Weekly Horoscope 8 To 14 July 2024: ஜூலை இரண்டாவது வாரம் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலைப்படி சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். அதேசமயம் கேது கன்னி ராசிக்கும், ராகு மீன ராசிக்கும், குரு ரிஷப ராசிக்கும் பயணித்து வருவதால் சுப பலன்கள் அதிகம் கிடைக்கும். அதேபோல் சனி கும்பத்தில் பயணித்து வருகிறார். சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இதனுடன் செவ்வாயும் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைவார். சிம்மம் மிதுன ராசியில் பயணிப்பார். அது மட்டுமின்றி இத்துடன் கடகத்தில் சுக்கிரனும் புதனும் சேர்க்கை புரிந்து லக்ஷ்மி நாராயண யோகத்தை உருவாகப் போகிறது. இதனுடன், ரிஷபத்தில் செவ்வாய் மற்றும் குரு இணையும். இந்நிலையில் இத்தகைய அரிதான நிகழ்வுகள் நடக்க உள்ள வரும் வாரத்தில் எந்தெந்த ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: வரும் வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். வீட்டில் இன்பம் பெருகும். காதல் வாழ்க்கையில் திருப்தி இருக்கலாம், கணவன் மனைவிக்கும் இடையே வலுவான உறவு இருக்கும். பல வாய்ப்புகள் பெறலாம். உத்தியோகத்தில் நல்ல நாட்கள் தொடங்கும்.


ரிஷபம்: வரும் வாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சவாலான வாரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் காவியமான இருக்க வேண்டும். வேலையில் சில சவால்களை எதிர்கொள்ளலாம். மிகுந்த போராட்டமாக இருக்கும். வாழ்க்கையில் சில சிரமங்கள் ஏற்படலாம்.


மேலும் படிக்க | நாளை சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்


மிதுனம்: வரும் வாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு பரிசு கிடைக்கும். கணவம் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், எனினும் பிரச்சனைகள்யில் இருந்து உடனடி தீர்வைப் பெறுவீர்கள். நிதி நிலை பராமரிப்பது முக்கியமாகும், செலவுகள் கூடலாம்.


கடகம்: கடக ராசிக்கு உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான சிறப்பாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, சுப காரியங்கள் நடக்கும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். லாப ஸ்தானத்தில் உருவாகும் பல ராஜ யோகங்களால் வேலை, தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.


சிம்மம்: சிம்ம ராசிகளுக்கு ஆதாயம் உண்டாகும். அனைத்து திட்டத்திலும் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டம் ஆதரவு கிடைக்கும். காதல் உறவில் அலட்சியம் கொள்ள வேண்டும். பேச்சின் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது நல்லது.


கன்னி: கன்னி ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய முடிவை எடுக்கும் முன் கவனம் கொள்ள வேண்டும். உடல்நிலை மோசமடையலாம். மரியாதை அதிகரிக்கும் மற்றும் துணையுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


துலாம்: துலாம் ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் பல மாற்றங்கள் காணப்படும். தற்போது நேரம் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உருவாகும். வாழ்க்கைத் துணையின் முன்னேற்றம் உங்களை மகிழ்விக்கும்.


விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களின் அன்பு மேம்படும். காதல் வாழ்க்கையில் திருபங்கள் ஏற்படும். இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான சூழல் நிலவும். காதலை வெளிப்படுத்த நினைப்பவர்களுக்கு சாதகமான காலமாக அமையும்.


தனுசு: பயணங்களால் பயனடைவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பணப்பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் லாபமடைவீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகள் மேம்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் உதவியை பெறுவீர்கள்.


மகரம்: உறவினர் மற்றும் நண்பர்களில் உதவியை பெறலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் கவனத்தை ஈர்ப்பீர்கள். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். தாயின் உடல் நிலை மோசமடையலாம். தன்னம்பிக்கை  துளிர்விடும்.


கும்பம்: இந்த வாரம் வெற்றி மழை வீசும். இலக்குகளை அடையும் போது, கணவத்துடன் செயல்படவும். 


மீனம்: மீன ராசிக்காரர்களே, இந்த வாரம் நிறைய பொறுப்புகளை பெறலாம். பெண் தோழி மூலம் உங்களின் வேலை விஷயத்தில் நிம்மதி ஏற்படும். காதல் உறவில் இருப்பவர்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான விஷயத்தில் உங்களின் முக்கிய முடிவு ஆதாயத்தை தரும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: தீபாவளி வரை இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ