2023ம் ஆண்டு துரோணாச்சார்யா விருது மற்றும் அர்ஜுனா விருது பெறும் விளையாட்டு வீரர்கள்
National Sports Awards 2023: 2023-ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது உள்ளிட்ட விருதுகளைப் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியல்
புதுடெல்லி: 2023-ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது உள்ளிட்ட விருதுகளைப் பெறும் விளையாட்டு வீரர்களின் விவரங்கள் இன்று (டிச.20) மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. அதில் இந்தாண்டுக்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது பாட்மிண்டன் வீரர்களான சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.வைஷாலி, முகமது ஷமி உள்ளிட்ட 26 வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளன. விளையாட்டுத் துறை பயிற்சியாளர்கள் ஆர்.பி.ரமேஷ், லலித் குமார், மஹாவீர் பிரசாத், சிவேந்திர சிங் மற்றும் கணேஷ் பிரபாகர் ஆகிய ஐந்து பேருக்கு துரோணாச்சார்யா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் மூன்று பயிற்சியாளர்களுக்கும், தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் மஞ்சுஷா கன்வார், வினீத் குமார் ஷர்மா மற்றும் கவிதா செல்வராஜ் ஆகிய மூன்று வீரர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விளையாட்டுத் துறைக்கான விருதுகள் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி டெல்லியில் வழங்கப்படும்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தேசிய விளையாட்டு விருதுகளை வழங்குவார்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2024: எந்த பிளேயர் எந்த அணியில் இருக்கிறார்? 10 அணிகளின் முழு விவரம்
அர்ஜுனா விருதுகள் 2023
Ojas Pravin Deotale - வில்வித்தை
அதிதி கோபிசந்த் சுவாமி - வில்வித்தை
ஸ்ரீசங்கர் எம் - தடகளம்
பருல் சவுத்ரி - தடகளம்
முகமது ஹுசாமுதீன் - குத்துச்சண்டை
ஆர் வைஷாலி - செஸ்
முகமது ஷமி - கிரிக்கெட்
அனுஷ் அகர்வாலா - குதிரையேற்றம்
திவ்யகிருதி சிங் - குதிரையேற்றம்
திக்ஷா டாகர் - கோல்ஃப்
கிரிஷன் பகதூர் பதக் - ஹாக்கி
புக்ரம்பம் சுசீலா சானு - ஹாக்கி
பவன் குமார் - கபடி
ரிது நேகி - கபடி
நஸ்ரீன் - கோ-கோ
பிங்கி - புல்வெளி கிண்ணங்கள்
ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் - படப்பிடிப்பு
ஈஷா சிங் - படப்பிடிப்பு
ஹரிந்தர் பால் சிங் சந்து - ஸ்குவாஷ்
அய்ஹிகா முகர்ஜி - டேபிள் டென்னிஸ்
சுனில் குமார் - மல்யுத்தம்
அண்டிம் (Antim) - மல்யுத்தம்
நௌரெம் ரோஷிபினா தேவி - வுஷு
ஷீத்தல் தேவி - பாரா வில்வித்தை
இல்லூரி அஜய் குமார் ரெட்டி - பார்வையற்ற கிரிக்கெட்
பிராச்சி யாதவ் - பாரா கேனோயிங்
மேலும் படிக்க | அடுத்த தோனி, 10 கோடி கொடுக்கவும் தயாராக இருந்த கங்குலி - யார் இந்த குமார் குஷாக்ரா?
துரோணாச்சார்யா விருது 2023
லலித் குமார் - மல்யுத்தம்
ஆர்.பி.ரமேஷ் - செஸ்
மஹாவீர் பிரசாத் சைனி - பாரா தடகளம்
சிவேந்திர சிங் - ஹாக்கி
கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர் - மல்லகாம்ப்
வாழ்நாள் விருதுகள்
ஜஸ்கிரத் சிங் கிரேவால் - கோல்ஃப்
பாஸ்கரன் இ - கபடி
ஜெயந்த குமார் புஷிலால் - டேபிள் டென்னிஸ்
வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தயான் சந்த் விருது 2023:
மஞ்சுஷா கன்வார் - பேட்மிண்டன்
வினீத் குமார் சர்மா - ஹாக்கி
கவிதா செல்வராஜ் - கபடி
மௌலானா அபுல் கலாம் ஆசாத் (MAKA) டிராபி 2023
குருநானக் தேவ் பல்கலைக்கழகம், அமிர்தசரஸ் - ஒட்டுமொத்த வெற்றியாளர் பல்கலைக்கழகம்
லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டி, பஞ்சாப் - 1வது ரன்னர் அப் பல்கலைக்கழகம்
குருக்ஷேத்ரா பல்கலைக்கழகம், குருக்ஷேத்ரா - 2வது ரன்னர் அப் பல்கலைக்கழகம்
மேலும் படிக்க | IPL 2024 auction: இந்த சீசனில் தோனிக்கு பதில் விக்கெட் கீப்பிங் செய்யப்போவது இவரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ