இந்த வாரம் (மார்ச் 19 முதல் மார்ச் 25 வரை) உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் இந்த வார ஜாதகத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம் (மார்ச் 21 - ஏப். 19):


உங்களின் உடல் ஆற்றல் மற்றும் மனநிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.  உங்கள் பணி தொடர்பான புதிய அணுகுமுறையை நீங்கள் விரைவில் காணலாம், இந்த புதிய முயற்சியால் சிறந்த முறையில் உங்களுக்கு லாபம் கிடைக்கப்பெறும்.  சரியான பரிந்துரைகள் மூலம் உங்களுக்கு பெரிய இடங்களிலிருந்து வேலை வாய்ப்புகள் வரலாம்.  உங்கள் துணைக்கோ அல்லது உங்களை சார்நதவர்களுக்கோ அவர்களது கருத்துக்களை தெரிவிக்க விடுங்கள், அவர்களுக்கு போதுமான இடத்தை கொடுங்கள் மற்றும் அவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள்.


ரிஷபம் (ஏப். 20- மே 20):


பிஸியான நாட்கள் தான் என்றாலும் நீங்கள் நினைக்கும் விஷயங்கள் எல்லாம் சிறப்பாகவும் வேகமாகவும் நடந்தேறும்.  ஏதேனும் பயணம் செய்யவோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வை நடத்தவோ நீங்கள் திட்டமிடலாம், இந்த காலத்தில் நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும், இது உங்களுக்கு பெரியளவில் நன்மதிப்பை கொடுக்கும்.  பண விவகாரங்கள் மற்றும் பத்திரங்கள் மூலம் உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.  தொழிலை மாற்ற அல்லது புதிய வணிகத்தைத் தொடங்க விரும்புபவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.  மற்றவர்களுக்கு உதவுவதால், சேவை செய்தும் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.  ஆரோக்கியம் மேம்படும் மற்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள்.


மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!


மிதுனம் (மே21- ஜூன் 20):


நெருங்கியவர்களின் விவகாரங்களே உங்களுக்கு முன்னிலையில் இருக்கும்.  உங்கள் குடும்ப உறுப்பினர் மற்றும் அனைத்து உறவினர்களையும் ஒரு நல்ல நிகழ்ச்சியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.  வீட்டுப் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்புக்கான திட்டங்கள் தொடங்கலாம் அல்லது வேறொரு வீட்டிற்கு மாற்றுவது பற்றி நீங்கள் யோசிக்கலாம்.  வேலையில், நீண்ட காலமாக இருந்து வந்த வாக்குவாதம் அல்லது தகராறு இப்போது தீர்க்கப்படும், இல்லையென்றால் நீங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக சென்றுவிடுவது நல்லது.  வரவிருக்கும் வாரங்களில் உங்களுக்கு பண ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டு.


கடகம் (ஜூன் 21-ஜூலை 22):


இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பல சோதனைகள் காத்திருக்கிறது, சில எதிர்பாராத நிகழ்வுகளால் உங்களுக்கு அழுத்தம் அதிகரிக்கும்.  எவ்வளவுதான் உங்களுக்கு அழுத்தம் ஏற்பட்டாலும் அது தற்காலிகமானது தான் என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.  நீங்கள் பதட்டம் மற்றும் அமைதியில்லாமல் காணப்படுவதால் உங்கள் உடலின் ஆற்றல் சீராக இருக்காது.  சிலரின் நியாயமற்ற நடத்தை உங்களுக்கு தொந்தரவை கொடுக்க வாய்ப்புள்ளது என்பதால் அவர்களிடம் இருந்து நீங்கள் தள்ளியிருப்பது நல்லது.  


சிம்மம் (ஜூலை 23- ஆகஸ்ட் 22):


எல்லாவற்றையும் நீங்களே செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், அல்லது உங்களால் ஒரு விஷயத்தை கையாள முடியும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.  இந்த காலம் உங்களுக்கு நிம்மதியை தரும், நீங்கள் நினைத்த பெரிய காரியங்கள் நிறைவேறும். கையாளக்கூடியதை விட அதிகமாக எடுத்துக் கொண்டால், இந்த வாரம் நிம்மதியைத் தரும். ஒருவேளை ஒரு  உங்கள் நலனை விரும்புபவர்களிடம் இருந்து நீங்கள் ஆலோசனைகளை பெறலாம், உங்களுக்குத் தேவைப்படும்போது பிறரிடம் தயங்காமல் உதவி கேட்கலாம்.  உங்கள் வீட்டை அலங்கரிக்கும் வேலையில் நீங்கள் ஈடுபடலாம், அதேசமயம் எதிர்பாராத செலவுகள் வரக்கூடும் என்பதால் அதிக செலவு செய்யாமல் கவனமாக இருப்பது நல்லது.


கன்னி (ஆகஸ்ட் 23- செப்டம்பர் 22):


சந்தேகம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் எதுவும் இல்லாமல் நீங்கள் இருந்தால் நிம்மதியாக இருக்கலாம்,  சோதனையான காலங்களில் கூட நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.  நீங்கள் மன அழுத்தத்தால் முடங்கிவிடாமல் சவால்களை ஏற்று ஜெயித்த காட்ட வேண்டிய நேரமிது.  உறவுகள் பழையதாகவும், கணிக்கக்கூடியதாகவும் உணரலாம் அல்லது அதே பழைய முகங்கள் மற்றும் உரையாடல்களால் நீங்கள் சலிப்படையலாம்.  உண்பதிலும், குடிப்பதிலும் அளவாக இருக்க வேண்டும், இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


மேலும் படிக்க | செவ்வாயின் அருளால் உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க போகும் ‘சில’ ராசிகள்!


துலாம் (செப்டம்பர் 23- அக்டோபர் 22):


சிலர் உங்களிடம் உண்மையை மறைக்கலாம், உங்களிடம் விளையாடலாம் எனவே நீங்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பது நல்லது.  எந்த விஷயம் கேட்டாலும் அதன் உண்மைத்தன்மையை முதலில் கண்டறியுங்கள், அரசியல்வாதிகளாக இருந்தால் உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் சரியான மற்றும் நெறிமுறைகளை செய்ய வேண்டிய நேரம் இது.  தாமதங்கள் உங்களை தற்காலிகமாக விரக்தியடையச் செய்யலாம், பொய் கூறுவதால் உறவில் சில சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.  உங்கள் தொழில்நுட்ப சாதனங்களை மேம்படுத்த இது சிறப்பான நேரமாக கருதப்படுகிறது.


விருச்சிகம் (அக் 23- நவம்பர் 21):


நீங்கள் தொழில் ரீதியாக முன்னேறி வர வாய்ப்புள்ளது, சில சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களுடன் உங்களுக்கு பழக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.  அந்த செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியை பெற நீங்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டியது அவசியம்.  உங்கள் மனம் கூர்மையாகவும், அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகவும் இருப்பதால், இந்த கட்டத்தில் வணிகங்கள் விரிவடையும் சாத்தியம் உள்ளது.  புதிய முயற்சிகள் மற்றும் உங்கள் பழைய வணிக நடைமுறைகளைப் புதுப்பிப்பதால் உங்களுக்கு சிறந்த ஆதாயம் கிடைக்கும். 


தனுசு (நவம்பர் 22- டிசம்பர் 21):


ஏதேனும் கூட்டங்களில் கலந்துகொள்வது அல்லது குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என கொஞ்சம் பிசியாக காணப்படுவீர்கள்.  உண்மைகள் தெளிவாகும் வரை உங்கள் கருத்தைக் கேட்டால் அமைதியாக இருக்க நீங்கள் முயலுங்கள் அல்லது எவ்வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் இருங்கள்.  உங்களை யாரேனும் கோபப்படுத்தினால் நீங்கள் அவர்களிடம் அமைதியாகவே இருங்கள்.  அமைதியான முறையில் நீங்கள் வேறு திசையில் உங்கள் சிந்தனைகளை திருப்புவது நல்லது.  ஒரு எதிர்பாராத அழைப்பு உங்களை நீண்ட நேரம் யோசிக்க வைக்கும். மனக்கிளர்ச்சியை கவனத்தில் கொள்ளுங்கள்.


மகரம் (டிசம்பர் 22-ஜனவரி 19): 


எல்லா விஷயத்திலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது, வேலையில் கவனக்குறைவுடன் இல்லாமல் அனைத்தயும் கவனமாக கையாள வேண்டும்.  உயர்கல்விக்குத் தயாராகும் மாணவர்கள், கவனச்சிதறல் அடையாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும், நீங்கள் உண்மையிலேயே கவனம் செலுத்துவதன் மூலம் இந்த காலகட்டத்தில் பெரும் முன்னேற்றத்தை அடைய முடியும்.  எங்காவது பயணம் செய்ய நீங்கள் திட்டமிடுவீர்கள், சில சமயங்களில் அதில் திடீரென்று மாற்றம் ஏற்படலாம்.  மற்றவர்களுக்கு வழிநடத்தவும் இயக்கவும் வாய்ப்பளிக்கவும்.


கும்பம் (ஜனவரி 20- பிப்ரவரி 18):


நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்பதை நீங்கள் நம்புங்கள் அப்போது தான் உங்களுக்கு பாதுகாப்பு உணர்வு வரும்.  பெரிய நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் பணி வெற்றிகரமாக முடிவடையும். தனிமையில் இருப்பவர்களுக்கு சில திருமண ப்ரோபோசல்கள் வர வாய்ப்புள்ளது, ஆனால் உங்கள் இதயம் கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவரிடமே இருக்கலாம். 


மீனம் (பிப். 19-மார்ச் 20):


சில சூழ்நிலைகள், மனப்பான்மைகள் உங்களை வாழ்க்கையின் பிடியில் சிக்கவைத்துவிட்டதாக உணர செய்யலாம்.  ஆனால் இது தற்காலிகமானது மட்டுமே என்பதை நீங்கள் நம்புங்கள், நீங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ்வதில் இருந்து உங்களைத் தடுப்பது எது என்பதைக் கண்டறிந்து, நீங்கள் விரும்பும் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளைத் தொடங்குங்கள்.  உங்களிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கத்தை நீங்கள் இந்த சமயத்தில் கைவிட வேண்டும்.  உங்கள் நீண்ட கால முதலீடுகளைத் திட்டமிட அல்லது உங்கள் தொழில் இலக்குகளைப் பற்றி சிந்திக்க இது ஒரு நல்ல நேரம்.


மேலும் படிக்க | சரஸ்வதி அருளால் கல்வியில் ஜொலிக்கப்போகும் 2 ராசிகள்..! அரசுப் பணி காத்திருக்கிறது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ