உங்கள் வாழ்க்கை துணையுடன் புதிதாக ஒரு வாழ்வை ஆரம்பிக்கும் வேளையில் அவருடன் மனப்பொருத்தமும் ஜாதகப்பொருத்தமும் அமைவது மிக முக்கியம். இதை போலவே முக்கியமானதாக கருதப்படுவது, கணவர் அல்லது மனைவி வழி உறவினர்களுடனான பொருத்தம். பொதுவாகவே பலருக்கு தங்களது மாமியார்-மாமனாருடன் ஒத்து போகாது. அதிலும் ஒரு சில ராசியை சேர்ந்தவர்களுக்கு அவர்களின் கிரகப்பலன்களின் படி கணவர் அல்லது மனைவி வழி உறவுகளுடன் ஒட்டவே ஒட்டாது. ஒவ்வொரு ராசியை சேர்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு வகையான குணாதிசயம் இருக்கும். இதனால் சமயங்களில் இவர்களின் நெருங்கிய உறவுகளுக்குள்ளேயே பல பிரச்சனைகள் உண்டாகும். 12 ராசிகளில் 6 ராசிக்காரர்களுக்கு மட்டும் தங்களது வாழ்க்கை துணையின் உறவினர்களுடன் சுத்தமாக செட் ஆகாதாம். அவர்கள் யார்..?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.மேஷம்:


மேஷ ராசிக்காரர்கள் சுதந்திரமான இயல்பை உடையவர்கள். அவர்கள் எந்த விஷயத்திலும் முன்னிலை வகிக்க பயப்படுவதில்லை. தாங்கள் செய்யும் விஷயங்களில் தங்களை உறுதிப்படுத்திக் கொள்ள எப்போதும் ஆர்வமாக உள்ளவர்கள் இவர்கள். இருப்பினும், இந்த இவர்களின் மன உறுதியினை சிலர், பல சமயங்களில் வேறு மாதிரியாக எடுத்துக்கொள்வர்.  பிற்போக்கு தனமாக யோசிக்கும் மாமியார்களுக்கும் இவர்களுக்கும் சுத்தமாக செட் ஆகாது. ஆனாலும், கொஞ்சம் பொறுமையையும் புரிதலையும் அணுகினால் தங்களது கணவர் வழி உறவினர்களுடன் இவர்கள் சுமூகமான உறவை கையாளலாம். 


2.ரிஷபம்:


சனி கிரகத்தால் ஆளப்படும் ராசி, ரிஷபம். இதனால் இவர்களுக்கு எந்த தடையுமின்றி காதல் கணவர் கிடைப்பர். ஆனால், கணவர் வழி உறவுகளுடன் இவர்களுக்கு ஒத்துபோவது கடினம். இவர்களுக்கும் கணவர் அல்லது மனைவி வழி உறவினர்களுக்கும் ஒரு சில விஷயங்கள் மட்டுமே பொதுவானதாக இருக்கும். அவர்களுடனான மனப்பூசல்களை தவிர்க்க, சமயங்களில் சண்டைகளை சமாதானம் செய்யும் நிலை வரலாம். மேலும், கொஞ்சம் பொறுமையையும் கடை பிடிக்கலாம். 


மேலும் படிக்க | செப்டம்பர் அபூர்வ கிரக பெயர்ச்சிகள்.. இந்த ரசிகளுக்கு செல்வம் பெருகும்


3.மிதுனம்:


மிதுன ராசி உடையோர் அதிகம் பேசுவதற்கும் பலர் முன்னிலையில் தங்களது திறமைகளை வெளிக்காட்டுவதற்கும் தயங்காதவர்களாக இருப்பர். இது, அவர்களை சிறந்த பேச்சாளர்களாக மாற்றும். ஆனால், இதுவே சமயங்களில் அவர்களது வாழ்க்கை துணை வழி உறவுகளுடன் மனக்கசப்புகளையும் உண்டாக்கலாம். அமைதியாக இருக்க விரும்பும் மாமியார் மற்றும் மாமனார்களுடன் இவர்களுக்கு ஒத்துப்போகாது. எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதை விட்டுவிட்டு கொஞ்சம் சிலர் பேசுவதை கேட்கவும் செய்தால் இவர்கள் தங்களது உறவுகளை காப்பாற்றி கொள்ளலாம். 


4.சிம்மம்:


சிம்ம ராசிக்கரர்களுக்கு தலைமை உணர்வு தலை தூக்கி நிற்கும். இவர்களுக்கு பிறரை கவரும் திறனும் அதிகமாகவே இருக்கும். இதை பலர் ரசித்தாலும் சிலர் எரிச்சலூட்டும் செயல்களாக இதை பார்ப்பர். இதனால், கணவர் அல்லது மனைவி வழி உறவுகளுடன் ஒத்துப்போகாது. இந்த ராசியை சேர்ந்தவர்கள் சிறிது தன்மையாக நடந்து கொண்டால் உறவுகளுக்குள் மனக்கசப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். 


5.விருச்சிகம்:


விருச்சிக ராசி உடையோர் தங்களது உண்மையான முகத்தை அவ்வளவு எளிதில் காண்பித்து விட மாட்டார்கள். எப்போதும் ஒரு வித கவசத்துடனே இருக்கும் இவர்களை பார்த்தால் இவர்கள் ஏதோ ஒரு மர்மத்தை ஒளித்து வைத்துள்ளது போலவே பலருக்கு தோன்றும். இதனால் இவர்களது வாழ்க்கை துணை வழி உறவுகள் பல சமயங்களில் கோபப்படுவர். பலர், பிறர் என்ன நினைக்கின்றனர் என்பதை வாய் திறந்து கூற வேண்டும் என்று நினைப்பர். அப்படி நினைக்கும் உறவுகளுக்கு விருச்சிக ராசிக்காரர்களின் செயல்கள் கோபத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க, விருச்சிக ராசி உடையோர் தங்கள் கூட்டுக்குள் இருந்து வெளியே வந்து பேச முயற்சி செய்யலாம். 


6.மகரம்:


உறவுகளை விட தங்களது கனவுகள் மற்றும் லட்சியங்களை உயர்வாக எண்ணுபவர்கள், மகர ராசிக்காரர்கள். இவர்களின் இந்த எண்ணம் பலரை கவர்ந்தாலும் இவர்களுடன் நெருங்கிய உறவாக இருப்பவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது, தவறான புரிதல்களுக்கு வழி வகுக்கும். இதை தவிர்க்க அவர்கள், தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதில் கவனம் செலுத்தலாம். 


மேலும் படிக்க | ஆகஸ்ட் 29 ராசிபலன்... எந்தெந்த ராசிகளுக்கு இன்று நன்மை வந்து சேரும்?


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ