புதுடெல்லி: சூரியனும் புதனும் இணைந்திருப்பதால் வர்கோத்தம யோகம் ஏற்பட்டுள்ளது. இது சில ராசிகளுக்கு சுபமானது என்றால் சில ராசியினருக்கு கெடு பலன்களைக் கொடுக்கும். முதலில் வர்கோத்தமம் என்றால் என்ன, இந்த யோகம் ஏன் சிலருக்கு தீமையை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். சர ராசியில் முதல் நட்சத்திர பாதமும், ஸ்திர ராசியில் 5வது நட்சத்திர பாதமும், உபய ராசியில் 9வது நட்சத்திர பாதமும் வர்கோத்தம நட்சத்திர பாதங்கள் ஆகும். வர்க்க உத்தமம் அல்லது வர்கோத்தமம் என்று இது அழைக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வர்கோத்தமம் அடையும் கிரகங்கள், தனது ஆதிபத்தியங்களை வலுவாக செய்யும் என்பது மட்டுமே அடிப்படை உண்மை. புதன் வர்கோத்தமம் பெற்றால் அறிவாற்றல் மேம்படும் என்பது பொதுவான பலனாக சொல்லப்பட்டாலும், ராசிக் கட்டத்தில் 8ம் இடத்தில் அமரும் புதன் , அறிவைத் தந்தாலும், வாய் வார்த்தைகளை கடுமையாக பேசச் செய்து மனத்தாங்கல்களை ஏற்படுத்தும். 


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர்


வர்கோத்தமம் பெறுகின்ற கிரகம், ஆட்சி பெற்றதை போன்ற நிலை அடையும். ஆட்சி பெற்ற கிரகம் வர்கோத்தமம் பெற்றால் , ஆட்சி நிலையை விட இரு மடங்கு வலிமை பெற்றதாக அர்த்தம். வர்கோத்தமம் பெறும் கிரகங்கள் லக்னத்திற்கு ஏற்றாற்போல் பலன்களைக் கொடுக்கும். 


கிரகங்கள் அளவுக்கு அதிகமான சுபதன்மையினையை பெறுவதும், அதிக சுபதன்மை பெற்ற இரண்டு கிரகங்கள் சேர்ந்து இருப்பதும் தவறு என்பதால், சுபத்தன்மை பெற்ற சூரியனும், புதனும் இணைந்திருப்பதால் சில ராசிகளுக்கு கெடுபலன்கள் ஏற்படும். 


வர்கோத்தம யோகத்தால் நான்கு ராசிக்காரர்களுக்கு நிதி சார்ந்த பின்னடைவுகள் ஏற்படும். அந்த நான்கு ராசிக்காரர்கள் யார் என்பதை இங்கே காண்போம்.


மேலும் படிக்க | சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம் 


ரிஷபம்:  7 இல் சனி அனுஷம் 4 ஆம் பாதத்தில் வர்கோத்தமம் பெற்ற புதன் என்றால், திருமண தடையும், பண இழப்பும் ஏற்படும்.


கும்பம் : கடகத்தில் புதன் வர்கோத்தமம் ஆவது தன லாபத்தை அதிகரித்தாலும், கடன்களையும் தருவார். இதே குருவினை சனி பார்த்தால் கடன்களை கொடுக்கும்.


சிம்மம்: புதன் சிம்மத்திற்கு வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகருக்கு பணக்கஷ்டம் ஏற்படும். இது பொதுப்பலனாக இருந்தாலும், லக்னத்திற்கு ஏற்ப அது கூடலாம் அல்லது குறையலாம். விருச்சிகம்: புதன் வர்கோத்தமம் பெற்று, 6 இல் சனி இருந்தால் கடன்களைக் கெடுப்பார். கடன் வாங்குவதிலும் சிரமங்கள் ஏற்படும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு ஆபத்து, சிலருக்கு ஆதாயம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ