Feb 5-11 Horoscope: நாளும் கோளும் சொல்லும் அறிகுறிகளை புரிந்துக் கொண்டால் வெற்றி உங்களுக்கே!

Weekly Horoscope Feb 5-11: எதிர்காலம் நமக்கு சாதகமாக அமையுமா என்பதை தெரிந்துக் கொள்ள அனைவருக்குமே ஆவலாக இருக்கும், அதற்கு, அடுத்த வாரம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...
திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றியான வாழ்க்கை கைகூடும். வரவிருக்கும் நேரத்தைப் பற்றிய தெளிவு இருந்தால், உங்கள் எதிர்காலத்தைத் திட்டமிடுவதில் வெற்றி பெறலாம். எதிர்காலம் நமக்கு சாதகமாக அமையுமா என்பதை தெரிந்துக் கொள்ள அனைவருக்குமே ஆவலாக இருக்கும், அதற்கு, அடுத்த வாரம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...
பிப்ரவரி ஐந்து முதல் 11ம் தேதி வரையிலான வார ராசிபலன்கள்
மேஷம்
வியாபாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். சொத்து மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். எண்ணங்கள் ஈடேறும் என்றாலும், கால்களில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்
மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும், ஆனால் வர்த்தகப் பணிகளில் கவனம் வேண்டும். பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் சார்ந்த பயணங்களின் மூலம் அனுபவம் மேம்படும். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். தந்தைவழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள்.
மிதுனம்
கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். மிதுன ராசிக்காரர்கள் மனதில் வித்தியாசமான சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத தனவரவுகள் உண்டு. உற்பத்தி சார்ந்த துறைகளில் ஈடுபட்டவர்களுக்கு கவனம் அவசியம். சிக்கனமாக செயல்படவும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.
கடகம்
பணிகளில் மாற்றம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தும் நேரம் இது. கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும் என்றாலும், இறை சார்ந்த சிந்தனை ஏற்படும். மற்றவர்களிடம் சொந்த விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும்.
சிம்மம்
எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும், உங்களுடைய பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். முகத்தில் பொலிவு மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது.
மேலும் படிக்க | 500 ஆண்டுக்கு பின் உருவான கேதார ராஜயோகம், 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்
கன்னி
சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். அனைவரிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய அனுபவம் ஏற்படும். தேவையில்லாத விவாதங்களை குறைத்துக் கொண்டால் நிம்மதி கிடைக்கும்.
துலாம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும், பயணங்களால் மாற்றம் ஏற்படும். நெருங்கியவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சில இடமாற்றங்கள் சாதகமாகும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் உண்டு.
விருச்சிகம்
லைத்துறைகளில் திறமைகள் வெளிப்படும். நுட்பமான விஷயங்களை புரிந்துக் கொள்வதில் இருந்த குழப்பம் விலகும். உடன் இருப்பவர்கள் உதவியால் அனுகூலம் ஏற்படும்.
தனுசு
எதிர்பாராத நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புரிதல் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
மகரம்
உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். தொழில் மற்றும் பணியிடத்தில் கவனமாக நடந்துக் கொள்ளவும். சமூகப் பணிகளில் அலைச்சல் உண்டாகும், பொறுப்புகள் அதிகரிக்கும்.
கும்பம்
மனஅமைதி குறையும், பயணங்களால் அலைச்சல் உண்டாகும். சிந்தித்துச் செயல்படவும். செயல்பாடுகளில் சிறு சிறு தாமதங்கள் உண்டாகும் என்றாலும் எல்லா விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும்.
மீனம்
நன்மதிப்பு பெறும் காலம் இது. கலைத்துறைகளில் ஆர்வம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஆதாயம் கிடைக்கும். ஆலய திருப்பணிகளில் ஆர்வம் உண்டானாலும், கோவிலுக்கு போவதில் விருப்பம் இருக்காது.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன கவலை தீரும்? பிரச்சனைகளை தீர்க்கும் வழிபாடுகள்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ