ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உள்ளன. அதன்படி, செல்வத்தை வாரி கொடுக்கும் குபேரக் கடவுளின் சிறப்பு அருள் சில ராசிகளுக்கு மட்டுமே அதிகம் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த ராசிக்காரர்கள் தாங்கள் செய்யும் வேலையில் அதிக வெற்றியைப் பெறுவார்களாம். அறிவில் மட்டுமல்லாது செல்வத்திலும் வல்லவர்களாக இருப்பார்கள். யார் அந்த 4 ராசிகள் என்பதை தெரிந்து கொள்வோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துலாம்


இந்த ராசிக்காரர்கள் செல்வத்தின் கடவுளான குபேரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் இயல்பில் மிகவும் பிடிவாதமானவர்கள். அதன் காரணமாக இவர்களும் எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் பணம் சம்பாதிப்பதில் வல்லுனர்களாகவும் கருதப்படுகிறார்கள். இவர்களிடம் செல்வத்திற்கு குறை இருக்காது. 


மேலும் படிக்க | குரு அருளால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை


கடகம்


இந்த ராசிக்காரர்கள் புத்தி கூர்மை மிக்கவர்கள். சில வேலைகளைச் செய்ய முடிவெடுத்தால், அதை முடித்த பின்னரே அடுத்த வேலைகளில் கவனம் செலுத்துவார்கள். இலக்கில் விடாப்பிடியாக இருக்கும் இந்த ராசிக்காரர்கள் சம்பாதிப்பதிலும், பணம் சேர்ப்பதிலும் மற்றவர்களை விட முன்னிலையில் உள்ளனர்.


விருச்சிகம்


இந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள். எந்த வேலையையும் மிகுந்த கவனத்துடன் செய்வார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டமும் மிகவும் நன்றாக வேலை செய்யும். இதனால் இந்த ராசிக்காரர்கள் பொதுவாக எல்லா துறைகளிலும் வெற்றி பெறுவார்கள்.


மகரம்


இந்த ராசிக்காரர் அதிர்ஷ்டத்தில் பணக்காரராக இருப்பார்கள். கடின உழைப்பால் இவர்களிடத்தில் இருக்கும் என்பதால், அதிர்ஷடமும் அதிகமாக கைகொடுக்கும். இதனால் எளிதில் எதிலும் வெற்றி பெறுவார்கள். லட்சுமி தேவி மற்றும் செல்வத்தின் கடவுளான குபேரின் சிறப்பு அருள் இவர்களுக்கு அதிகம் இருக்கும்.


மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ