2025 சாம்பியன்ஸ் டிராபி எங்கு நடக்கும்? ஐசிசி எடுத்த முக்கிய முடிவு!
2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்று தெரிவித்துள்ள நிலையில், அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஐசிசி அவசரக் கூட்டத்தை நவம்பர் 26 அன்று நடத்த உள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி இந்த முறை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் செய்யாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பதட்டமான அரசியல் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் வேறு இடத்தில் மாற்றலாமா என்ற பேச்சு வார்த்தை எழுந்த நிலையில் பாகிஸ்தானில் தான் அனைத்து போட்டிகளையும் நடத்த வேண்டும் என்று பிசிபி தெரிவித்தது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் உள்ளது.
மேலும் படிக்க | IND vs AUS: ஆஸ்திரேலியாவில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் செய்துள்ள சரித்திர சாதனை!
ஐசிசி அவரச கூட்டம்
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நவம்பர் 26 ஆம் தேதி இந்த பிரச்சனை பற்றி பேச அவசர கூட்டத்தை கூட்டி உள்ளது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உட்பட சாம்பியன்ஸ் ட்ராபியில் பங்கேற்கும் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்திருந்தது, ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்லவில்லை. இரண்டு அணிகளும் ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். வேறு எந்த இரு தரப்பு தொடர்களிலும் விளையாடுவதில்லை.
26 ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை மட்டும் வேறு இடத்தில் நடத்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் இதற்கு ஆரம்பத்திலிருந்து கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. மேலும் ஐசிசி ஒருதலை பச்சைமாக செயல்படாமல் அனைத்து போட்டிகளையும் பாகிஸ்தானில் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறது. இந்திய அணி விளையாடும் போட்டிகளை மட்டும் நடுநிலையான இடத்தில் வைத்தால் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளை எங்கு நடத்துவது மற்றும் முழு போட்டிகளையும் பாகிஸ்தானில் இருந்து வேறு எந்த நாட்டிற்கு மாற்றினால் அதற்கான சாத்திய கூறுகள் என்ன என்பதையும் கூட்டத்தில் ஐசிசி விவாதிக்க உள்ளது.
ஒருவேளை பாகிஸ்தானில் இருந்து போட்டிகளை மாற்றம் செய்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையின் பிசிபி சுற்றுப்பயணத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இடம் பெற்றிருந்தது. இதற்கு பிசிசிஐ கடுமை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த இடத்தை தற்போது பாகிஸ்தான் மாற்றி உள்ளது. ஜனவரி 15 முதல் 26 வரை சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இந்தியா முழுவதும் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஜனவரி 27ம் தேதி மீண்டும் பாகிஸ்தானுக்கு கோப்பை அனுப்பப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ