சுக்கிரன் பெயர்ச்சி... ஏப்ரலில் சில ராசிகளுக்கு சிக்கல்கள் நெருக்கடிகள்.. எச்சரிக்கையா இருங்க!
Sukran Peyarchi Palangal: ஆடம்பர வாழ்க்கை, பேச்சாற்றல், அறிவாற்றல், உலக இன்பம், அழகு, பணம், செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள சுக்கிரன் மார்ச் மாதம் 31ம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.
Venus Transit Effects: அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் கிரகமான சுக்கிரன் மீன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். இதனால் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சுக்கிரன் ராகு மற்றும் சூரியனுடன் இணைவார். மார்ச் மாதம் 31ஆம் தேதி, சுக்கிரன் மீன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ள நிலையில், ராகவும் சூரியனும் ஏற்கனவே அங்கு இருப்பதால், மூன்று கிரகங்களும் இணைந்து த்ரிகிரஹி யோகம் உருவாகிறது. கிரகப் பெயர்ச்சிகளாலும், அதனால் ஏற்படும் கிரக சேர்க்கைகள் மற்றும் யோகங்களால், சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுப பலன்களும் உருவாகும். இந்நிலையில், சுக்கிரன் பெயர்ச்சி சில ராசிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால், சில ராசிகளுக்கு, ஏப்ரல் மாதம் பிரச்சனை மிகுந்த மாதமாக இருக்கும் என்று ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
சுக்கிரன் பயிற்சி காரணமாக ஏற்படும் ரிஷப ராசிக்கு (Taurus Zodiac Sign) பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். குழந்தைகள் தரப்பிலிருந்து சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். கவனக் குறைவு காரணமாக, அலுவலகத்தில் பிரச்சனையை சந்திக்க நேரிடலாம். எனவே கவனமாக இருக்கவும். முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்தி போடவும். வேலைப்பளு அதிகம் இருக்கும். இதனால் மன அழுத்தம் ஏற்படலாம்.
மிதுன ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
சுக்கிரன் பெயர்ச்சியினால் மீன ராசியில் உருவாகும் த்ரிகிரஹி யோகம் காரணமாக, (Gemini Zodiac Sign) வேலையில் வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். மன அழுத்தம் மற்றும் கவலை உடல் நலத்தை பாதிக்கலாம். நிதி இழப்பு காரணமாக மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் இணக்கம் பாதிக்கப்படும். உங்கள் உடல் நலத்திலும் குடும்பத்தினரின் உடல் நலத்திலும் கவனம் தேவை.
மேலும் படிக்க | பணம் வந்து கொட்டோ கொட்டனும்னு கொட்டனுமா? இந்த விஷயங்களை செய்துப் பாருங்க...
தனுசு ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
சுக்கிரன் பெயர்ச்சியினால் ஏற்படும் த்ரிகிரஹி யோகம், தனுசு ராசிக்கு (Sagittarius Zodiac Sign) சாதகமாக இருக்காது. வேலையில் பிரச்சனைகள் ஏற்படலாம். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். நிதி இழப்பு ஏற்படலாம். முதலீடு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் வேலைகளில் சில தடைகளை சந்திக்க நேரிடும்.
கும்ப ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
கும்ப ராசியினரை (Aquarius Zodiac Sign) பொறுத்தவரை சுக்கிரன் பயிற்சி காரணமாக ஏப்ரல் மாதம் சுமாரான மாதமாகவே இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டும். உள்ளவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு இதனால் மனக்கவலை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் சச்சரவுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. இல்லையென்றால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவசர கால முடிவுகளை தவிர்த்து, நன்றாக கலந்து ஆலோசனை செய்த பிறகு முடிவுகளை எடுக்கவும். இதனால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | 64 கலைகளும் கூடி சந்திரன் காட்சியளிக்கும் முழுநிலவு நாள் பங்குனி உத்திரமும் திருக்கல்யாணங்களும்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ