சுக்கிரன் மற்றும் சூரியனின் இணைவு: சுக்கிரனும், சூரியனும் ஒரே ராசியில் இணைந்து இருப்பது என்பது அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் அன்பு, அழகு மற்றும் கலைத்திறன் ஆகியவற்றை அருள்பவர் என்றால், சூரியன் ஆன்மா, தந்தை மற்றும் பல முக்கியமன விஷயங்களுக்கு காரணகர்த்தா. எனவே, இரண்டு கிரகங்களும் இணையும்போது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு தாக்கங்கள்ஏற்படுகின்றன. சிம்ம ராசியில் இருக்கும் சூரியன் மற்றும் சுக்கிரனின் இணைப்பு பொதுவாக சில தாக்கங்களை ஏற்படுத்தும். சூரியன் - சுக்கிரன் இணைவதால் பரஸ்பர புரிதல் குறைபாடு ஏற்படலாம். இது தவிர, வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளில் ஏற்ற தாழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூரியன்-சுக்கிரன் சேர்க்கை வாழ்க்கையில் சவால்களை எவ்வாறு வெல்வது என்பதை கற்றுக் கொடுக்கும் என்பதோடு,  நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உறவை வலுப்படுத்த ஈகோவை விலக்கி வைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை புரிய வைக்கும்.


மேலும் படிக்க | அனந்த சதுர்தசி விரதத்தின் நதிமூலம் ரிஷிமூலம் மற்றும் பலன்கள்


கன்னி ராசியில் சூரியன்-சுக்கிரன் கிரகங்களின் சேர்க்கை ஏற்படுவது 12 ராசியினருக்கும் விதவிதமான பலன்களைக் கொடுக்கும். செப்டம்பர் மாதத்தில் பல கிரகங்கள் கன்னி ராசியில் மாறுகின்றன. புதன் கிரகம் கன்னியில் வக்ர கதியில் நகர்கிறது. அதைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு சூரியன் மற்றும் சுக்கிரனின் இணைவு கன்னி ராசியில் உருவாக உள்ளது. கன்னி ராசியில் புதன், சூரியன், சுக்கிரன் இணைவதால் சிலருக்கு நன்மையும் சிலருக்கு நஷ்டமும் ஏற்படும்.


செப்டம்பர் மாதம் கன்னி ராசியில் ஏற்படும் மாற்றங்கள்
செப்டம்பர் 10ஆம் நாளன்று, புதன் கன்னியில் வக்ர கதியில் மாறியுள்ளார்.புதன் தனது சொந்த ராசியில் வக்ர கதியில் செல்வது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது. செப்டம்பர் 17-ம் தேதி சூரியபகவான் கன்னி ராசிக்குள் நுழைகிறார். செப்டம்பர் 24-ம் தேதி,  சுக்கிரன் கன்னி ராசியில் பிரவேசிக்கிறார்.


சுப கிரகங்களான சூரியன் மற்றும் சுக்கிரன் இரண்டும் எந்த ராசியிலும் இணைந்தால், அவை அசுப பலன்களைத் தருகின்றன. குறிப்பாக திருமண வாழ்க்கை அதிகம் பாதிக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் சூரியனுக்கு அருகில் வரும்போதெல்லாம், அந்த கிரகத்தின் தாக்கம் பலவீனமாகும். சூரியனுடன் சுக்கிரன் இணைவதால் சுக்கிரனின் சுப பலன்கள் குறையும். இதனை சுக்கிரன் - சூரியன் இணைவது யுதி யோகம் எனப்படும்.


மேலும் படிக்க | Ganesh Chaturthi: கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு; இது விநாயகரின் சதுர்த்தி திருநாள் 
 
சூரியன்-சுக்கிரன் இணைவதால் 12 ராசிகளால் ஏற்படும் பலன்கள்


மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன் - சுக்கிரன் கிரகங்களின் சேர்க்கை சுபமாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும்.


ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். சூரியன் - சுக்கிரன் கிரகங்களின் சேர்க்கை எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.


மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியன் - சுக்கிரன் இணைவு சாதகமாக அமையும். மிதுனம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். எங்கிருந்தோ திடீர் பண ஆதாயம் கிடைக்கும்


கடகம்: கௌரவம் கூடும் நேரம் இது. இந்த காலகட்டத்தில் அறிமுகமாகும் நபர்களால், எதிர்காலத்தில் நன்மைகள் ஏற்படும்.
 
சிம்மம்: சூரியன் - சுக்கிரன் இணைவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். அரசு வேலைக்கு சாதகமான காலம் அமையும். பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகும், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் ஏற்படலாம்.


மேலும் படிக்க | Vinayagar Chaturthi 2022: விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்ல கவிதைகள்! 


கன்னி: லாபமான காலம் இது. வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணம் சாத்தியம், ஆனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம்.


துலாம்: சூரியன் சுக்கிரன் சேர்க்கை துலாம் ராசியினருக்கு கலவையான பலன்களைக் கொடுக்கும். வேலை செய்பவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும்.


விருச்சிகம்: எதிரிகள் உங்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவார்கள். நன்றாக சென்றுக் கொண்டிருந்த வேலை, திடீரென்று கெடத் தொடங்கும். பண இழப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
 
தனுசு: மகிழ்ச்சியான காலகட்டத்தை கொடுக்கும் சுக்கிரன் சூரியன் சேர்க்கை இது. தனுசு ராசிக்கு நெருக்கடியான காலம் முடிவுக்கு வரவுள்ளது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்.


மகரம்: திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும். வாக்குவாதங்கள் எழலாம். பண இழப்புக்கான அறிகுறிகள் இருப்பதால் கவனமாக இருக்கும்.


கும்பம்: உங்கள் பணியில் முன்னேற்றம் ஏற்படும். சட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல சலுகைகள் கிடைக்கும்.


மீனம்: சூரியன் - சுக்கிரன் இணைவு உங்களுக்கு விரும்பிய பலன்களைத் தரும். பல நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.


மேலும் படிக்க | பணத்தை அள்ளிக் கொடுக்கும் அஞ்சலறைப் பொருள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ