50 ஆண்டுக்கு பின் ராகு சுக்கிரன் உருவாக்கிய விபரீத ராஜயோகம்.. இந்த ராசிகளுக்கு பொன்னான காலம்
Venus Rahu Conjunction Makes Vipreet Rajyogam: வேத ஜோதிடத்தின் படி, தற்போது சுக்கிரன் கிரகம் விபரீத ராஜயோகத்தை உருவானது. இதன் காரணமாக எந்தெந்த ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று பார்ப்போம்.
Venus Rahu Conjunction Makes Vipreet Rajyogam: வேத ஜோதிடத்தின்படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு தனது இடத்தை மாற்றி பெயர்ச்சி அடையும், இது மனித வாழ்க்கையையும் பூமியையும் நேரடியாக பாதிக்கும். இதனால் சுப மற்றும் அசுப யோகங்களும் உருவாக்கும். அந்த வகையில் செல்வத்தை அள்ளித்தரும் சுக்கிரன் நேற்று அதாவது மார்ச் 31 ஆம் தேதி ராகுவின் அதிபதி ராசியான மீன ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் ஓய்ந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை விபரீத ராஜயோகத்தை உருவாகியுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஆனால் இந்த நேரத்தில் இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும். இந்த ராசிக்காரர்களின் செல்வ வளம் கூடும். எனவே இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்...
ரிஷபம் (Taurus Zodiac Sign): சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கையால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஏனெனில் உங்கள் ராசியிலிருந்து வருமானம் மற்றும் லாப ஸ்தானத்தில் இந்த சேர்க்கை நடந்துள்ளது. இதனால் இந்த நேரத்தில் வருமானத்தில் மிகப்பெரிய உயர்வை நீங்கள் காண்பீர்கள். மேலும், புதிய வழிகளில் பணத்தை சம்பாதிப்பீர்கள். அதே நேரத்தில், வியாபாரத்தில் அளவில்லா ஆதாயம் உண்டாகும். உங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். மண மகிழ்ச்சி பெருகும், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையால் குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீட்டின் மூலம் இரண்டு மடங்கு பயனடைவீர்கள். மேலும் பங்குச்சந்தை, பந்தயம் மற்றும் லாட்டரி போன்றவற்றிலிருந்து நல்ல லாபத்தை பெறலாம்.
மேலும் படிக்க | சூரிய கிரகணம் பலன்கள்: ஏப்ரல் 8 முதல் இந்த ராசிகளுக்கு பணவிரயம், கஷ்டங்கள் ஏற்படும்
மிதுனம் (Gemini Zodiac Sign): ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் உருவான விபரீத ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஏனெனில் உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தின் கர்ம வீட்டில் இந்த சேர்க்கை நடந்துள்ளது. எனவே, இந்த நேரத்தில் வேலை மற்றும் வியாபாரத்தின் மூலம் நல்ல லாபத்தையும் வெற்றியையும் பெறலாம். உங்கள் தொழிலில் ஏராளமான புதிய வாய்ப்புகளைப் பெறுவதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். வணிக வகுப்பைச் சேர்ந்தவர்கள் புதிய ஆர்டர்களைப் பெறலாம், இதன் மூலம் நல்ல லாபத்தை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம், அல்லது பதவி உயர்வைப் பெறலாம், இதனால் உங்களின் சம்பளத்திலும் உயர்வு இருக்கும்.
கடகம் (Cancer Zodiac Sign): ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை சேர்க்கையால் உருவான விபரீத ராஜயோகத்தால் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஏனெனில் உங்கள் ராசியிலிருந்து ஒன்பதாம் வீட்டில் இந்த சேர்க்கை நடந்துள்ளது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தை பெறலாம். உங்களது பதவி மற்றும் வருமானத்தில் அதிகளவு உயர்வை காணலாம். இதனால் சமூகத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் இன்னுமும் அதிகரிக்கும். குடும்பத்துடன் சொந்த ஊர் அல்லது வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பை பெறலாம். இதுவரை நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். மேலும், இந்த நேரம் மாணவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இதனால் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சுலபமாக வெற்றி பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சதுர்கிரஹி யோகம்... ஏப்ரலில் பட்டையை கிளப்பப் போகும் 5 ராசிகள் இவை தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ