும்பம் மற்றும் மீன ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் பலவித பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனிபகவான் ஜூன் 17ஆம் தேதி வக்ரமடைந்து நவம்பர் 4 ஆம் தேதி வக்ர நிவர்த்தியடைகிறார். நவ கிரகங்களில் சனிபகவான் மெதுவாக நகரும் கிரகம் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் பயணம் செய்யும் சனிபகவான் சில மாதங்கள் வக்ரமடைந்தார். இது மூன்று ராசிக்காரர்களும் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அலட்சியமாக இருக்க வேண்டாம். அந்த ராசிக்காரர்கள் எவை என்பதை இந்த பதிவில் அறிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி பகவான் சூரியனுக்கு 251 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று 109 இருக்கும் போது வக்ர நிவர்த்தியடைவார். சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும். இதனை எளிதாக அறிய சூரியனுக்கு 9ல் சனி வரும் போது வக்ரம் பெறுகிறார் சூரியனுக்கு 5ஆம் இடத்திற்கு சனி வரும் போது வக்ர நிவர்த்தியடையும். கும்ப ராசியில் தற்போது உள்ள சனிபகவான் சூரியனுக்கு 9ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். சனி வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு உடல் நலத்தில் ப்ராப்ளம் ஏற்படுத்துவார் என்று பார்ப்போம்.


மேலும் படிக்க | வித்யாகாரகன் புதனின் பெயர்ச்சி... சிலருக்கு சந்தோஷம்... சிலருக்கு சங்கடம்..!


மகர ராசி: சனி வக்ர பெயர்ச்சியால், மகர ராசிக்காரர்களுக்கு தங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும், வேலையுடன் உடற்பயிற்சியிலும் அதீத கவனம் செலுத்த வேண்டும், உணவுக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். பற்களை கவனித்துக் கொள்ள வேண்டும். முகத்தில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால், இரு சக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிய வேண்டும். கண்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம், நீண்ட நாட்களாக கண்களை பரிசோதிக்காமல், கண்ணாடி அணியாமல் இருந்தால், இப்போது ஒருமுறை கண்களை சரி பார்க்கவும்.


கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடப்பதால் மன உளைச்சல் ஏற்படும். வக்ர சனியின் சில கொடுமைகள் அதிகரிக்கும், ஆனால் தீங்கு என்று கருதுவதற்கு பதிலாக, அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். உதாரணமாக, சில வேலைகளுக்காக மருத்துவர் உங்களை பலமுறை எச்சரித்திருந்தால் அல்லது அதைத் தவிர்க்கச் சொன்னால், அதைப் பின்பற்ற வேண்டும் இல்லையெனில் இழப்பு ஏற்படும். இந்த லக்னம் அல்லது ராசிக்காரர்கள் போதை மருந்தை உட்கொண்டால், பலமுறை மதுவைக் கைவிடச் சொல்லியும் அவர்களால் கைவிட முடியவில்லை என்றால், சனி பகவான் அப்படிப்பட்டவர்களுக்கு இப்போது ஒரு பயத்தைக் காட்டும் அளவிற்கு கெட்ட செய்தியைக் கொடுப்பார். உடல் நலத்தில் நெருக்கடி ஏற்படும்.


மீன ராசி: சனி வக்ர பெயர்ச்சியால், மீன ராசிக்காரர்கள் செர்விகல் ஸ்பான்டைலிடிஸ், கழுத்து வலி, தலையின் பின்பகுதியில் வலி, உடல் விறைப்பு போன்ற உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம், எனவே தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள். இது உங்களுக்கு நன்மை பயக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சந்திரன்-குரு சேர்க்கை: 48 மணிநேரத்திற்குப் பிறகு இந்த ராசிகளுக்கு பண மழை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ