வாழ்க்கையில் சிலர் என்ன செய்தாலும் வெற்றி அடைய முடியாமல், துன்பம் நிறைந்ததாக இருக்கும். பண வரவு தடைபட்டு, பொருளாதார நெருக்கடி உண்டாகும். பண கஷ்டம் நீங்க பகவான் மஹாவிஷ்ணுவிற்கு உகந்த வியாழக்கிழமை விரதத்தை மேற்கொள்ளலாம். வியாழக்கிழமை செய்யும் பரிகாரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும். இதன் மூலம் பணநெருக்கடி விலகி அபரிதமான பணவரவு உண்டாகும் என்பது நம்பிக்கை. மேலும் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய ஒரு சிறந்த விரதம் வியாழக்கிழமை விரதம். இந்த நாளில் விரதம் இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம். வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. வியாழக்கிழமை விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் கிடைத்து அனைத்து பிரச்சனைகளும் பனி போல் நீங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், வியாழன் செல்வ வளத்தை பெறுவதற்கும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அடைவதற்கும் ஆன பரிகாரங்களை செய்ய மிகவும் சிறப்பான நாள். வியாழன் உலகையே காத்து ரட்ஷிக்கும் விஷ்ணுவுக்கு உகந்த நாள். இந்த நாளில் விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் லட்சுமி தேவியும் மகிழ்ச்சி அடைகிறாள். பகவான் விஷ்ணு மற்றும் அன்னை லட்சுமியின் அருளால் வாழ்வில் உள்ள அனைத்து குறைகளும் நீங்கும். மேலும், அன்னை லட்சுமியின் அருளால், ஒருவருக்கு அபரிமிதமான பணமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். 


இந்து மதம் மற்றும் ஜோதிடத்தில், கூறப்பட்டுள்ள சில பரிகாரங்களை வியாழன் அன்று செய்வதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம். வியாழன் அன்று செய்யப்படும் இந்த பரிகாரங்கள் பகவான் விஷ்ணு மற்றும் அன்னை லட்சுமியின் ஆசீர்வாதத்தைத் பெற்று தருவதோடு மட்டுமல்லாமல், ஜாதகத்தில் குருவை பலப்படுத்துகின்றன. 


வியாழன் அன்று அதிகாலையில் ஸ்நானம் செய்துவிட்டு, விஷ்ணுவையும், அன்னை லட்சுமியையும் ஒன்றாக வழிபடுங்கள். இப்படிச் செய்வதால் கணவன்-மனைவிக்குள் இடைவெளி என்பதே இருக்காது. அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அனுபவிப்பார்கள். லக்ஷ்மியின் அருளால் செல்வமும் வந்து சேரும்.


மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் சிக்கப்போகும் ராசிகள் இவைதான்: இந்த பரிகாரங்கள் உதவும்


வியாழக்கிழமை அன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை:


வியாழன் அன்று குங்குமம், மஞ்சள் சந்தனம் அல்லது மஞ்சள் தானம் செய்யவும். அதோடு நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளவும். இதன் காரணமாக ஜாதகத்தில் வியாழன் வலுப்பெற்று சுப பலன்களைத் தரத் தொடங்குகிறார்.


வியாழன் தோஷம் நீங்க, வியாழன் அன்று குளிக்கும் நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்துக் குளிக்கவும். மேலும், குளிக்கும் போது, ​​'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். முடிந்தால் வியாழன் அன்று மஞ்சள் நிற ஆடைகளை அணியவும்.


வியாழன் அன்று யாருக்கும் கடன் கொடுக்கவோ, யாரிடமும் கடன் வாங்கவோ கூடாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். இதன் காரணமாக, ஜாதகத்தில் வியாழன் பலவீனமாகி, குறிப்பிட்ட நபர் நிதி சிக்கல்களை எதிர்கொள்ள் நேரிடும்.


வியாழன் அன்று விரதம் இருந்து வாழைக்கு நீர் ஊற்றவும். இதனால் திருமணத் தடைகள் நீங்கும். மறுபுறம், திருமணமானவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால், அவர்களின் திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. இந்த நாளில் பகவான் சத்தியநாராயணனரின் கதையைக் கேளுங்கள் அல்லது படியுங்கள்.


விஷ்ணுவை வழிபடும் போது, ​​அவருக்கு முன்னால் நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் பூக்களுடன் துளசியினால் அர்ர்சனை செய்து வழிபடவும். வியாழன் காலை, வீட்டின் பிரதான வாசலில் கோலம் இட்டு சிறிது வெல்லம் வைக்கவும். இவ்வாறு செய்வதால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும். பின்னர் பசுவிற்கும் உணவளிக்கவும்.


தானம் இல்லாமல் எந்த விரதமும் சடங்கும் நிறைவடையாது. வியாழன் அன்று உங்கள் சக்திக்கு ஏற்ப மஞ்சள் நிறத்தில் உள்ள பருப்பு, பழங்கள் போன்றவற்றை பிராமணர்களுக்கு தானம் செய்யுங்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Name Astrology: இந்த '5' எழுத்துகள் உங்கள் பெயரில் உள்ளதா? அப்போ அதிர்ஷ்டசாலி நீங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ